கெயில் ஓம்வேதித்

கெயில் ஓம்வேதித் (Gail Omvedt, 2 ஆகத்து 1941 – 25 ஆகத்து 2021) என்பவர் ஒரு சமூகவியல் அறிஞரும் மனித உரிமைகளுக்குப் பாடுபடும் செயற்பாட்டாளரும், சாதிய அமைப்பை எதிர்த்துப் பரப்புரை செய்பவரும் ஆவார். இவர் அமெரிக்காவில் பிறந்து இந்தியாவில் குடியுரிமை பெற்ற பெண்மணி ஆவார்.

கெயில் ஓம்வேதித்
பிறப்பு(1941-08-02)2 ஆகத்து 1941
மினியாப்பொலிஸ், U.S.
இறப்பு (2024-12-22UTC20:54:47) (அகவை 0)
தொழில்எழுத்தாளர், கட்டுரையாளார், செயற்பாட்டாளர்
கல்வி நிலையம்Carleton College
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
காலம்1970–2021
துணைவர்பாரத் பதங்கர்

பிறப்பும் கல்வியும்

தொகு

கெயில் ஒம்வேதித் அமெரிக்காவில் மின்னபாலிசு என்னும் ஊரில் பிறந்தார். கார்ல்டன் கல்லூரியில் படித்தார். பெர்கிளின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் குமுகவியலில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.

பணிகள்

தொகு

1978 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார். தெற்கு மகாராட்டிரத்தில் கசேகான் என்னும் சிற்றுரில் வாழ்ந்து வருகிறார். 1983 முதல் இந்தியாவில் குடியுரிமை பெற்றார். சாதிய அமைப்பை எதிர்த்தும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் உரிமைகளுக்காகப் பல நூல்களை எழுதினார். பெண்கள் உரிமை இயக்கம் சூழல் பாதுகாப்பு இயக்கம் விவசாயிகள் இயக்கம் ஆகியவற்றில் பங்கேற்று வருகிறார். சாங்க்லி, சத்தாரா ஆகிய மாவட்டங்களில் கைவிடப் பட்ட பெண்களின் வாழ்வுரிமைகளுக்கான அமைப்பை நடத்தி வந்தார். விவசாயப் பெண்களின் நிலஉரிமைகளுக்கும் அரசியல் அதிகாரம் பெறுவதற்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.

கல்விப் பணி

தொகு

புனே பல்கலைக் கழகத்தில் சமுக நீதிக்கான துறையில் பேராசிரியராக இருந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக "டாக்டர் அம்பேத்கர் குமுக மாற்றம் வளர்ச்சி இருக்கை" என்னும் துறையில் பணி செய்தார். 2012 இல் அப்பதவியிலிருந்து ஓய்வு அடைந்தார்.

எழுதிய நூல்கள்

தொகு
  • We Shall Smash This Prison: Indian Women in Struggle (1979),
  • "We Will Smash This Prison!.: Indian Women in Struggle " (1980)
  • "Violence Against Women: New Movements And New Theories In India" (1990)
  • Reinventing Revolution: New Social Movements in India (1993),
  • Gender and Technology: Emerging Asian Visions (1994),
  • Dalits And The Democratic Revolution: Dr. Ambedkar And The Dalit Movement In Colonial India " (1994),
  • Dalit Visions: the Anticaste movement and Indian Cultural Identity (1994)
  • Growing Up Untouchable: A Dalit Autobiography Among Others(2000)
  • Buddhism in India : Challenging Brahmanism and Caste (2003)
  • "Ambedkar: Towards an Enlightened India " (2004)
  • Seeking Begumpura: The Social Vision of Anticaste Intellectuals (2008)
  • "Understanding Caste: From Buddha To Ambedkar And Beyond" (2010)

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெயில்_ஓம்வேதித்&oldid=4056809" இலிருந்து மீள்விக்கப்பட்டது