திப்பிராஜபுரம்
கும்பகோணம் தாலுகாவில் உள்ள கிராமம்
தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுக்காவில் திப்பிராஜபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்தியாவில் பாய்கின்ற திருமலைராஜன் மற்றும் முடிகொண்டான் ஆறுகள் இணையும் இடத்தின் அருகில் அமைந்துள்ளது.இவ்வூரின் அருகே 8 கிலோமீட்டர் தொலைவில் கும்பகோணம் ரயில் நிலையம் அமைந்துள்ளது.இக்கிராமத்தில் புகழ்பெற்ற விக்கிரம சோழஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்கள் உள்ளது.
திப்பிராஜபுரம்
திப்பிராஜபுரம் | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
வட்டம் | கும்பகோணம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 3,560 |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
விளக்கப்படங்கள்
தொகுதிப்பிராஜபுரத்தில் 2001-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,மொத்த மக்கட்தொகை- 3560 ஆண்கள்- 1796 மற்றும் பெண்கள்-1764. பாலின விகிதம் 982 மற்றும் கல்வியறிவு விகிதம் 76.4 ஆக உள்ளது.
குறிப்புகள்
தொகு- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-22.