கேப்ரியல் ஒகரா
கேப்ரியல் ஒகரா (Gabriel Imomotimi Gbaingbain Okara, 24 eஎப்ரல் 1921 – 25 மார்ச் 2019)[1] என்பவர் நைசீரிய நாட்டைச் சேர்ந்த கவிஞர், புதின ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.[2]
கேப்ரியல் ஒக்காரா | |
---|---|
பிறப்பு | போமவுண்டி, நைஜீரியா | 24 ஏப்ரல் 1921
இறப்பு | 25 மார்ச்சு 2019 யெனகோவா, நைஜீரியா | (அகவை 97)
பணி | புதின ஆசிரியர், கவிஞர் |
நைசீரியாவில் புமுண்டி என்னும் ஊரில் பிறந்த இவர் இளமைக் காலத்தில் புத்தகங்களைப் பைண்டு செய்யும் பணியைச் செய்தார்.[3] பின்னர் வானொலிக்காக நாடகங்களை எழுதினார். இவர் 1964 இல் தி வாய்ஸ் என்னும் புதினத்தை எழுதி வெளியிட்டார். ரிவர் ஸ்டேட் பப்ளிசிங் அவுசு என்னும் நிறுவனத்தில் இயக்குநர் ஆனார். இவருடைய கவிதைகள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.[4] நைசீரிய இலக்கிய இதழான பிளாக் ஒர்பிசில் ஒகராவின் கவிதைகள் இடம் பெற்றன. தி கால் ஆப் தி ரிவர் நன் என்ற இவர் எழுதிய கவிதைக்காக நைசீரிய கலைத்திருவிழாவில் ஒகராவுக்கு விருது வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Renowned Poet and Novelist, Gabriel Okara, Dies Just Before 98th Birthday" பரணிடப்பட்டது 2019-03-25 at the வந்தவழி இயந்திரம், Olisa TV, 25 March 2019.
- ↑ Laurence, Margaret; Stovel, Nora Foster (2001). Long Drums & Cannons: Nigerian dramatists and novelists, 1952-1966. University of Alberta. pp. 171–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88864-332-2. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011.
- ↑ http://www.britannica.com/biography/Gabriel-Okara
- ↑ http://www.poetryfoundation.org/poems-and-poets/poets/detail/gabriel-okara