கேசவ தேவ் மாளவியா

இந்திய அரசியல்வாதி

கேசவ தேவ் மாளவியா (Keshav Dev Malaviya) இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராகவும், இந்தியாவின் மத்திய அமைச்சராகவும் இருந்தவராவார். 1904 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 11 ஆம் தேதி இவர் பிறந்தார். உத்தரபிரதேச மாநிலத்தின் தோமரியகஞ்ச் தொகுதி மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். கான்பூரிலுள்ள ஆர்கோர்ட்டு பட்லர் தொழினுட்பப் பல்கலைக்கழகத்தில் பெட்ரோலியத் தொழினுட்பத்தில் பட்டம் பெற்றார். முன்னதாக இப்பல்கலைக்கழகம் ஆர்கோர்ட்டு பட்லர் தொழினுட்ப நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. 1970 ஆண்டுகளில் காங்கிரசு கட்சி ஆட்சியிலிருந்தபோது கேசவ தேவ் மாளவியா பெட்ரோலியத் துறை அமைச்சராக பணியாற்றினார். சவகர்லால் நேருவின் ஆதரவோடு, மாளவியா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தை தொடங்குவதற்கு காரணமாக இருந்தார். இந்திய பெட்ரோலியத் தொழிலின் தந்தை என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.[2]

கேசவ் தேவ் மாளவியா
Keshav Dev Malaviya
கனிமவளம் மற்றும் எரிபொருள் துறை அமைச்சர்
பதவியில்
10 ஏப்ரல் 1962 – 27 மே 1964
பிரதமர்ஜவகர்லால் நேரு
முன்னையவர்சுவரண் சிங்
பின்னவர்சி. சுப்பிரமணியம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1904-08-11)11 ஆகத்து 1904
இறப்பு27 மே 1981(1981-05-27) (அகவை 76) [1]
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

நீண்ட காலம் உடல் நலிவுற்றிருந்த கேசவ் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதியன்று தனது 77 ஆவது வயதில் காலமானார்.

மாளவியாவின் நினைவாக அசாமிலுள்ள திப்ருகார் பல்கலைக்கழகம் இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சி நோக்கங்களுக்காக பயன்பாட்டு புவியியல் துறையில் ஓர் இருக்கையை உருவாக்கியுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் ஆராய்ச்சிக்காக இந்தத் துறை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Obituary References". Lok Sabha Debates 18 (1): 3. 17 August 1981. https://eparlib.nic.in/bitstream/123456789/2275/1/lsd_07_06_17-08-1981.pdf. 
  2. "Steps are being taken to contain growth in demand for oil: Keshav Dev Malaviya". India Today. பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசவ_தேவ்_மாளவியா&oldid=3160477" இலிருந்து மீள்விக்கப்பட்டது