வாத்திமா
வாத்திமா (அல்லது வாத்திமர், மாத்தியமர்) என்றழைக்கப்படுவோர் தமிழ்நாட்டில் வாழும் ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். ஆதிசங்கரரின் அத்வைதத்தைக் கடைப்பிடிக்கும் இவர்கள் ஸ்மார்த்த மரபைச் சேர்ந்த பஞ்ச திராவிடப் பிராமணர் ஆவர்.[1] வாத்திமாக்கள் வாழ்ந்த 18 கிராமங்களில் தேதியூரும் ஒன்றாகும்.
ஏ. சேசைய்ய சாஸ்திரி | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
சோழ நாடு, சென்னை | |
மொழி(கள்) | |
பிராமணத் தமிழ் | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஐயர், தமிழர் |
புவியியற் பரம்பல்
தொகுஇவர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் செறிந்து வாழ்வதனால், தனிப்படுத்தப்பட்டும், பிற பண்பாடுகளின் தாக்கங்களுக்கு அதிகம் உட்படாதவர்களாகவும் உள்ளனர்.[2] இதனால், ஆங்கில மொழியையும், மேனாட்டுப் பண்பாட்டையும் ஏற்றுக்கொள்ளும் போக்கு இவர்கள் மத்தியில் மிகவும் தாமதமாகவே ஏற்பட்டது.
தொழில்
தொகுபழைய காலத்தில் இவர்கள் மத்தியில் இருந்த முக்கியமான தொழில் பணம் கடன் கொடுப்பது ஆகும். வாத்திமாப் பெண்களும் தொழில் செய்வது உண்டு. இவர்கள் வேளாண்மை, பாய் பின்னுதல், கடன் கொடுத்தல் ஆகிய தொழில்களில் ஈடுபடுவர். இவர்கள் சமய இலக்கியங்களிலும் அறிவு பெற்றவர்கள்.[3] தேதியூர் வாத்திமாவான சுப்ரமணிய சாஸ்திரிகள் 1929ஆம் ஆண்டில் பிரம்ம வித்யா எனும் நூலை தொகுத்துள்ளார்.[4]
பிரிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Vathimas in the list of Brahmin communities
- ↑ Sruti, Issues 53-64, Pg 338
- ↑ Paramacharya: life of Sri Chandrasekharendra Saraswathi of Sri Kanchi, Pg 25
- ↑ தேதியூர் ப்ரம்மஶ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் தொகுத்த பிரம்ம வித்யா நூல்
வெளி இணைப்புகள்
தொகு- Edgar Thurston, K. Rangachari (1909). "Brahmin". Castes and Tribes of Southern India Volume I - A and B. Madras: Government Press. pp. 337–338.