கேமரூன் கார்டன்


கேமரூன் கார்டன் (Cameron Gordon) அமெரிக்காவின் ஆசுடனில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார். 1945 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். சித் டபிள்யூ. ரிச்சர்ட்சன் அறக்கட்டளை என்ற சமுதாயத் தொண்டு நிறுவனத்தின் அரசப் பிரதிநிதித்துவ தலைவராகவும் இருக்கிறார்.[1] கணிதவியலில் முடிச்சுக் கணிதம் அல்லது முடிச்சுக் கருத்தியக் கோட்பாட்டில் ஆற்றிய பணிகளுக்காக இவர் அறியப்படுகிறார். மார்க் குல்லர், இயான் லுக்கே மற்றும் பீட்டர் பாலே ஆகியோரின் முப்பரிமாண இடவியலின் சுழற்சி அறுவை சிகிச்சை தேற்றத்தில் இவரின் குறிப்பிடத்தக்க முடிவுகள் உள்ளன. முடிச்சு கணிதமானது அவற்றின் நிரப்பிகளால் தீர்மானிக்கப்படுகிறது என்பது கணிதவியலாளர் லூக்கியுடன் இவரது பணியின் முக்கிய அம்சமாக இருந்தது. கார்டனும் இசுமித்து அனுமானத்தின் தீர்மானத்தில் ஈடுபாடாக இருந்தார். ஆண்ட்ரூ கேசனும் கார்டனும் 'வலுவான குறைக்கவியலா ஈகார்டு பிளத்தல்' குறித்த அடிப்படைத் தேற்றங்களை வரையறுத்து நிரூபித்தார்கள். மேலும் இவர்கள் 'ஈகார்டு பிளத்தலை' நவீனமயமாக்கினர். இவர்கள் இசுலைசு-ரிப்பன் யூகத்திலும் பணியாற்றி, "காசன்-கார்டன் மாற்றமிலி"களைக் கண்டுபிடித்தனர்.

2010 இல் கேமரூன் கார்டன்.

கார்டன் 1999 ஆம் ஆண்டில் குகனெய்ம் உதவித்தொகை பெறும் ஆய்வாளராக இருந்தார்.[2] மேலும் 2005 ஆம் ஆண்டில் கார்டன் எடின்பர்க் அரச கழகத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Mathematics Faculty பரணிடப்பட்டது 2010-01-24 at the வந்தவழி இயந்திரம், Department of Mathematics, University of Texas at Austin. Accessed January 22, 2010.
  2. Guggenheim Fellowships Awarded. Notices of the American Mathematical Society, vol. 46 (1999), no. 6, p. 685
  3. RSE fellows. Times Higher Education, March 18, 2005. Accessed January 22, 2010.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமரூன்_கார்டன்&oldid=3815919" இலிருந்து மீள்விக்கப்பட்டது