கேரி தோக்கரி

அமெரிக்க ஆழ்மயக்க நோயாளி

கேரி பிரஞ்சு தோக்கரி (Gary French Dockery ) பலத்த காயம் காரணமாக ஏழரை ஆண்டுகள் ஆழ்மயக்கத்தில் இருந்தார். அமெரிக்க காவல்துறை அதிகாரியான இவர் 1996 ஆம் ஆண்டு ஆழ்மயக்கத்திலிருந்து வெளிவந்து உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். நண்பர்களை அடையாளம் கண்டுகொண்டார். கடந்த ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். பின்னர் மீண்டும் ஆழ்மயக்க நிலைக்குச் சென்று ஒரு வருடம் கழித்து இறந்தார். அமெரிக்காவின் டென்னசி மாநிலம் ஆமில்டன் மாகாணத்தைச் சேர்ந்த வால்டன் நகரில் இந்நிகழ்வு நடைபெற்றது.

வாழ்க்கை தொகு

1988 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று குடிபோதையில் இருந்த சாமுவேல் பிராங் டவுனி என்பவர் காவல்துறை அதிகாரியான தோக்கரியை நெற்றியில் சுட்டார். . முன்னதாக சாமுவேல் பிராங் டவுனியின் அண்டை வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் தோக்கரி டவுனியை விசாரணை செய்து கண்டித்தார். காவல்துறையினரை பழிவாங்க விரும்பியதால் தோக்கரியை சுட்டதாக டவுனி பின்னர் காவல்துறையினரிடம் கூறினார். டவுனிக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தோக்கரி தொடர்ச்சியான பதிலளிக்க இயலாத விழிப்புணர்வு நோய் நிலையை அடைந்தார் . அவ்வப்போது சில கண் சிமிட்டல்கள் மற்றும் கூக்குரல்களைத் தவிர இவரால் வேறு எந்த தொடர்பும் கொள்ள முடியவில்லை. இந்நிலை மூளையின் ஒரு பகுதி இன்னும் வேலை செய்வதைக் குறித்தது என்றாலும் தோக்கரி சுயநினைவில் இல்லை. [1] [2] [3]

திங்கட்கிழமை, பிப்ரவரி 12, 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி திங்கட் கிழமையன்று தோக்கரி பேச ஆரம்பித்தார். பழைய நண்பர்களை அடையாளம் கண்டுகொண்டார், தனது குதிரைகளின் பெயர்களை நினைவு கூர்ந்தார், முகாம் பயணங்களை நினைவு கூர்ந்தார். [1] [2] [4] செவ்வாய்கிழமை அவர் குறைவாகவே பேசினார், அடுத்த நாள் முதல் பேசவே இல்லை.

பேசத் தொடங்கிய நான்கு நாட்களுக்குப் பிறகு, உயிருக்கு ஆபத்தான தொற்று காரணமாக தோக்கரி நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். [4] 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று தோக்கரி தனது 43 வயதில் நுரையீரல் இரத்தக் கட்டி பாதிப்பால் இறந்தார். தோக்கரி சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் இருந்து டென்னசி, சட்டனூகாவில் உள்ள எர்லாங்கர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். காலை 9:52 மணிக்கு தோக்கரி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Smothers, Ronald (1996-02-16). "Injured in '88, Officer Awakes in '96" (in en-US). The New York Times. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/1996/02/16/us/injured-in-88-officer-awakes-in-96.html. 
  2. 2.0 2.1 "Top 10 Comas - TIME" (in en-US). Time. 2008-12-08. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-781X. http://content.time.com/time/specials/packages/article/0,28804,1864940_1864939_1864914,00.html. 
  3. Comatose Officer Speaks After 7 1/2 Years, But Family's Joy Shortlived
  4. 4.0 4.1 "Ex-Officer Is Alert After Surgery but Not Talking Again" (in en-US). The New York Times. 1996-02-17. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/1996/02/17/us/ex-officer-is-alert-after-surgery-but-not-talking-again.html. 
  5. "Brain-damaged policeman who emerged from comalike state dies" (in en-US). The Associated Press. 1997-04-15. https://apnews.com/article/8faca82c82e16c2f1b38d17c20bda788. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரி_தோக்கரி&oldid=3416574" இலிருந்து மீள்விக்கப்பட்டது