சிக்மண்ட் கேப்ரியேல்

செருமானிய வேதியியலாளர்

சிக்மண்ட் கேப்ரியேல் (Siegmund Gabriel) (7 நவம்பர் 1851 – 22 மார்ச் 1924) ஒரு செருமானிய வேதியியலாளர் ஆவார்.[1]

சிக்மண்ட் கேப்ரியேல்
Siegmund Gabriel3.jpg
சிக்மண்ட் கேப்ரியேல்
பிறப்புநவம்பர் 7, 1851(1851-11-07)
பெர்லின், செருமனி
இறப்பு22 மார்ச்சு 1924(1924-03-22) (அகவை 72)
பெர்லின், செருமனி
தேசியம்செருமன்
பணியிடங்கள்பெர்லின் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகேப்ரியேல் தொகுப்பு முறை

வாழ்வும் பணியும்தொகு

கேப்ரியேல் பெர்லினில் பிறந்தார். பெர்லினில் உள்ள பள்ளியில் பயின்றார். சில பருவங்களை பெர்லின் பல்கலைக்கழகத்தின் பயின்ற அவர் பின்னர் எய்டெல்பெர்க் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு அவர் இராபர்ட் வில்கெம் புன்சென் என்பவருடன் இணைந்து செய்த பணிக்காக 1874 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். 1921 ஆம் ஆண்டுவரை அவர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். 1887 ஆம் ஆண்டில் தனது இணை ஆராய்ச்சியாளர் சேம்சு டார்ன்புஷ் என்பவருடன் இணைந்து கேப்ரியேல் தொகுப்பு முறை என்ற வேதி வினையைக் கண்டறிந்தார். இவ்வினையே 1910 ஆம் ஆண்டில் இராபின்சன்-கேப்ரியேல் தொகுப்பு முறையாக மாறியது.[2]

மேற்கோள்கள்தொகு

  1. "Prof. Sigmund Gabriel". Geni. 1 செப்டம்பர் 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Siegmund Gabriel". Prabook. 1 செப்டம்பர் 2019 அன்று பார்க்கப்பட்டது.