திருவிதாங்கோடு
திருவிதாங்கோடு (ஆங்கிலம்:Thiruvithankodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
திருவிதாங்கோடு | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | கல்குளம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
18,723 (2011[update]) • 3,601/km2 (9,327/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 5.2 சதுர கிலோமீட்டர்கள் (2.0 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/thiruvithancode |
இவ்வூரில் இரண்டு முத்தாரம்மன் ஆலயங்களும், ஒரு சிவன் கோவிலும், மூன்று வினாயகர் கோவில்களும் காணப்படுகின்றன. ஏசுநாதர் தேவாலயமும், நான்கு மசூதிகளும் உள்ளன. இங்குள்ள [[படிக்கிணறு பிரசித்தி பெற்றது.
அமைவிடம்
தொகுநாகர்கோவிலிலிருந்து - கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 14 கி.மீ. தூரத்திலுள்ள தக்கலையிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்தில் திருவிதாங்கோடு அமைந்துள்ளது. திருவிதாங்கோட்டிற்குக் கிழக்கே நாகர்கோவில் 21 கி.மீ.; மேற்கே மார்த்தாண்டம் 15 கி.மீ.; வடக்கே குலசேகரம் 15 கி.மீ.; தெற்கே திங்கள்சந்தை 4 கி.மீ. தொலைவில் உள்ளன. அருகமைந்த தொடருந்து நிலையம் இரணியல் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு5.2 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4469 வீடுகளும், 18723 மக்கள்தொகையும் கொண்டது. [4]
வரலாறு
தொகுமுன்னர் திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தின் தலைநகராக திருவிதாங்கோடு இருந்தது எனவும், திரு-விதான்-கோடு என்பது மருவியே திருவாங்கூர் ஆனது என்றும் திருவாங்கூர் மேனுவலில் கூறப்பட்டுள்ளது.
கல்வி & தொழில்
தொகுஓர் அரசு நடுநிலைப் பள்ளியும், ஓர் அரசு உயர்நிலைப் பள்ளியும் உள்ளன. இங்கு ஒரு முன்மாதிரித் தொழிற்சாலை உள்ளது.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "திருவிதாங்கோடு பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-24.
- ↑ "பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2020-05-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-24.