கேபால்சரைட்டு
கேபால்சரைட்டு (Cabalzarite) என்பது (Ca(Mg,Al,Fe3+)2[AsO4]2·2(H2O,OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரியவகை ஆர்சனேட்டு கனிமம் ஆகும். திசம்கோரைட்டு குழுக் கனிமங்களில் கேபால்சரைட்டு கனிமமும் ஓர் உறுப்பினராகும். ஒற்றைச்சரிவச்சு படிகத்திட்ட்த்தில் படிகமாகும் இக்கனிமம் தொகுதிகளாக அல்லது சிறுமணிகள் போன்ற பொதிகளாகத் தோன்றுகிறது [1][2].
கேபால்சரைட்டு Cabalzarite | |
---|---|
சுவிட்சர்லாந்தில் கிடைத்த கேபால்சரைட்டு | |
பொதுவானாவை | |
வகை | ஆர்சனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Ca(Mg,Al,Fe3+)2[AsO4]2•2(H2O,OH) |
இனங்காணல் | |
நிறம் | இலேசான பழுப்பு, பழுப்பு கலந்த இணஞ்சிவப்பு, ஆரஞ்சு பழுப்பு |
படிக இயல்பு | சிறுமணிகள் போன்ற பொதிகள் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
முறிவு | ஒழுங்கற்றது |
மோவின் அளவுகோல் வலிமை | 5 |
மிளிர்வு | பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 3.89 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு |
ஒளிவிலகல் எண் | nα = 1.700 nγ = 1.760 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.060 |
மேற்கோள்கள் | [1][2][3] |
சுவிட்சர்லாந்தின் கிரௌபந்தென் மண்டலத்திலுள்ள தடைசெய்யப்பட்ட மாங்கனீசு சுரங்கத்தில் முதன்முதலில் கேபால்சரைட்டு கண்டறியப்பட்டது. வால்டர் கேபால்சர் கண்டறிந்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்ட்து. அனைத்துலக கனிமவியல் நிறுவனம் கேபால்சரைட்டை ஒரு புதிய கனிமம் என்று 1997 ஆம் ஆண்டு அங்கீகரித்தது. மொராக்கோ நாட்டிலுள்ள குவார்சாசேட்டு மாகாணத்தின் அக்பார் சுரங்கத்திலும் இக்கனிமம் கிடைப்பதாக அறியப்படுகிறது [2].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Cabalzarite mineral data from Webmineral
- ↑ 2.0 2.1 2.2 Cabalzarite mineral information on Mindat.org
- ↑ Brugger J., Meisser N., Schenk K., Berlepsch P., Bonin M., Armbruster T., Nyfeler D. and Schmidt S. 2000: Description and crystal structure of cabalzarite Ca(Mg,Fe,Al)2(AsO4)2(H2O,OH)2, a new mineral from the tsumcorite group. American Mineralogist, 85(9), 1307-1314; [1]