கேசாதிபாதம்

கேசாதிபாதம் என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. கேசாதிபாதம் என்பது கேசம் முதல் பாதம் வரை என்னும் பொருள்தரும் வடமொழிச் சொல்லாகும். இங்கே கேசம் என்பது தலைமுடியைக் குறிக்கும். இதற்கு அமையக் கலிவெண்பாவால் தலைமுடி தொடங்கி பாதம் வரையான உறுப்புக்களைக் கூறிப் பாடுதல் கேசாதிபாதம் எனப்படும். [1].

இறைவனையும், இறைவனைப் போல் கருதப்படுபவர்களையும் தவிர ஏனையோரைக் கேசாதிபாதமாகப் பாடுவது மரபு.

குறிப்புகள்

தொகு
  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 871

உசாத்துணைகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசாதிபாதம்&oldid=3241562" இலிருந்து மீள்விக்கப்பட்டது