கேதார்நாத் சிங்

சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர்

கேதார்நாத் சிங் என்பவர் புகழ் பெற்ற இந்தி மொழிக் கவிஞர் ஆவார்.[1] இவருக்கு 2013 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருது வழங்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருதினையும் பெற்றுள்ளார்.

கேதார்நாத் சிங்
கேதார்நாத் சிங்
பிறப்பு1934
தேசியம்இந்தியா இந்தியர்
பணிகவிஞர்

இளைய பருவம்

தொகு

இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில் பிறந்தவர். வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரியில் படித்துவிட்டு, காசி இந்து வித்தியாலயத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார். கோரக்பூரில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றினார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தி மொழித் துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

எழுதியவை

தொகு
கவிதைகள்
  • அபி பிகுல் அபி
  • ஸமீன் பாக் ரஹீ ஹாய்
  • யஹான் ஸே தேகோ
  • அகால் மெய்ன் ஸாரஸ்
  • பாக்
  • டால்ஸ்டாய் அவர் சைக்கிள்
கதைகள்
  • மேரே ஸமய் கே ஸப்த்
  • கல்பனா ஔர் சாயாவத்
  • ஹிந்தி கவித மெய்ன் பிம்ப் விதான்

விருதுகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Kedarnath Singh, 1934". loc.gov. பார்க்கப்பட்ட நாள் 15 July 2012.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேதார்நாத்_சிங்&oldid=3537467" இலிருந்து மீள்விக்கப்பட்டது