தேதியூர் பிரத்யட்ச பரமேஸ்வரர் கோயில்
தேதியூர் பிரத்யட்ச பரமேஸ்வரர் கோயில், திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், தேதியூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் பைரவர் சன்னதி பிரபலமாக உள்ளது.[1]இக்கோயில் மூலவர் பெயர் பிரத்யட்ச பரமேஸ்வரர், அம்பாள் பெயர் சுந்தர கனகாம்பிகை ஆகும். இதன் தல விருட்சம் வெற்றிலைக்கொடி என உ. வே. சாமிநாதையர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தேதியூர் பிரத்யட்ச பரமேஸ்வரர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தேதியூர், திருவாரூர் மாவட்டம் |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
கோயில் அறக்கட்டளை: | ஆம் |
ஸ்ரீவாஞ்சியத்துக்கு வடக்கேயும், கோனேரி ராஜபுரத்துக்குத் தெற்கிலும் அமைந்த தேதியூர் பிரத்யட்ச பரமேஸ்வரர் கோயில், ஊரின் தென்கிழக்கில் உள்ளது.
நடைதிறப்பு
தொகுகாலை 6.00 மணி முதல் மதியம்12.00 மணி வரை பின் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
தேதியூர் பெயர்க் காரணம்
தொகுஇராவணன்- ஜடாயுக்கும் நடந்த போரில் ஜடாயு படுகாயம் அடைகிறார். ராவணன் தேரை ஜடாயு தகைத்ததால் (தடுத்தல்) இவ்வூருக்கு தேர்தகையூர் என்று பெயர் பெற்று, பிறகு தேதியூர் ஆனது.
புராண வரலாறு
தொகுபோரில் களைத்த சமயம் இராவணனுக்கு தாகம் எடுக்க அங்குள்ள குளத்தில் நீர் அருந்த சென்ற சமயம், ஜடாயுவால் தாக்கப்பட்ட ராவணனுடைய ரதம் குளத்தில் இறங்கி விட ராவணன் எவ்வளவு முயன்றும் அதை வெளியில் கொண்டு வர முடியாமல் இங்கேயே விட்டு சென்று விட்டு விட்டு, வான்வழியாக இலங்கை சென்றார்.. இன்றும் ராவணன் தேர் தேதியூர் கோயில் குளத்தில் இருப்பதாக ஐதீகம். அதனால் இந்த குளத்திற்கு “இராவண தீர்த்தம்” என்ற பெயர் பெற்றது.
இரதரோதனபுரம் என்பது தேதியூரின் புராணகாலப் பெயர். ஸ்ரீ பிரும்மாண்ட புராணத்தில் இத்திருத்தலம் பற்றிய பெருமைகள் காணப்படுகின்றன.
தலசிறப்பு
தொகுஇக்கோயிலில் பைரவர் சிறப்பு மிக்க தெய்வமாக உள்ளார். பைரவர் அருகில் சிறிய சனி பகவான் சன்னதி உள்ளது. தட்சிணாமூர்த்தியின் எதிரில் ஒரு நந்தி உள்ளது. சண்டேசர் பெரிய அளவில் உள்ளார்.
அமைவிடம்
தொகுஇக்கோயிலுக்கு தெற்கே திருமலைராஜன் ஆறும், வடக்கே அரசலாறும் பாய்கிறது. இதனருகில் எரவாஞ்சேரி உள்ளது.
போக்குவரத்து
தொகு- இது கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில், கும்பகோணத்திலிருந்து, நாச்சியார கோயில் வழியாக 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூந்தோட்டம் எனுமிடத்தில் இறங்கிபின் அரை கிலோ மீட்டர் தொலைவில் தேதியூர் கிராமம் உள்ளது.
எரவாஞ்சேரிக்கு அருகில் உள்ளது. தேதியூர் கிராமம் ஸ்ரீ வாஞ்சியம்த்துக்கு வடக்கிலும், கோனேரிராஜபுரத்துக்குத் தெற்கிலும் உள்ளது. கும்பகோணத்திலிருந்து இருந்து நாச்சியார் கோயில் வழியாக பூந்தோட்டம் செல்லும் வழியில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து சுமார் 1/2 கி.மீ தொலைவில் தேதியூர் அமைந்துள்ளது.
- இக்கோயில் நாச்சியார் கோயிலிருந்து திருவீழிமிழலை செல்லும் சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவில் எரவாஞ்சேரி அருகே அமைந்துள்ளது.