கேரள மாநில தொல்லியல் துறை

கேரள மாநில தொல்லியல் துறை என்பது கேரள அரசின் ஒரு துறையாகும்.இது டிசம்பர் 1891 ல் ஆரம்பிக்கப்பட்ட திருவாங்கூர் மாநில தொல்லியல் துறையை தோற்றமாகக் கொண்டது.இது கலாச்சார துறையின் ஒரு அங்கமாக உள்ளது.1956 ஆம் ஆண்டில் கேரள அரசு தொல்லியல் துறை உருவாக்க பட்டது.

வரலாறு

தொகு

திருவாங்கூர்

தொகு

1891 இல், அப்போதைய திருவாங்கூர் மகாராஜா, மூலம் திருநாள் ராம வர்மா அவர்கள் தொல்லியலில் துறை தொடங்க மகாராஜா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய பி.சுந்தரம் பிள்ளையிடம் மாத மானியம் ரூபாய் 50 வழங்க ஒப்புதல் அளித்தார்.ஆனால் 1895-96 மட்டுமே தொல்லியல் துறை தொடங்கப்பட்டது.1908 ல் முதல் கண்காணிப்பாளராக கல்வெட்டியல் நிபுணர் டி.ஏ.கோபிநாத ராவ் நியமிக்கப்பட்டார்.1910 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர் தொல்பொருள் தொட‌ர்பான புத்தகத்தின் முதல் தொகுதி வெளியே வந்தது.

கொச்சி

தொகு

இதேபோல், முன்னாள் கொச்சி மாநிலத்தில் 1925 இல் சமஸ்கிருத கல்லூரியில் இத்துறை தொடங்கப்பட்டது.பின்னர் 1949-ம் ஆண்டு கொச்சி தொல்லியல் துறை திருவாங்கூர் தொல்லியல் துறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.

1956 ஆம் ஆண்டில் கேரள அரசு தொல்லியல் துறை உருவாக்க பட்டது.[1]

இணையதளம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  • Cumming, John (1939). Revealing India`s Past: A Record Of Archaeological Conservation And Exploration In India And Beyond. Genesis Publishing Ltd. p. 297.
  1. "Evolution of Archaeology". கேரள மாநில தொல்லியல் துறை இணையத்தளம். http://archaeology.kerala.gov.in/index.php/about-us/evolution-of-archaeology.