கேப்ரியேல் தொகுப்பு முறை

வேதி வினை

கேப்ரியேல் தொகுப்பு முறை (Gabriel synthesis) என்பது ஓரிணைய அல்கைல் ஆலைடுகளை ஓரிணைய அமீன்களாக மாற்றும் ஒரு வேதி வினையாகும். வழக்கமாக, இந்த வினையில் பொட்டாசியம் தாலிமைனடு பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]இந்த வினையானது, இந்த வினையை முதன் முதலில் தனது இணை ஆய்வாளர் ஜேம்ஸ் டார்ன்புஸ் உடன் இணைந்து உருவாக்கிய செருமானிய வேதியியலாளர் சிக்மண்ட் கேப்ரியேல் என்பவரின் பெயரில் அழைக்கப்படுகிறது.[4]

கேப்ரியேல் தொகுப்பு முறை
பெயர் மூலம் சிக்மண்ட் கேப்ரியேல்
வினையின் வகை பதிலீட்டு வினை
இனங்காட்டிகள்
கரிமவேதியியல் வலைவாசல் கேப்ரியேல்-தொகுப்பு
RSC சுட்டெண் RXNO:0000103

கேப்ரியேல் சல்போனமைடுகள் மற்றும் இமைடுகள் ஆகியவற்றின் அல்கைலேற்றத்தையும் உள்ளடக்கி பின்னர், அமீன்களைப் பெறும் வகையில் ஏதுவாக பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது.[5][6]

அம்மோனியாவின் அல்கைலேற்றத்தின் மூலம் அமீன்களைப் பெறும் முறையானது பெரும்பாலும் தெரிவுசெய்யப்படாததும், செயல்திறனற்றதுமான வழிமுறையாகும். கேப்ரியேல் முறையில், தாலிமைடு எதிரயனியானது H2N க்கான மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.

வழக்கமான கேப்ரியேல் தொகுப்புமுறை

தொகு

இந்த முறையில், சோடியம் தாலிமைடின் சோடியம் அல்லது பொட்டாசியம் உப்பானது ஓரிணைய அல்கைல் ஆலைடுடன் N-அல்கைலேற்றம் செய்யப்பட்டு தொடர்புடைய N-அல்கைல்தாலிமைடைத் தருகிறது.[7][8][9]

 

அமில நீராற்பகுப்பின் காரணமாக ஓரிணைய அமீனானது அமீன் உப்பாக வெளியிடப்படுகிறது.[10] மாற்றாக, ஐதரசீனை உட்படுத்திய இங்-மான்ஸ்கே வழிமுறையைக் கொண்டும் இந்த செயல்முறை நிகழ்த்தப்படலாம். இந்த முறையானது ஓரிணைய அமீனுடன் தால்ஐதரசைடை வீழ்படிவாகத் தருகிறது. (C6H4(CO)2N2H2):

C6H4(CO)2NR + N2H4 → C6H4(CO)2N2H2 + RNH2

பொதுவாக கேப்ரியேல் தொகுப்பு முறை ஈரிணைய அல்கைல் ஆலைடுகளுடன் வினையைத் தரத் தவறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Sheehan, J. C.; Bolhofer, V. A. (1950). "An Improved Procedure for the Condensation of Potassium Phthalimide with Organic Halides". J. Am. Chem. Soc. 72 (6): 2786. doi:10.1021/ja01162a527. 
  2. Gibson, M.S.; Bradshaw, R.W. (1968). "The Gabriel Synthesis of Primary Amines". Angew. Chem. Int. Ed. Engl. 7 (12): 919. doi:10.1002/anie.196809191. 
  3. Mitsunobu, O. Compr. Org. Synth. 1991, 6, 79–85. (Review)
  4. Gabriel, S. (1887). "Ueber eine Darstellung primärer Amine aus den entsprechenden Halogenverbindungen". Ber. 20: 2224. doi:10.1002/cber.18870200227. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k90711d/f133.chemindefer. 
  5. Hendrickson, J (1975). "New "Gabriel" syntheses of amines". Tetrahedron 31 (20): 2517. doi:10.1016/0040-4020(75)80263-8. 
  6. Ulf Ragnarsson; Leif Grehn (1991). "Novel Gabriel Reagents". Acc. Chem. Res. 24 (10): 285–289. doi:10.1021/ar00010a001. 
  7. T. O. Soine and M. R. Buchdahl "β-Bromoethylphthalimide" Org. Synth. 1952, volume 32, 18. எஆசு:10.15227/orgsyn.032.0018
  8. C. C. DeWitt "γ-Aminobutyric Acid" Org. Synth. 1937, volume 17, 4. எஆசு:10.15227/orgsyn.017.0004
  9. Richard H. F. Manske "Benzyl Phthalimide" Org. Synth. 1932, volume 12, 10. எஆசு:10.15227/orgsyn.012.0010
  10. Khan, M. N. (1995). "Kinetic Evidence for the Occurrence of a Stepwise Mechanism in the Hydrazinolysis of Phthalimide". J. Org. Chem. 60 (14): 4536. doi:10.1021/jo00119a035.