கெருல்மூடு

கெருல்மூடு (Ngerulmud) என்பது பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பலாவுக் குடியரசின் தலைநகரம் ஆகும். இதற்கு முன் 2006 ஆம் ஆண்டு வரை பலாவுவின் மிகப்பெரிய நகரமான கொரோர் எனும் நகரமே தலைநகரமாக அமைந்திருந்தது. கொரோரில் இருந்து வடகிழக்காக 20 கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள பபெல்துவோப் எனும் நாட்டின் மிகப்பெரிய தீவில் உள்ள மிலிகியோக் எனும் மாநிலத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.[1] அத்துடன் இந்நகரம் மிலிகியோக் நகரில் இருந்து 2 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. 7 ஒக்டோபர் 2006 அன்று அண்ணளவாக 5000 மக்களுடன் நாட்டின் தலைநகரம் கோரோரில் இருந்து இந்நகரிற்கு உத்தியோகபூர்வமாக இடம்மாற்றப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. According to Google Earth and topographic maps.
  2. "Pride in Palau for new Capitol" பரணிடப்பட்டது 2012-10-08 at the வந்தவழி இயந்திரம்The Honolulu Advertiser. Published 12 November 2006. Retrieved 25 February 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெருல்மூடு&oldid=3918822" இலிருந்து மீள்விக்கப்பட்டது