கேரட் ஊறுகாய்
கேரட் ஊறுகாய் என்பது ஒரு உப்புநீரில் ஊர வைத்து செய்யபட்ட ஊறுகாய், மேலும் வினிகர் அல்லது பிற கரைசலில் ஊறுகாய் செய்யப்பட்டு, ஒரு அமிலக் கரைசலில் கேரட்டை ஊறவைப்பதன் மூலமோ அல்லது லாக்டோ நொதித்தல் மூலம் புளிக்க செய்வதன் மூலமோ சிறிது நேரம் புளிக்க வைக்கப்படுகிறது. ஊறுகாய்களாக தயாரிக்கப்படும் கேரட்டுகள் பெரும்பாலும் வியட்நாமிய உணவு வகைகளுடன் பரிமாறப்படுகின்றன, இதில் பான் மீ அல்லது பசியை தூண்டக் கூடிய பொருளாக பயன்படுகிறது.
பொதுவான வகைகள்
தொகுமெக்சிகோவில் தயாரிக்கப்படும் கேரட் ஊறுகாய்களுக்கு எஸ்கேபெச்(escabeche) கேரட் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஊறுகாய் ஆனது பொதுவாக வெங்காயம், மிளகுத்தூள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் வினிகரில் ஊறவைத்து செய்யப்படுகிறது. அவை மிளகுத்தூள் மற்றும் பிற சுவையூட்டல்களின் சுவைகளுடன் ஒரு முறுமுறுப்பான, கேரட் அமைப்பை பராமரிக்கின்றன. இந்த காரமான, ஊறுகாய் காய்கறிகள் பாரம்பரியமாக உணவுடன் பரிமாறப்படுகின்றன.
வியட்நாமிய கலாச்சாரத்தில், ஊறுகாய்களாக தயாரிக்கப்படும் கேரட் வியட்நாமிய முட்டை ரோல்ஸ் அல்லது பான் மீ மற்றும் பல்வேறு சூப்கள் போன்ற உணவு வகைகளில் ஒரு மூலப்பொருளாகப் பரிமாறப்படுகிறது. வியட்நாமிய-அமெரிக்க சந்தைகளில், செய்யப்பட்ட கேரட் ஊறுகாய் மற்றும் டைகோன் மொத்தமாக விற்பனைக்கு கிடைக்கிறது, மேலும் வியட்நாமில், இந்த இரண்டு ஊறுகாய்களும் தயாரிக்கப்பட்டு வழக்கமான காய்கறி சந்தை விற்பனையாளர்களால் சிறிய பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படுகின்றன. அவை கடைகளிலிருந்து வாங்கபட்ட உடன் வீட்டில் குளிரூட்டப்பட்டு பதபடுத்தபட வேண்டும், இருப்பினும் அவை குளிர்சாதன பெட்டியில் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
ஜப்பானிய சமையல் முறையில் தயரிக்கபடும் கேரட் ஊறுகாய் ஆனது பல்வெறு ஜப்பானிய பாரம்பரிய உணவு வகைகளுடன் சேர்த்து பரிமாறப்படுகின்றது. பழங்கள் மற்றும் காய்கறிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஊறுகாய்கள் ( சுகேமோனோ ) ஜப்பானிய உணவின் ஒரு முக்கிய அங்கமாகும். ஜப்பானில் ஊறுகாய் செய்வது குளிர்சாதனப் பெட்டி பயன்பாட்டிற்கு முன்னரே நடைபெற்று வருகிறது, எனவே கேரட் ஊறுகாய் போன்ற சுகேமோனோ நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். சுகேமோனோவை உருவாக்கப் பயன்படுத்தப்படும் வெவ்வேறு முறைகள், உதாரணமாக எளிமையான உப்பு அல்லது வினிகர் உப்புநீர், வளர்ப்பு அச்சுகள் மற்றும் நொதித்தல் சம்பந்தப்பட்ட பல்வேறு செயல்முறைகள் வரை பயன்படுத்தப்படுகின்றன. கேரட்டை ஊறுகாய் செய்யும் ஒரு பொதுவான முறை மிசோசுக் என்று அழைக்கப்படுகிறது. மிசோஸூக் ஊறுகாய்கள் மிசோவில் காய்கறிகளை மூடுவதன் மூலம் உப்பு, மிசோ சுவையை சேர்த்தது தயாரிக்கப்படுகின்றன. மாற்றாக, கேரட் ஊறுகாய்களாக பெரும்பாலும் நுகாசுகே முறையில் வறுத்த அரிசி, தவிடு, உப்பு, கொன்பு மற்றும் பிற பொருட்களின் கலவையில் புளிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. Nukazuke கேரட் ஊறுகாய் பொதுவாக செட் உணவுகளுடன் பரிமாறப்படுகிறது.
பாரம்பரிய ஊறுகாய் கேரட் கஜர் நு அதானு(gajar nu athanu) என்பது இன்தியாவின் பாரம்பரிய கேரட் ஊறுகாய் ஆகும். அவை தோலுரித்த கடுகு விதைகளால் ஊறுகாய்களாக தயாரிக்கப்பட்டு சூடாகவும்,சுவையாகவும் தயாரிக்கப்பட்டு உணவுடன் பரிமாறப்படுகின்றன. இவை விரைவாக தயாரிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் சாப்பிட தயாராக இருக்கும்.
கேரட் ஊறுகாய்களின் பல்வெறு வகைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. ஊறுகாய் செய்வது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது. கேரட் விதைகள், காட்டு வேர்கள் மற்றும் மருந்தாகப் கிமு 200 க்கு முன் பயன்படுத்தப்பட்டது (ஊதா நிற மாறுபாடு மத்திய ஆசியாவில் சுமார் 900 CE இல் வளர்க்கப்பட்டாலும்).
மேலும் பார்க்கவும்
தொகு- ஊறுகாய் உணவுகளின் பட்டியல்
- என்குர்டிடோ - ஊறுகாய்களாக தயாரிக்கப்படும் காய்கறி உணவு, மெசோஅமெரிக்கன் பிராந்தியத்தில் பசியைத் தூண்டும், பக்க உணவாக மற்றும் காண்டிமெண்டாகப் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்புகள்
தொகு
- "History of Carrots - A brief summary and timeline". www.carrotmuseum.co.uk. Archived from the original on 2022-07-28. Retrieved 2020-01-28.