கேப்ரோயிடே

கேப்ரோயிடே (பன்றி மீன்கள்)
Boarfishes
புதைப்படிவ காலம்:Eocene–Recent
தட்டையான ஆண்டிகோனியா கேப்ரோசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகெலும்பி
வகுப்பு:
ஆக்டினோப்டெர்ஜி
வரிசை:
பெர்சிபார்மிசு
குடும்பம்:
கேப்ரோயிடே

கேப்ரோயிடே (Caproidae) அல்லது பன்றி மீன்கள் எனப்படுவது (boarfishes), சிறிய மீன் குடும்பமாகும். இதில் 12 கடல் மீன் சிற்றினங்கள் இரண்டு பேரினங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை முன்னர் டோரிசுடன் செய்பார்மிசில் வகைப்படுத்தப்பட்டன.[1] ஆனால் தற்போது இவை பேர்சிஃபார்மீசில் வால் சட்டகம் அடிப்படையில் மறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. பன்றி மீன்கள் இந்தியப் பெருங்கடல், அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் காணப்படுகின்றன. இவை முக்கியமாக 50 m (160 அடி) ஆழத்திற்குக் கீழாக வாழ்கின்றன.[2]

பன்றி மீன்கள் மெல்லிய உடல்களைக் கொண்டுள்ளன. இவைச் சிறிய வகை மீன்களே. ஒரு சில இனங்களின் உடல் நீளம் 30 செ.மீ. வரை வளரக்கூடின. இவற்றின் நிறமானது சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளியாகும்.

சுமார் 48.6 முதல் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் காலத்தில், இயோசீன் சகாப்தத்தின் நடுப்பகுதியில் கேப்ராய்டு மீன்களின் தொல்லுயிர் எச்சங்கள் காணப்பட்டுள்ளன.[3]

மேலும் காண்க தொகு

  • பென்டசெரோடிடே (ஆர்டர் பெர்சிஃபோர்ம்ஸ்) குடும்பத்தின் சில மீன்கள் பன்றி மீன் என்றும் அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "family Caproidae". TheFreeDictionary.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-11.
  2. "FAMILY Details for Caproidae - Boarfishes". www.fishbase.se. பார்க்கப்பட்ட நாள் 2021-07-11.
  3. TY - JOUR AU - Baciu, Dorin AU - Bannikov, A. AU - Santini, Francesco PY - 2005/01/01 SP - 381 EP - 390 T1 - A new species of Caproidae (Acanthomorpha, Teleostei) from the Messinian (upper Miocene) of Oran (Algeria) VL - 27 JO - GEODIVERSITAS ER -

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்ரோயிடே&oldid=3534977" இலிருந்து மீள்விக்கப்பட்டது