கேட்செக் குழி
கேட்செக் குழி (Hatschek's pit) என்பது ஈட்டி மீனில் காணப்படும் ஆழமான குற்றிலைகளுடன் கூடிய பள்ளமாகும். இது முதுகுப்புறம் வாய்க்குழிக்குப் பின்னால் காணப்படுகிறது. மற்றவற்றுடன், இது தண்ணீரிலிருந்து உணவுத் துகள்களைச் சிக்க வைக்கும் சளியைச் சுரக்கிறது. இது ஈட்டி மீன்களில் ஆய்வு மேற்கொண்ட ஆத்திரிய விலங்கியல் நிபுணரான பெர்த்தோல்ட் கேட்செக் பெயரால் அழைக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Goodrich, Edwin S. (1934-01-01). "Memoirs: The Early Development of the Nephridia in Amphioxus: Introduction and Part I, Hatschek's Nephridium". Journal of Cell Science s2-76 (303): 499–510. doi:10.1242/jcs.s2-76.303.499. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-9137. https://doi.org/10.1242/jcs.s2-76.303.499.