தேதியூர்
தேதியூர் (Thediyur), தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், தேதியூர் ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும்.[1]18 கிராமத்து வாத்திமாக்கள் வாழ்ந்த ஊர்களில் தேதியூரும் ஒன்றாகும்.[2]
தேதியூர் | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
வருவாய் வட்டம் | குடவாசல் |
கிராம ஊராட்சி | தேதியூர் ஊராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 609501 (எரவாஞ்சேரி துணை அஞ்சலகம்) |
வாகனப் பதிவு | TN- |
இக்கிராமத்தில் மூன்று சிவன் கோவில்களும், இரண்டு பெருமாள் கோவில்களும் உள்ளது. அவற்றுள் பெரிய கோயில் பைரவர் தலமான பிரத்யட்ச பரமேஸ்வரர் கோயில் ஆகும்.
அமைவிடம்
தொகுஇது கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில், கும்பகோணத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எரவாஞ்சேரிக்கு அருகில் உள்ளது. தேதியூர் கிராமம் ஸ்ரீ வாஞ்சியம்த்துக்கு வடக்கிலும், கோனேரிராஜபுரத்துக்குத் தெற்கிலும் உள்ளது.
பெயர்க் காரணம்
தொகுதேர் புதைந்த ஊராதலால் “தேர்தகையூர்” என்ற பெயரும் தேதியூருக்கு உண்டு.
மேற்கோள்கள்
தொகு- ↑ "(LIST OF ALL REVENUE VILLAGES, NIC-GIS, december 2000)". www.ifpindia.org. Archived from the original on 2009-07-22.
- ↑ பதினெட்டு கிராமத்து வாத்திமா