கெம்பே கவுடா பேருந்து நிலையம்


கெம்பே கவுடா பேருந்து நிலையம் ஆனது கருநாடகம் மாநிலம், பெங்களூர் நகரில் உள்ள ஒரு பேருந்து நிலையம் ஆகும். இந்த பேருந்து நிலையம் எதிரே பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு மெஜஸ்டிக் என மற்றொரு பெயரும் உள்ளது. இந்த பேருந்து நிலையம் பெங்களூர் நகரின் மையப்பகுதியில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் பெங்களூர் மெட்ரோ போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

கெம்பே கவுடா பேருந்து நிலையம்
கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் பெங்களூர் மெட்ரோ போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்மெஜஸ்டிக்
அமைவிடம்காந்தி நகர், பெங்களூர்
கருநாடகம்
இந்தியா
பேருந்து இயக்குபவர்கள்கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் பெங்களூர் மெட்ரோ போக்குவரத்துக் கழகம்
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1980
பயணிகள்
பயணிகள் 800,000

பெயர்க் காரணம்

தொகு

முதல்வர் ரா. குண்டு ராவால் இந்த பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்திற்கு மெஜஸ்டிக் என மற்றொரு பெயரும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் பெங்களூர் நகரில் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். பெங்களூர் நகரத்தை நிறுவிய கெம்பே கவுடாவின் நினைவாக இந்தப் பேருந்து நிலையத்திற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வரலாறு

தொகு

1960களில் கெம்பே கவுடா பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. தர்மம்பூடி ஏரி அமைந்த இடத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த ஏரியானது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வறட்சியானது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "கெம்பே கவுடா பேருந்து நிலைய வரலாறு".