கேதன் சாவேஜ்

அமெரிக்காவின் கூடைப்பந்தாட்ட வீரர்

கேதன் சாவேஜ் (Kethan Savage) (செப்டம்பர் 4, 1993) அமெரிக்காவின் தொழில்முறை கூடைப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர், ஜியார்ஜ் வாஷிங்டன் ஆண்கள் கல்லூரிக்கும், பட்லர் ஆண்கள் கல்லூரிக்கும் கூடைப்பந்து விளையாடினார்.

கேதன் சாவேஜ்
கேதன் சாவேஜ் கூடை வழியாக பந்தை கீழே தள்ளுகிறார்
பிறப்புசெப்டம்பர் 4, 1993 (1993-09-04) (அகவை 30)
பெர்பாக்சு, வர்ஜீனியா
தேசியம்அமெரிக்கர்

பள்ளி வாழ்க்கை தொகு

வர்ஜீனியாவின் அலெக்சாண்ட்ரியாவில் உள்ள எபிஸ்கோபல் உயர்நிலைப்பள்ளியில் சேருவதற்கு முன்னர் இவர், சாண்டிலி உயர்நிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் பயின்றார். எபிஸ்கோபல் பள்ளியை 1998 முதல் ஒரு இளையோராக வெற்றியாளாராக்கினார். ஒரு மூத்தோராக வர்ஜீனியாவின் சுயாதீன பள்ளிகளுக்கான போட்டியில் இவர் தனது அணியை 24-4 என்ற புள்ளிகளின் சாதனை அடிப்படையில் இட்டுச் சென்றார்.[1]

கல்லூரி வாழ்க்கை தொகு

சாவேஜ், ஒரு புதிய வீரராக ஒரு ஆட்டத்திற்கு சராசரியாக 3.1 புள்ளிகளைப் பெற்றார்.[2] இவர் ஒரு சோபோமோர் என ஒரு ஆட்டத்திற்கு 12.7 புள்ளிகளாக தனது புள்ளிகளை அதிகரித்தார். ஆனால் பருவத்தின் பிற்பகுதியில் காயமடைந்தார். மேலும், 2014 தேசிய கல்லூரி விளையாட்டுச் சங்கம் நடத்திய போட்டியில் விளையாடவில்லை. ஒரு இளையோராக, இவர் ஒரு ஆட்டத்திற்கு சராசரியாக 11.7 புள்ளிகளையும், 4.8 ரீபவுண்டுகளையும் 2.7 அசிஸ்ட்களையும் பெற்றார்.[3] இந்தப் பருவத்துக்குப் பிறகு, தான் பட்லர் ஆண்கள் கல்லூரிக்கு மாறுவதாக அறிவித்தார்.[4]

இவருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், நிமோனியா காரணமாக பட்லர் கல்லூரியின் முதல் நான்கு ஆட்டங்களைத் தவறவிட்டார். 2017ஆம் ஆண்டில் தனது முதல் என்சிஏஏ போட்டியில் விளையாடினார். இருப்பினும் தசைநார் பிடிப்பு மூலம் மட்டுப்படுத்தப்பட்டார்.[5] இவரது மூத்தோர் விளையாட்டில், ஒரு ஆட்டத்திற்கு சராசரியாக 8.0 புள்ளிகள், 2.7 ரீபவுண்டுகள் மற்றும் 1.5 அசிஸ்ட்கள் தரையில் இருந்து 44.3 சதவிகிதத்தையும், வளைவின் பின்னால் இருந்து 29.2 சதவிகிதத்தையும் எடுத்தார்.[6]

தொழில் வாழ்க்கை தொகு

ராப்டர்ஸ் 905 ஆல் 2017 என்.பி.ஏ ஜி லீக் வரைவின் முதல் சுற்றில் 26 வது தேர்வோடு சாவேஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். உண்மையில் அணியை உருவாக்க ராப்டர்ஸ் 905 ஆல் எடுக்கப்பட்ட ஒரே வரைவு தேர்வாக அவர் இருந்தார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Woods, David (January 6, 2017). "Butler's Kethan Savage returns to D.C. just as he is returning to form". Indianapolis Star. https://www.indystar.com/story/sports/college/butler/2017/01/06/butlers-kethan-savage-returns-dc-just-he-returning-form/96080944/. பார்த்த நாள்: May 1, 2018. 
  2. Rothstein, Jon (December 11, 2013). "Triple Threat: Mid-year transfers ready to make an impact". CBS Sports. https://www.cbssports.com/college-basketball/news/triple-threat-mid-year-transfers-ready-to-make-an-impact/. பார்த்த நாள்: May 1, 2018. 
  3. "George Washington loses starting guard to transfer". NBC Sports. April 3, 2015. பார்க்கப்பட்ட நாள் May 1, 2018.
  4. "George Washington transfer commits to Butler". NBC Sports. April 18, 2015. பார்க்கப்பட்ட நாள் May 1, 2018.
  5. Woods, David (March 14, 2017). "Transfers Woodson, Savage making NCAA tourney debuts with Butler". Indianapolis Star. https://www.indystar.com/story/sports/college/butler/butler-insider/2017/03/14/transfers-woodson-savage-making-ncaa-tourney-debuts-butler/99178628/. பார்த்த நாள்: May 1, 2018. 
  6. 6.0 6.1 "Here comes Kethan Savage of the 905". RaptorsHQ. பார்க்கப்பட்ட நாள் May 1, 2018.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேதன்_சாவேஜ்&oldid=3190578" இலிருந்து மீள்விக்கப்பட்டது