கேடா
கேதா அல்லது கைரா (Kheda or Kaira) இந்தியாவின், குஜராத் மாநிலத்தின், கேதா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியுமாகும். அகமதாபாத்திலிருந்து 35 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 8 கேதா நகரத்தின் வழியாக, மும்பை-அகமதாபாத் நகரங்களை இணைக்கிறது. கேதா நகரம், வட்ராக் மற்றும் சேதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 68 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
கேதா | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): கைரா | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | கேதா மாவட்டம் |
ஏற்றம் | 21 m (69 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 24,034 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மொத்த மக்கட்தொகை 25,575. அதில் ஆண்கள் 13,307, பெண்கள் 12,268 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 922 பெண்கள் உள்ளனர். [1] எழுத்தறிவு விகிதம் 87.72%.
சமுகங்கள்
தொகுகேதா நகரத்தில் மற்ற சமுக மக்களை விட ஜாட் சமுக மக்கள் அதிகம் உள்ளனர்.[2].
போன்ற சாட் இன மக்களும் மற்றும் குஜ்ஜர் இன வோரா/வேரா மக்களும் உள்ளனர்.
வழிபாட்டுத் தலம்
தொகுகேதா நகரத்தில் மேல்தி மாதா கோயில் பிப்ரவரி மாதத்தில் நடக்கும் ஆண்டுத் திருவிழாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவர்.