கேந்துசர் மாவட்டம்

ஒடிசாவில் உள்ள மாவட்டம்
(கேந்துஜர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கேந்துசர் மாவட்டம் (கேந்துஜர்), ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கேந்துசர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

புவியியல்

தொகு

கேந்துசர் என்பது ஒரிசாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாகும். கிழக்கில் மயூர்பஞ்சர் மாவட்டம், பாலசோர் மாவட்டம்,  பத்ரக் மாவட்டம், தெற்கே சச்சுப்பூர் மாவட்டம் மேற்கில் தெங்கனல் மாவட்டம், அனுகுல் மாவட்டம், மற்றும் சுந்தர்கர் மாவட்டம் மற்றும் வடக்கில் சிங்கபும் மாவட்டம் என்பன இதன் எல்லைகளாகும். கேந்துசர் மாவட்டத்தில் இரும்பு, மாங்கனீசு மற்றும்  குரோமியம் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் சுமார் 30% அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. 100 கி.மீ 2 பரப்பளவைக் கொண்ட உலகின் மிகப் பழமையான பாறை அமைப்புகளில் ஒன்று கேந்துசரில் உள்ளது.

காலநிலை

தொகு

மாவட்டத்தில் வெப்பநிலை வசந்த காலத்தில் வேகமாக உயரத் தொடங்குகிறது. மே மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த வெப்பநிலை பொதுவாக 38 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். இருப்பினும் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை 43.3. C ஆகும்.[2] ஜூன் மாத மழைக்காலத்தில் வானிலை குளிர்ச்சியடைந்து அக்டோபர் இறுதி வரை குளிராக இருக்கும். டிசம்பர் மாதத்தில் வெப்பநிலை 11.7. C ஆகக் குறையும். பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச வெப்பநிலை 1. C ஆக இருந்தது. சராசரி ஆண்டு மழை வீழ்ச்சி 1910.1 மி.மீ. ஆகும்.[3]

பொருளாதாரம்

தொகு

கேந்துசர, சச்சுப்பூர் ஆகிய மாவட்டங்களின் எல்லையான தைத்தாரி மலைகள் உயர் தர இரும்புத் தாதுக்களைக் கொண்டுள்ளன. ஒடிசா சுரங்கக் கூட்டுத்தாபனம் , டிஸ்கோ மற்றும் போலனி மைன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் கேந்துசரில் இரும்புத் தாது சுரங்கங்களை நடத்துகின்றன. கூடுதலாக, பார்பில் / ஜோடா பகுதியில் பல நடுத்தர மற்றும் சிறிய அளவிலான சுரங்க நடவடிக்கைகள் உள்ளன. கேந்துசரில் ஏராளமான மாங்கனீசு மற்றும் குரோமைட் வைப்புகளும் உள்ளன. ஒடிசாவின் மாங்கனீசு உற்பத்தியில் 80% கேந்துசர் வழங்குகிறது. மாங்கனீசு சுரங்கங்கள் பன்ஸ்பானி, பார்பில் மற்றும் பர்ஜம்டாவிலும், குரோமைட் சுரங்கங்கள் பவுலா, நுசாஹி மற்றும் புலின்ஜோர்ஹுலி ஆகிய இடங்களிலும் உள்ளன.[4] 2006 ஆம் ஆண்டில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கேந்துசரை நாட்டின் 250 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது. ஒரிசாவில் உள்ள 19 மாவட்டங்களில் இந்த மாவட்டம் ஒன்றாகும். பின்தங்கிய பிரிந்திய மானிய நிதி திட்டத்திலிருந்து (பிஆர்ஜிஎஃப்) நிதி பெறுகிறது.[5]

புள்ளிவிபரங்கள்

தொகு

2011 ஆம் ஆண்டில் சனத்தொகை கணக்கெடுப்பில் கேந்துசர் மாவட்டத்தில் 1,801,733 மக்கள் வசிக்கின்றனர். இது இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 264 வது மாவட்டமாகும்.[6] மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு (560 / சதுர மைல்) 217 மக்கள் அடர்த்தி உள்ளது.[6] 2001–2011 காலப்பகுதியில் மாவட்டத்தின் சனத்தொகை வளர்ச்சி விகிதம் 15.42% ஆகும். கேந்துசர் மாவட்டம் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 987 பெண்கள் என்ற பாலின விகிதத்தை கொண்டுள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதம் 69% ஆகும்.[6]

உட்பிரிவுகள்

தொகு

இந்த மாவட்டத்தை 13 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1]

அவை: ஆனந்தபூர், பம்சபாள், சம்புவா, கசிபூரா, கட்காவ், அரிசந்தன்பூர், ஆட்டடிகி, சூம்புரா, சோடா, கேந்துசர், பாட்ணா, சகர்படா, தேல்கோய் ஆகியன. இந்த மாவட்டத்தில் ஆனந்தபூர், பட்பில், கேந்துசர், சோடா ஆகிய ஊர்கள் நகராட்சி நிலையை அடைந்துள்ளன.

இது தேல்கோய், கசிபுரா, ஆனந்தபூர், பாட்ணா, கேந்துசர், சம்புவா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் கேந்துசர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

முக்கிய பழங்குடியினர்

தொகு

கேந்துசர் மாவட்டத்தின் கலாச்சாரம் முக்கியமாக இந்த மாவட்டத்தில் வசிக்கும் பல்வேறு பழங்குடியினரின் பழங்குடி கலாச்சாரமாகும். சோகராய், கவ்மாரா போரோப், சருகூல், பா போரோபு, சோம்னாமா, மாகே போரோபு, உதா போரோபு, பருனி சாத்திரா ஆகியவற்றின் திருவிழாக்கள் இதில் முக்கியமான பழங்குடி விழாக்களை மாவட்ட நிருவாகம் ஏற்பளித்துள்ளது.[7]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
  2. ""DISTRICT IRRIGATION PLAN OF KEONJHAR(ODISHA))"". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "DISTRICT IRRIGATION PLAN OF KEONJHAR(ODISHA))" (PDF). Archived from the original (PDF) on 2016-11-12.
  4. ""Role of commercial banks in rural development - A case study of Keonjhar district of Orissa"". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "Keonjhar may get Rs 2800 cr for MDF". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. 6.0 6.1 6.2 "Indian Districts by Population, Sex Ratio, Literacy 2011 Census". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
  7. "Culture & Heritage". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேந்துசர்_மாவட்டம்&oldid=3551395" இலிருந்து மீள்விக்கப்பட்டது