கேரீநேம்
கேரீநேம் (KRename), ஒர் கே டீ ஈ மென்பொருளாகும், இது ஒரே நேரத்தில் பல கோப்புகளையும் கோப்பகங்களையும் பெயர் மாற்ற உதவுகிறது. கேடிஈ பிளாசுமா பணிச்சூழல்களைப் பயன்படுத்தும் லினக்சு விநியோகங்களில் இம்மென்பொருள் முன்னிருப்பாக இருக்கும்.
வடிவமைப்பு | டொமினிக் சைச்டர் |
---|---|
தொடக்க வெளியீடு | சனவரி 5, 2004 |
அண்மை வெளியீடு | 5.0.1 / அக்டோபர் 5 2020[1] |
மொழி | சி++ |
இயக்கு முறைமை | லினக்சு |
கிடைக்கும் மொழி | பன்மொழி |
மென்பொருள் வகைமை | Batch renaming utility |
உரிமம் | GPL-2.0-அல்லது அதற்குப் பிறகு |
இணையத்தளம் | https://userbase.kde.org/KRename |
அம்சங்கள்
தொகு- ஒரே நேரத்தில் பல கோப்புகளையும் கோப்பகங்களையும் பெயர் மாற்றுதல்
- ஒரு கோப்பகத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும் பெயர் மாற்றுதல்
- பெயர் மாற்றம் செய்யும் பொழுது மறைக்கப்பட்ட கோப்புகளை புறக்கணித்தல்
- எளிதில் பெயர் மாற்றங்களில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் பணிகளான பெரிய எழுத்தாக்குதல், சிறிய எழுத்தாக்குதல், ஒரு சொல்லில் உள்ள ஒரு எழுத்தை மட்டும் பெரிய எழுத்தாக மாற்றுதல்
- கோப்புப் பெயர்களுக்கு முன்னொட்டுகள், பின்னொட்டுகள் சேர்த்தல்
- கோப்புப் பெயர்கள் பகுதிகளை தேடுக் கருவி மூலம் தேடி மாற்றுதல் (தேவைப்பட்டால் சுருங்குறித்தொடரை அனுமதிக்கிறது)
- கோப்பு பெயர்களை வரிசைப்படுத்த எண்களை சேர்த்தல்
- கோப்புகளின் உரிமைகளை மாற்றுதல்
- கோப்புகளின் அணுகல் மற்றும் தேதி, நேரங்களை மாற்றுதல்
- MP3/ogg ஆகிய ஒலிக்கோப்பு வகைகளில் உள்ள ID3 என்ற மீதரவைப் பிரித்தெடுத்தல்
- படக் கோப்புகளிலிருந்து Exif என்ற மீதரவைப் பிரித்தெடுத்தல்
- தற்போதைய தேதி, நேரத்தை கோப்புப்பெயரில் சேர்த்தல்
- கோப்பு நீட்டிப்புகளை மாற்றுதல்
- செயல் தவறு செய்தவைகளை மீளமை செய்தல்
- விரும்பிய கோப்புகளை கைமுறையில் பெயர் மாற்றுதல்
- யாவாக்கிறிட்டு (JavaScript) என்ற நிரலாக்க மொழியைப் பயன்படுத்துதல்
- ஒலிபெயர்ப்பு
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Version 5.0.1". 5 October 2020.