கேசப் சந்திர சென்

கேசப் சந்திர சென் ( Keshub Chandra Sen  நவம்பர் 1838--8 சனவரி 1884) என்பவர் இந்தியாவின் வங்கத்தைச் சேர்ந்த இந்துமத தத்துவ அறிஞர் மற்றும் சீர்திருத்தவாதி ஆவார். 1857 ஆம் ஆண்டில் பிரம்ம சமாஜம் என்ற அமைப்பில் சேர்ந்து பணியாற்றினார். [1] இந்து மதச் சிந்தனைகளோடு கிறித்தவக் கோட்பாடுகளையும் சேர்த்துக்கொள்ள விரும்பினார்.

கேசப் சந்திர சென்

இளமைக் காலம்

தொகு

கேசப் சந்திர சென் கொல்கத்தாவில் வைத்யா என்ற குடும்பத்தில் பிறந்தார். ஊக்லி ஆறு அருகில் கரிபா என்ற கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டது இவரது குடும்பம். இவருடைய தாத்தா இந்துமதத் தீவிர உணர்வாளரும் இராம் மோகன் ராய் கொள்கைகளுக்கு எதிரானவரும் ஆவார்.[2] கேசப் சந்திர சென் தம் தந்தையை இளம் அகவையில் இழந்ததால் மாமாவின் கண்காணிப்பில் வளர்ந்தார். பெங்காலி பாடசாலையிலும் பின்னர் 1845 இல் இந்துக் கல்லூரியிலும் படித்தார்.[3]

பணிகள்

தொகு

1855 ஆம் ஆண்டில் உழைக்கும் ஏழை மனிதர்களிடையே கல்வியைப் பரப்புவதற்காக ஒரு மாலைப் பள்ளியைத் தொடங்கினார். குட்வில் சகோதரத்துவம் என்ற அமைப்பில் செயலர் பொறுப்பை ஏற்றார்.[4] கிறித்தவச் சேவைப் பாதிரியார் ரெவெரென்ட் ஜேம்ஸ் லாங் என்பவரின் உதவியால் பிரிட்டிசு இந்தியர் சங்கத்தை தோற்றுவித்தார். [5]இக் கால கட்டத்தில் பிரம்ம சமாஜத்தில் ஈடுபடத் தொடங்கினார்.[6]

பாங்கு ஆப் பெங்கால் என்ற ஒரு வங்கியில் கேசப் சென் எழுத்தராகப் பணிபுரிந்தார். [7] சில காலம் கழித்து அவ்வேலையைத் துறந்து இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகளில் முழுமையாக ஈடுபட்டார். 1857 இல் பிரம்ம சமாஜத்தில் இணைந்தார்.

மேற்கோள்

தொகு
  1. Life of Keshub Chunder Sen, 1907, Mary Lant Carpenter
  2. H.D.Sharma "Ram Mohun Roy -the Renaissance man" pg 26
  3. Biographical Essays by Fredrich Max Müller. Longman's, Green, & Co., London 1884. pp. 51-52.
  4. under the Danish Grand charter for the missionaries of Danish settlement at Serampore, lodge De L’amour Fraternelle (for Brotherly Love) whose motto then was "Fatherhood of God and Brotherhood of Man".
  5. Shivnath Sastri,"History of Brahmo Samaj" pg.114
  6. Muller, pp. 52-53.
  7. Arun Kumar Mukherjee
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசப்_சந்திர_சென்&oldid=3286284" இலிருந்து மீள்விக்கப்பட்டது