கேரளபுரம் திருவிதாங்கோட்டிற்கும், தக்கலைக்கும் இடைப்பட்ட ஒரு சிறிய கிராமம் ஆகும். இங்கிருக்கும் சிவன் கோவிலிலுள்ள விநாயகர் கோவில் தனிச்சிறப்பு உடையது. இங்குள்ள விநாயகர் சிலை சந்திரகாந்தக் கல்லால் உருவாக்கப்பட்டது. இவ்விநாயகர் மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை (உத்தராயண காலம்) வெண்மையாகவும், ஆவணி மாதம் முதல் தை மாதம் வரை (தட்சிணாயண காலம்) கருமையாகவும் காட்சியளிக்கும். இங்கிருக்கும் கிணற்று நீரும் நிறம் மாறும். சரசுவதி பூசையின் போது பத்மனாபபுரத்தில் இருந்து வரும் சரசுவதி சிலையை இங்கு வைத்து பூசை செய்தே திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்வர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரளபுரம்&oldid=1816711" இலிருந்து மீள்விக்கப்பட்டது