கெச்சு ஆறு (Kech River, பலூச்சி மொழி :كݔچ كؤر) தென்கிழக்கு ஈரானின் மக்ரான் பகுதியிலும், தென்மேற்கு பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியிலும் பாய்கிறது.

நிலவியல்

தொகு

தாஷ்ட் ஆற்றின் துணை ஆறான கெச்சு ஒரு பருவகால ஆறாகும். தாஷ்ட் தென்கிழக்கில் பலுசிஸ்தானின் குவாடர் மாவட்டத்தில் உள்ள மத்திய மக்ரான் மலைத்தொடரிலும், ஓமன் வளைகுடாவில் உள்ள முகத்துவாரம் வழியே அரபிக்கடலில் கலக்கிறது.

பயன்பாடு

தொகு

கெச்சு ஆறு டர்பட் நகரம் வழியாகப் பாய்கிறது. இற்த ஆற்றின் நீர் பழத்தோட்டங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கும் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறி விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.[1]

வெள்ளம்

தொகு

மழைகாலங்களில் கெச் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. ஜூன் 2007 இல், ஏற்பட்ட வெள்ளம் டர்பட் நகருக்குள் நுழைந்ததால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.வெள்ளப்பெருக்கு காரணமாக தாஷ்ட் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிரானி அணை ஆபத்தில் உள்ளது.[2]

தொல்லியல்

தொகு

கெச்சு ஆற்றுப் பள்ளத்தாக்கில் கிமு ஐந்தாம் ஆயிரமாண்டின் முற்பகுதியில் வரலாற்று காலங்களில் கெச்சு- மக்ரான் கலாச்சாரம் செழித்து வளர்ந்தது. இந்த பகுதியில் பாலகோட், மக்ரான் உட்பட ஏராளமான குடியிருப்புகள் இருந்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெச்சு_ஆறு&oldid=3818778" இலிருந்து மீள்விக்கப்பட்டது