கேசவன் வேலுதாட்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
கேசவன் வேலுதாட் (பிறப்பு 1951) ஓர் இந்திய வரலாற்றாசிரியரும் மற்றும் இடைக்கால தென்னிந்திய வரலாற்றில் புலமை பெற்ற கேரளாவைச் சேர்ந்த கல்வியாளரும் ஆவார். [1] இவர் ஒரு தேர்ந்த கல்வெட்டு ஆய்வாளரும் ஆவார். சமஸ்கிருதம், தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை அறிந்தவர் ஆவார். [2] [3]
கேசவன் வேலுதாட் | |
---|---|
கேசவன் வேலுதாட் | |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
பணி | வரலாற்று ஆசிரியர் கல்வியாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
கல்வி
தொகுவேலுதாட் 1974 ஆம் ஆண்டு, கேரளாவில், தேசிய கிராமப்புற உயர்கல்வி கழகத்தில், (ஆங்கிலம்: National Council for Rural Higher Education), இளங்கலைப் பட்டம் பெற்றார். கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகத்தில் (ஆங்கிலம்: University of Calicut) முதுகலைப் பட்டம் பெற்றார். [3] 1978 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் M. Phil பட்டமும், 1987 ஆம் ஆண்டு கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் வரலாற்றாசிரியர் எம்.ஜி.எஸ் நாராயணனின் மாணவர். [4]
வரலாற்று பேராசிரியர் பணி
தொகுவேலுதாட் 1975 ஆம் ஆண்டில், கல்லூரி ஆசிரியராக கேரள அரசுப் பணியில் அமர்ந்தார். 1982 ஆம் ஆண்டில் புதிதாக உருவான மங்களூர் பல்கலைக்கழகத்திற்கு மாறிச் சென்றார். வேலுதாட் 2008 ஆம் ஆண்டில் வரலாற்றுத் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்றார். [3] தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகவும் பின்னர் பணியாற்றினார். [3]
வருகைதரு பேராசிரியர்
தொகுஅவர் எகோல் பிராட்டிக் டெஸ் ஹாட்ஸ் எட்யூட்ஸில் , பாரிஸ் (பிரெஞ்சு: Ecole Pratique des Hautes Etudes) மனித அறிவியல் பேரவை, பாரிஸ், (பிரெஞ்சு: Maison des Sciences de l’Homme, Paris; ஆங்கிலம்: House of Human Sciences, Paris) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி; மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கேரளா மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஹைதராபாத் ஆகிய பல்கலைக்கழகங்களில் வருகை தரும் பேராசிரியராக இருந்தார். இவர் இந்திய வரலாற்று காங்கிரஸின் (ஆங்கிலம்: Indian History of Congress) வாழ்நாள் உறுப்பினர்ஆவார். [3] இவர் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை மதிப்பிடுவதில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலுடன் (NAAC) தொடர்புடையவர் ஆவார். [3]
முக்கிய வெளியீடுகள் (ஆங்கில நூல்கள்)
தொகு- கேரளாவில் பிரமணர் குடியேற்றங்கள்: வரலாற்று ஆய்வுகள், (கோழிக்கோடு, சந்தியா பப்ளிகேஷன்ஸ், 1978; திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட பதிப்பு, காஸ்மோபுக்ஸ், திருச்சூர், 2013)
- முற்கால, இடைக்கால தென்னிந்தியாவின் அரசியல் அமைப்பு, (புது டெல்லி, ஓரியண்ட் லாங்மேன், 1993; இரண்டாவது திருத்தப்பட்ட பதிப்பு, புது டெல்லி, ஓரியண்ட் பிளாக்ஸ்வான், 2012)
- காலந்தோறும் கேரளா, (திருவனந்தபுரம், மக்கள் தொடர்புத் துறை, கேரள அரசு, 1976) எம்ஜிஎஸ் நாராயணன் மற்றும் பலர்.
- நவீனத்திற்கு முந்தைய தென்னிந்தியாவில் அரசு மற்றும் சமூகம் (State and Society in Pre-modern South India), தொகுப்பாசிரியர்., ஆர். சம்பகலட்சுமி மற்றும் டிஆர் வேணுகோபாலன் உடன்.(காஸ்மோ புக்ஸ், திருச்சூர், 2002)
- தென்னிந்தியாவில் இடைக்காலத்தின் தொடக்கம் (The Early Medieval in South India), ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், (புது டெல்லி, 2009; முதல் பேப்பர்பேக் பதிப்பு, 2010; ஆறாவது பதிப்பு, 2014)
- பொருத்தமற்ற வரலாறு: எம்.ஜி.எஸ். நாராயணனுக்கான கட்டுரைகள் (Irreverent History: Essays for MGS Narayanan), தொகுப்பாசிரியர்)., டொனால்ட் ஆர். டேவிஸ் உடன், ப்ரைமஸ் புக்ஸ், டெல்லி, 2014.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ramaswamy, Vijaya (2009-12-01). "Situating the Early Medieval in South India: Based on, Kesavan Veluthat, The Early Medieval in South India, (Delhi, OUP), 2009, pp. XII + 356, Rs. 695". Indian Historical Review 36 (2): 307–310. doi:10.1177/037698360903600206. பன்னாட்டுத் தர தொடர் எண்:0376-9836.
- ↑ "Department of History - University of Delhi". www.du.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2018-12-05.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Delhi University - Faculty Profile (2016) http://www.du.ac.in/du/uploads/Faculty%20Profiles/2016/History/Nov2016_History_Kesavan.pdf
- ↑ Staff Reporter (2018-07-13). "Distorted history a danger". The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/kerala/distorted-history-a-danger/article24402772.ece.