கேம்பிரிட்ச் அறிவியல் திருவிழா

கேம்பிரிட்ச் அறிவியல் திருவிழா (Cambridge Science Festival) என்பது இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ச் நகரில் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பாக மார்ச்சு மாதத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் அறிவியல் நிகழ்வுகளின் தொகுப்பாகும். ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் மிகப்பெரிய அறிவியல் திருவிழாவும் இதுவேயாகும் இவ்விழாவில் 30000 பார்வையாளர்கள் பங்கேற்று 250 நிகழ்ச்சிகளைக் கண்டு பயன்பெறுகிறார்கள்.[1] .[2] பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் மாணவர்களும் அவர்களுடைய ஆய்வுக்கூடங்களையும் சொற்பொழிவு அரங்குகளையும் பொதுமக்களுக்காக திறந்து விட்டு இலவசமாக கண்காட்சிகள் செயல் விளக்கங்கள் முதலியன நிகழ்த்தப்பட்டன.

கேம்பிரிட்ச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் 1994 ஆம் ஆண்டில் இவ்விழாவைத் தொடங்கினர். அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வத்தைத் தூண்டுவதையும் எளிதாக அத்துறைகளை அணுகுவதையும் இலக்காகக் கொண்டு இத்திருவிழா தேசிய அறிவியல் வாரத்தின்பால் ஈர்க்கப்பட்டது. கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிகளில் இளைஞர்களை ஈடுபடுத்தவும் ஊக்குவித்தது.[3][4]

2015 ஆம் ஆண்டு மார்ச்சு 9 முதல் 22 வரை 21 வது அறிவியல் திருவிழா கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு அங்கமான ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்த அனைத்துலக ஒளி ஆண்டை குறிக்கும் விதமாக, இவ்விழாவும், ஓளியறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது.[5]

மேற்கோள்கள்தொகு

  1. "University of Cambridge Science Festival 2011". BBC News. பார்த்த நாள் 21 March 2015.
  2. "About - www.sciencefestival.cam.ac.uk". பார்த்த நாள் 21 March 2015.
  3. "Two exciting decades of scientific fun and games". Cambridge News. பார்த்த நாள் 21 March 2015.
  4. "21st Cambridge Science Festival hopes to inspire the next generation of scientists". Anglia - ITV News. பார்த்த நாள் 21 March 2015.
  5. "Reaching out in the International Year of Light". பார்த்த நாள் 21 March 2015.

புற இணைப்புகள்தொகு

படக்காட்சியகம்தொகு