கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக முதனிகள்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் முதனிகள் (ஆங்கிலம்: Cambridge University primates) வழக்கு என்பது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 1998-ம் ஆண்டு தனது ஆய்வகத்தில் விலங்குகளைக் கொண்டு நடத்திய அறிவியல் ஆராய்ச்சிகளின் மீதான வழக்கு ஆகும். முதனிகளைக் கொண்டு அப்பல்கலைக்கழகம் நடத்திய அறிவியல் பரிசோதனைகள் சில பிரித்தானிய உடற்கூறாய்வு ஒழிப்பு ஒன்றியம் (British Union for the Abolition of Vivisection [BUAV]) 1998-ம் ஆண்டு தான் நடத்திய பத்து மாத கால இரகசிய விசாரணையில் அறிக்கை ஒன்றை 2002-ம் ஆண்டு வெளியிட்டதன் வாயிலாகப் பொதுமக்களின் கவனத்திற்கு வந்தன.[1] மார்மோசெட் வகை விலங்குகளின் மீது நடத்தப்பட்ட அந்த அறிவியல் ஆய்வுகளின் ஒரு பகுதியாக அவ்விலங்குகளுக்குப் பக்கவாதம், பார்கின்சன் நோய் ஆகியவற்றின் அறிகுறிகளை உருவாக்கும் நோக்கத்தில் அவற்றின் மூளையின் சில பாகங்கள் அகற்றப்பட்டன.[2] இவற்றில் சில ஆராய்ச்சிகள் மூளையைப் பற்றி மேலும் அறிய எண்ணி செய்யப்பட்ட கோட்பாட்டு ரீதியிலான ஆராய்ச்சியாகவும் (theoretical research), மேலும் சில பயன்பாட்டு ஆராய்ச்சியாகவும் (applied research) இருந்தன.[3]
இப்பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட புலனாய்வில் வெளிவந்தது யாவும் விலங்குகளின் மீதான மனித துஷ்பிரயோகத்தின் எடுத்துக்காட்டுகள் என்றும் இது விலங்குகள் (அறிவியல் நடைமுறைகள்) சட்டம் 1986 மூலம் விலங்குகள் போதிய அளவு பாதுகாக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது என்றும் பிரித்தானிய உடற்கூறாய்வு ஒழிப்பு ஒன்றியம் கூறியது. இவ்வழக்கை மதிப்பாய்வு செய்த விலங்குகளுக்கான தலைமை அரசாங்க ஆய்வாளர் பல்கலைக்கழகத்திற்கு இந்த அறிவியல் பரிசோதனைகளுக்கான திட்ட உரிமங்கள் வழங்கப்படக்கூடாது என்ற பிரித்தானிய உடற்கூறாய்வு ஒழிப்பு ஒன்றியத்தின் வாதத்தை ஏற்க மறுக்க, அந்த ஒன்றியம் அதனை நீதித்துறை மறுஆய்வு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது.[4] இதனை நான்கு கோணங்களில் விசாரித்த நீதிமன்றம், மூன்று கோணங்களில் ஒன்றியத்திற்கு எதிராகத் தீர்ப்பளித்தாலும் மீதமுள்ள ஒரு கோணத்தில் "உள்துறை அலுவலகமானது அந்த அறிவியல் பரிசோதனைகளை 'கணிசமானவை' எனாது 'மிதமானவை' என்று தவறாக வகைப்படுத்தி அதன் மூலம் பரிசோதனைகளில் ஆட்படுத்தப்பட்ட மார்மோசெட் விலங்குகளின் துன்பத்தை மிகவும் குறைத்து மதிப்பிட்டுள்ளது" என்று கூறியது. இதன் விளைவாக விலங்குகளின் துன்பத்தை வகைப்படுத்துவதற்கான தனது நடைமுறைகளை மறுஆய்வு செய்வதாக உள்துறை அலுவலகம் அறிவித்தது.[5]
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள் தரவுகள்
தொகு- ↑ "Witness the Cutting Edge of British Medical Research". British Union for the Abolition of Vivisection. Archived from the original on 7 சூன் 2007. பார்க்கப்பட்ட நாள் 24 பெப்பிரவரி 2006.
- ↑ Bird, Maryann (7 December 2003). "Animal Passions". Time magazine. Archived from the original on 13 May 2008.
- ↑ "Cambridge University". British Union for the Abolition of Vivisection. Archived from the original on 7 சூன் 2007. பார்க்கப்பட்ட நாள் 24 பெப்பிரவரி 2006.
- ↑ "Animal group's court review win". BBC News. 12 April 2005. http://news.bbc.co.uk/1/hi/england/cambridgeshire/4436099.stm.
- ↑ James Randerson (28 July 2007). "Government downplayed animal suffering in experiments". The Guardian. https://www.theguardian.com/science/2007/jul/28/animalrights.