கேசரகுழிபள்ளம் அணை
கேசர்குழிபள்ளம் அணை அல்லது கேச்சர்குளி அணை (Kesargulihalla), என்பது தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் அமைந்துள்ள ஒரு அணையாகும்.[1] இது கேசர்குழிபள்ளம், சின்னாறு சேரும் இடத்திற்கு 10.கி.மீ மேலே அமைந்துள்ளது. இவ்விடம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட திருமால்வாடி சிற்றூருக்கு அருகே உள்ள போளு அள்ளி என்ற இடத்திற்கு அருகே உள்ளது. இந்த அணை 1983 இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 134 மில்லியன் கன அடிகள்.[2] இதன் பாசணப்பரப்பு 4000 ஏக்கர் ஆகும்.[1] நீர்பாசனம் பெறும் ஆயக்கட்டு பகுதிகள் பாலக்கோடு வட்டத்தில் திருமால்வாடி, பேலமாரனள்ளி, பேவு அள்ளி, சிரேன அள்ளி, எர்ரகுட்ட அள்ளி, பூதிஅள்ளி, நல்லூர் ஆகிய பகுதிகளாகும்.[3]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 எஸ். ராஜா செல்வம் (10 சூன் 2019). "பருவமழையால் நடப்பு ஆண்டில் அணைகள் முழுமையாக நிரம்புமா? தரும்புரி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு". செயத்தி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2019.
- ↑ http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
- ↑ தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 483