கேண்டர் சாரைப்பாம்பு

கேண்டர் சாரைப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
தையாசு
இனம்:
தை. தும்னேடசு
இருசொற் பெயரீடு
தையாசு தும்னேடசு
(கேண்டர், 1842)

கேண்டர் சாரைப்பாம்பு என்று பொதுவாக அழைக்கப்படும் தையாசு தும்னேடசு (Ptyas dhumnades) என்பது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[2] இது சீனா, வியட்நாம் மற்றும் தைவானில் காணப்படுகிறது.[2]

அளவில் கேண்டர் சாரப்பாம்பு பெரியது. இதன் மொத்த நீளம் 220 செ.மீ. ஆகும். உடலின் நடுப்பகுதியில் 11 முதல் 16 செதில் வரிசைகள் உள்ளன. இவை முதுகெலும்பினைச் சுற்றிக் காணப்படும். முட்டை வடிவத் தலையானது சிறிது முக்கோணமாகவும் காணப்படும். தலை கழுத்திலிருந்து வேறுபடுத்திக் காணும் அளவில் பிரிக்கப்பட்டுள்ளது. உடல் மெலிந்து வால் நீளமாகக் காணப்படும். கண் மிகவும் பெரியது; கருவிழி அடர் சாம்பல் முதல் கருப்பு நிறத்திலிருக்கும்.

கேண்டர் சாரைப்பாம்பு பகலாடி வகையினைச் சார்ந்தது. நிலப்பரப்பில் இப்பாம்பு புல்வெளிகள், வனப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் வாழ்கிறது. இது மீன்கள், தவளைகள், பல்லிகள், பிறபாம்புகள், பறவைகள் மற்றும் எலிகளை அதிகமாக உண்கிறது. ஒரு முறைக்கு 6 முதல் 17 முட்டைகளை வசந்த காலத்தின் பிற்பகுதியிலும் கோடைக் காலத்திலும் உற்பத்தி செய்கின்றன. இரவில் மரங்களில் உறங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Ren, J.; Li, P.; Zhou, Z.; Ji, X. (2021). "Ptyas dhumnades". IUCN Red List of Threatened Species 2021: e.T192126A2043652. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T192126A2043652.en. https://www.iucnredlist.org/species/192126/2043652. பார்த்த நாள்: 3 July 2023. 
  2. 2.0 2.1 "Ptyas dhumnades". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.
  3. https://snakesoftaiwan.com/ptyas-dhumnades.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேண்டர்_சாரைப்பாம்பு&oldid=4143849" இலிருந்து மீள்விக்கப்பட்டது