கேரள உழவர் கூட்டமைப்பு

ஓர் இந்திய நிறுவனம்

கேரள உழவர் கூட்டமைப்பு (Kerala Farmers Federation) இந்தியாவின் கேரள மாநிலத்தில் 2017 ஆம் ஆண்ட்டு நிறுவப்பட்ட ஓர் இலாப நோக்கமற்ற விவசாய அமைப்பாகும்.[1]

விவசாய பொருட்களின் விலைகள் தொடர்ந்து குறைந்து வருவதை தடுக்கவும் அரசியல் அக்கறையின்மையை எதிர்ப்பதற்காகவும் கேரளாவில் உள்ள விவசாயிகளும் அவர்களது அமைப்புகளும் ஒரே குடையின் கீழ் வந்து கேரள உழவர் கூட்டமைப்பு என்ற ஒரு வலுவான அமைப்பு உருவாக்கப்பட்டது.

இக்கூட்டமைப்பில் 670,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் 1,400,000 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உழவர் உரிமைகள், நிலையான விவசாய நடைமுறைகள், வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் விவசாய நிலத்தை வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை இக்கூட்டமைப்பு பரப்புகிறது.

கேரள உழவர் கூட்டமைப்பு தனது பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தை கொச்சியின் எடப்பள்ளி வி.வி கோபுர வளாகத்தில் திறந்து புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயிகள் இத்தளத்தில் குறைகளையும் புகார்களையும் பதிவேற்றலாம். பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு அனைத்து சட்ட உதவி மற்றும் நிதி உதவிகளையும் வழங்கவும் கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது. இந்த நடவடிக்கையால் கிட்டத்தட்ட 50 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[1][2][3][4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Kerala's farmers to fight 'injustice' under new collective".
  2. "Kerala Farmers Federation – Upholding, uplifting and empowering the farming community". keralafarmersfederation.org. Archived from the original on 2020-02-18. பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
  3. "KeFF launches website for farmers".
  4. "Growers want govt. to stop import of Vietnamese pepper". 22 November 2017 – via www.thehindu.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_உழவர்_கூட்டமைப்பு&oldid=3551417" இலிருந்து மீள்விக்கப்பட்டது