கேனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர்

கருநாடக இசைப் பாடகர்

கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் (Konerirajapuram Vaidyanatha Ayyar) (1878–1921) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகராவார். 1971 ஆம் ஆண்டில் சங்கீத கலாநிதி பட்டம் பெற்றவரும்[1] கருநாடக இசையில் பல இராகங்களில் 2500 க்கும் அதிகமான கிருதிகளை இயற்றிய இசை அறிஞருமான பாபநாசம் சிவன் இவரது சீடராவார்.[2] சங்கீத கலாநிதி பட்டம் பெற்ற முடிகொண்டான் வெங்கடராம ஐயரும் இவரது மாணவராக இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

வைத்தியநாத அய்யர் தஞ்சாவூரிலுள்ள கோனேரிராஜபுரம் கிராமத்தில் 1878 ஆம் ஆண்டில் வாத்திமாவான நாராயண ஐயர் மற்றும் சீதாலட்சுமி ஆகியோருக்கு வடமா ஐயர் குடும்பத்தில் பிறந்தார். நாகஸ்வரம் பழனிவேலு, மருதநல்லூர் குழந்தைசாமி, சின்ன குழந்தைசுவாமி, மேலத்தூர் சுந்தர பாகவதர் மற்றும் வெங்கடராம பாகவதர் ஆகியோரின் கீழ் தனது ஆரம்பப் பயிற்சியைப் பெற்றார்.

பன்னிரண்டு வயதில் இவருக்குத் திருமணம் நடந்தது. இவரது இசை ஒரு அரிய முதிர்ச்சியை எட்டியுள்ளது என்று இவரும் இவரது சகாக்களும் உணர்ந்தபோது, வைத்தியநாத அய்யர் தனது 43 வயதில் இறந்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Papanasam Sivan – Inspirations and Expressions".
  2. பாபநாசம் சிவன்: தமிழ் தியாகய்யர்!
  3. "Moving the heart".
  • பாண்டியர் செப்பேடுகள் பத்துN. Rajagopalan (1992). Another Garland: Biographical Dictionary of Carnatic Composers & Musicians, Bopok II. Carnatic Classicals. pp. 319–320.