மீதரவு, மேனிலைத் தரவு அல்லது மேல்தரவு (ஆங்கிலத்தில் மெட்டாடேட்டா (metadata)), ' என்பது பொதுவாக தரவுகளைப் பற்றிய ஒரு தரவு அல்லது தரவுகளை உள்ளடக்கிய தரவு எனலாம். ஊடங்கங்களைப் பற்றிப் பேசும்பொழுது, இதனை ஓர் ஊடகத்தின் ஏதேனும் ஒரு வகை "தரவுகளின் தரவுகள்" என்றும் சொல்லலாம். மேனிலைத் தரவு (மெட்டாடேட்டா) என்பது, பார்வையாளர்கள் பார்க்க அல்லது அனுபவம் பெற விரும்பும் அல்லது தேவைப்படும் ஒன்றை விவரிக்கும் உரை, ஒலி அல்லது படமாகும். பார்வையாளர் என்பது, ஒரு நபராகவோ, குழுவாகவோ அல்லது கணினி மென்பொருள் நிரலாகவோ கூட இருக்கலாம்.[1] உண்மையான தரவுகளை கண்டுபிடிக்கவும் தெளிவுபடுத்தவும் மெட்டாடேட்டா (தரவுகளின் தரவு) உதவுவதால் அது முக்கியமானதாகிறது.[1] மெட்டாடேட்டாவின் ஓர் உருப்படி, ஒரு தனி தரவையோ அல்லது உள்ளடக்க உருப்படியையோ அல்லது தரவுத்தளத் திட்டம் போன்ற பல உள்ளடக்க உருப்படிகள் மற்றும் பல படியமைப்புகளையோ தரவுத் தொகுப்பையோ விவரிக்கலாம். தரவு செயலாக்கத்தில், ஒரு பயன்பாட்டில் அல்லது சூழலில் கையாளப்படும் தரவுகளைப் பற்றிய தகவல்கள் அல்லது அவற்றின் ஆவணமாக்கம் ஆகியவற்றை அளிக்கிறது. பொதுவாக இது முதன்மை தரவின் அமைப்பு அல்லது திட்டத்தை வரையறை செய்கிறது.

எடுத்துக்காட்டாக, மேனிலைத் தரவுகளின் தனிப்பொருள்கள் அல்லது பண்புக்கூறுகள் (பெயர், அளவு, தரவு வகை, முதலியன) மற்றும் பதிவுகள் அல்லது தரவுக் கட்டமைப்புகள் (நீளம், புலங்கள், நிரல்கள் முதலியன) ஆகியவற்றைப் பற்றிய தரவுகள் மற்றும் தரவுகளைப் பற்றிய தரவுகள் (அது எங்கு வைக்கப்பட்டுள்ளது, அது எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது, உரிமைத்தன்மை முதலியன) ஆகியவற்றை ஆவணப்படுத்தும். தரவின் சூழல், தரம் மற்றும் நிலை அல்லது சிறப்புப் பண்புகள் ஆகியவற்றை விரித்துரைப்பதாகவும் மேனிலைத் தரவு (தரவுகளின் தரவு) இருக்கலாம். அது அதிக அல்லது குறைந்த குறிப்புள்ளடக்கம் கொண்டதாகப் (கிரானுலாரிட்டி அல்லது குறிநொய்மையுடன்) பதிவு செய்யப்படலாம்.

மேனிலைதரவிற்கான எடுத்துக்காட்டு கோப்புகளின் அமைப்புகளில் காணப்படுகின்றன. கோப்பு எந்த தேதியில் உருவாக்கப்பட்டது, கடைசியாக எப்போது மாற்றியமைக்கப்பட்டது, கோப்பு (அல்லது மேனிலைத்தரவே) கடைசியாக எப்போது அணுகப்பட்டது என்பவற்றைப் பதிவு செய்யும் மெட்டாடேட்டா, தேக்கி வைக்கப்பட்டுள்ள ஒவ்வொறு கோப்புடனும் இணைந்துள்ளது.

நோக்கம்

தொகு

மேனிலைத் தரவு, தரவுகளுக்கான சூழலை அளிக்கிறது.

மனிதர்கள் மற்றும் கணினிகள் தரவுகளைப் புரிந்துகொள்வது, பயன்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது ஆகியவற்றை மேம்படுத்த மெட்டாடேட்டா பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, மெட்டாடேட்டா, மற்றவர் புரிந்துகொள்ளும்படி தரவுகளை கருத்தியலாக விவரிக்கக்கூடும், மற்றவர் பயன்படுத்தும்படி தரவுகளை தொடரியல் ரீதியாகவும் விவரிக்கக்கூடும், இருவகை விவரிப்புகளும் இணைந்து தரவுகளை எவ்வாறு கையாள்வது என முடிவெடுத்தலை எளிதாக்கும்.

தரவின் தன்மை, அவற்றைப் பயன்படுத்துவதற்கான சூழல், அவற்றின் அவசியம் ஆகியவற்றோடு தரவு தொடர்பான பணிகளை திறம்படச் செய்ய மெட்டாடேட்டா தேவைப்படுகிறது. தனியாகவோ மொத்தமாகவோ பயன்படுத்தவும், பல்வேறு பயனர்களால் பல்வேறு இலக்குகளை அடையும் தேவவக்கு பயன்படவும், தரவு வழங்குநர்கள் பெரும்பாலும் மெட்டாடேட்டாவின் பல புலங்களை பயனர்களும் அணுகும் வகையில் அளிக்கிறார்கள். இப்பயனர்கள், மனித "இறுதிப் பயனர்கள்" அல்லது பிற கணினி அமைப்புகளாக இருக்கலாம்.

மெட்டாடேட்டாவின் பயன்பாட்டினைப் பற்றி மேலும் அறிய, கீழே உள்ள பயன் எனும் பிரிவைப் பார்க்கவும்.

எடுத்துக்காட்டுகள்

தொகு

இந்த எடுத்துக்காட்டுகள், குறிப்பிட்ட டிஜிட்டல் உருப்படிகளினை விவரிக்கும் மெட்டாடேட்டாவை பட்டியலிடுகின்றன. மெட்டாடேட்டாவின் சில வரையறைகளுடன் தெளிவாகவும் முரண்பாடின்றியும் இருப்பதற்காக, இந்த எடுத்துக்காட்டுகள், புத்தகம் போன்ற ஒரு ஜடப்பொருளில் உள்ள தரவு போலல்லாமல், ஒவ்வொரு நிகழ்வும் டிஜிட்டலாக்கப்பட்ட வடிவில் விவரிக்கப்படுகின்றன. (டிஜிட்டல் வடிவில் இல்லாத கருத்து தகவல்களைப் பொறுத்தமட்டில், மெட்டாடேட்டா, உள்ளடக்கத்தினை விவரிக்கும் ஒன்றே தவிர, ஜடப்பொருள்ரீதியாக தெரிவிப்பதல்ல).

பல நிகழ்வுகளில், மெட்டாடேட்டா உருப்படியின் உள்ளடக்கத்தினை(கருத்தியலாக) விவரிக்க பயன்படுவதையும் அந்த உருப்படி எவ்வாறு தோன்றியது (மெய்ப்பிக்கப்பட்டது) என்பதையும் கணினி அதைப் பயன்படுத்த தேவையான தகவல்கள் ஆகியவற்றையும் இந்த எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன. கணினி தொடர்பான விவரங்கள் பற்றிய தகவல்களின் கடைசித் தொகுப்பு, வழக்கமாக பயனர்க்குத் தெரியாதவகையில் மறைத்துவைக்கப்படுகிறது. ஆனால் உட்கோப்பின் பெயர், அமைவிடம், டிஜிட்டல் வடிவில் உள்ள உருப்படிக்கான உருவாக்க/அணுகல் எண்ணிக்கை ஆகியவை அதில் இருக்கும்.

ஒவ்வொரு சூழ்நிலைக்கும் மெட்டாடேட்டாவின் கருத்து தனித்தன்மை கொண்டதாக அமைவதால்—"ஒருவரது தரவு மற்றொருவரது மெட்டாடேட்டா"— எடுத்துக்காட்டுகளை உண்மையானதாக கருதாமல் விளக்குவதற்கானதாக கருத வேண்டும்.

வீடியோ பதிவு

தொகு

டிஜிட்டல் வீடியோ ரெகார்டர்களால் பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது படங்களில், மெட்டாடேட்டா அதிக அளவில் உள்ளது. இவற்றில் தலைப்பு, இயக்குநர், நடிகர்கள், பொருளடக்கம், பதிவு செய்தலின் நீளம், விமர்சன மதிப்பீடு, பதிவுக்கான தரவு மற்றும் மூலம் ஆகியவை அடங்கும். கணினி அமைப்புகள் பயன்படுத்தும் மெட்டாடேட்டாவில் கோப்பின் பெயரும் தற்போதைய நிலையும் அடங்கும். (காணும் நிலை, எந்நாள்வரை பாதுகாக்கப்படவேண்டும் என்ற தேதி)

புத்தகம்

தொகு

ஒரு புத்தகத்தின் மெட்டாடேட்டாவின் எடுத்துக்காட்டுகள், தலைப்பு, ஆசிரியர்(கள்), வெளியிடப்பட்ட நாள், பொருள் (விஷயம்), பிரத்யேக அடையாளம் (உலகத்தர புத்தக எண் (ஐ.எஸ்.பி.என்)), பக்க எண், உரையின் மொழி ஆகியவையாகும். எலக்ட்ரானிக் வடிவத்திற்கென உள்ள பிரத்யேக மெட்டாடேட்டாவில் பயன்பாடு (கடைசியாக திறக்கப்பட்டது, தற்போதுள்ள பக்கம், எத்தனை முறை படிக்கப்பட்டது) மற்ற பயனர்-வழங்கிய தரவுகளும் (தரம், குறிச்சொற்கள், மேற்கோள்கள்) ஆகியவை அடங்கும். கணினி அமைப்பில் பயன்படும் மெட்டாடேட்டாவில் உள்ளடக்கத்திற்கான வாங்குதல் மற்றும் டிஜிட்டல் உரிமை சார்ந்த விவரங்கள் இருக்கலாம்.

படம்

தொகு

டிஜிட்டல் படங்கள், டிஜிட்டல் படங்களையும் கணினியில் உருவாக்கப்பட்ட அல்லது திருத்தி அமைக்கப்பட்ட படங்களையும் உள்ளடக்கியதாகும். டிஜிட்டல் படங்களின் மெட்டாடேட்டாவில், அது உருவாக்கப்பட்ட நாள், நேரம், கேமரா அமைப்பு விவரம் (குவியத்தூரம், ஒளி பாய்வதற்கான துளை, எக்ஸ்போஷர்) ஆகியவை அடங்கும். பல டிஜிட்டல் கேமராக்கள் மெட்டாடேட்டாவினை, மாற்றத்தக்க வகையிலான் படக் கோப்பு வடிவமமப்பு (ஈ.எக்ஸ்.ஐ.எஃப்) அல்லது ஜே.பீ.ஈ.ஜீ போன்ற, அவற்றின் டிஜிட்டல் படங்களாக பதிவு செய்கின்றன. சில கேமராக்கள், எந்த சூழலில் படம்பிடிக்கப்பட்டது (உ.ம்.ஜீ.பீ.எஸ்லிருந்து) போன்ற அதிக மெட்டாடேட்டாவினை தாமாகவே சேர்த்துக்கொள்கின்றன. பெரும்பான்மையான படத் திருத்த மென்பொருளில், டிஜிட்டல் உருவத்தில் உள்ள சில மெட்டாடேட்டாவும், உருவத்தோற்றம் மற்றும் உரிமம் சார்ந்த உட்பொருளும் உள்ளன.

ஒலிப்பதிவுகளும் மெட்டாடேட்டாவால் லேபிளிடப்படலாம். ஒலி வடிவமைப்புகள் அனலாகிலிருந்து டிஜிட்டலுக்கு மாறியபோது, இந்த மெட்டாடேட்டாவினை டிஜிட்டல் உள்ளடக்கத்திலேயே உட்பொதித்து வைக்க முடிந்தது. (மெட்டாடேட்டா ஏதும் இன்றியுள்ள டிஜிட்டல் உட்பொருள், ஒலிஅலை வடிவத்தில் உள்ள ஒரு கோப்பே ஆகும்.

டிஜிட்டல் ஒலி கோப்பினைப் பெயரிட, விவரிக்க, பட்டியலிட, உரிமைத் தகுதி அல்லது பதிப்புரிமையைக் குறிப்பிடவும் ஒலிப்பொருளடக்கத்தின் பயன்படும் பண்புகளை அனுமதிக்கவும் மெட்டாடேட்டா பயன்படுத்தப்படலாம். (தரம், குறிச்சொற்கள், மற்ற துணை மெட்டாடேட்டா) மெட்டாடேட்டாவை அணுகும் ஓர் தேடுபொறியின் மூலம், ஒரு குழுவில் உள்ள குறிப்பிட்ட ஒலிக்கோப்பினைக் கண்டறியும் செயலை மெட்டாடேட்டா எளிதாக்குகிறது. பயனர் இடைமுகத்தை வழங்க, கணினியில் ஆடியோ பிளேயர் அல்லது ஆடியோ பயன்பாடு மெட்டாடேட்டாவையே பெரிதும் சார்ந்துள்ளது.

வெவ்வேறான டிஜிட்டல் ஒலி வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டதால், டிஜிட்டல் கோப்புகளில் விவரங்களை சேமித்துவைக்க ஒரு நிலையான, குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, எம்.பி3, ஒலிபரப்பு அலை, ஏ.ஐ.எஃப்.எஃப் கோப்புகள் ஆகியவை உள்ளிட்ட கிட்டத்தட்ட எல்லா டிஜிட்டல் ஒலி வடிவமைப்புகளும் மெட்டாடேட்டாவோடு சேகரிக்கக்கூடிய ஒரே மாதிரியான தரமான இட அமைப்புகளைப் பெற்றுள்ளன. எளிதாக அணுகி பயன்படுத்தும் வகையில், மெட்டாடேட்டாவை உருவாக்கும் அட்டவணையும் விளக்கத் தகவல்களும், ஒலிக்கோப்பில் நேரடியாக உருவாக்கப்படுவதால், டிஜிட்டல் ஒலிக்கோப்புகள் செயல்பட, இந்த "தகவலைப் பற்றிய தகவல்" சிறந்தவற்றில் ஒன்றாக அமைந்துள்ளது.

வலைப் பக்கம்

தொகு

வலைப்பக்கங்களை வரையறை செய்ய பயன்படும் எச்.டி.எம்.எல் வடிவமைப்பு, எளிய விளக்க உரை, தேதிகள் மற்றும் முக்கிய சொற்கள் முதல் டப்லின் கோர் மற்றும் ஈ-ஜி.எம்.எஸ் தரநிலை போன்ற மிகவும் நுண்ணிய தகவல்கள் வரையுள்ள, மெட்டாடேட்டாவின் பல்வேறு வடிவங்களை சேர்த்துக்கொள்ள அனுமதிக்கிறது. ஆய அச்சுகள் கொண்டு பக்கங்களுக்கு புவியியல் குறிச்சொற்கள் சேர்க்கப்படலாம். மெட்டாடேட்டா, பக்கத்தின் மேற்குறிப்பிலோ அல்லது தனிப்பட்ட கோப்பிலோ சேர்க்கப்படலாம். நுண்ணிய வடிவமைப்பு(மைக்ரோ வடிவமைப்பு)கள், பயனர்கள் பார்க்க முடியாத, ஆனால் கணினிகளால் எளிதாக அணுக ஏதுவாக, மெட்டாடேட்டாவை தரவுப் பக்கத்தில் சேர்க்க அனுமதிக்கிறது.

நிலைகள்

தொகு

மெட்டாடேட்டா விளக்கங்களின் படிவரிசைகள் சென்றுகொண்டே இருக்கும். ஆனால் பொதுவாக சூழல் அல்லது பொருள் ரீதியான புரிதலால் மிக அதிக விரிவான விளக்கங்கள் தேவையற்றதாகின்றன.

எந்தவொரு குறிப்பிட்ட தரவின் பங்கும், சூழலைச் சார்ந்தது. எடுத்துக்காட்டாக, லண்டன் புவியியலைக் கருத்தில் கொள்ளும்போது, "ஈ8 3பிஜே" தரவாகவும் "அஞ்சல் குறியீடு" மெட்டாடேட்டாவாகவும் அமையும். ஆனால், நிலவியல் தரவினை கையாளும் தரவு மேலாண்மை தானியங்கி கணினி அமைப்பினைக் கருத்தில் கொள்ளும்போது, "அஞ்சல் குறியீடு" ஒரு தரவாகவும், "தரவ உருப்படிப் பெயர்" மற்றும் "ஏ முதல் இசட் வரையுள்ள 6 எழுத்துகள்" ஆகியவை மெட்டாடேட்டாவாகவும் இருக்கும்.

எந்தவொரு குறிப்பிட்ட சூழலிலும், மெட்டாடேட்டா, அது விவரிக்கின்ற தரவின் தன்மைகளை விவரிக்கிறதே தவிர தரவால் விவரிக்கப்படும் பொருளை அல்ல. ஆகையால், "ஈ8 3பிஜே" தொடர்புள்ள "லண்டனில் உள்ளது" என்ற தரவு, "ஈ8 3பிஜே" என்ற அஞ்சல் குறியீட்டைக் கொண்ட உலகத்தில் உள்ள இடத்தினை விவரிப்பதே தவிர அந்தக் குறியீட்டை அல்ல. எனவே, "ஈ8 3பிஜே" தொடர்புள்ள விவரங்களை அளித்தாலுங்கூட(இது லண்டனில் உள்ள ஒரு இடத்தின் அஞ்சல் குறியீடு என நமக்கு தெரிவிக்கிறது), இது "ஈ8 3பிஜே"ஐ தரவாக இல்லாமல், உலகத்தில் ஒரு இடமாக விவரிப்பதால், பொதுவாக இது மெட்டாடேட்டாவாக கருதப்படமாட்டாது.

வரையறைகள்

தொகு

சொல்லியல்

தொகு

மெட்டா என்பது, ஆங்கிலத்தில், பெயர்ச்சொல்லோடு தொடர்புடையதைப் பொறுத்து, அதோடு; உடன்; மூலமாக; இடையில்; பிறகு; பின்னால் ஆகியவற்றை தெரிவிப்பதாக உள்ள, கிரேக்க மொழியில் பெயர்ச்சொல்லுக்கு முன்பாக வரும் வார்த்தை (μετ’ αλλων εταιρων) மற்றும் வார்த்தையின் முன்னிணைப்பு (μεταβασις) ஆகும்.[2] அறிவுத் தத்துவவியலில் இச்சொல்லானது "(அதன் சொந்த வகையைப்) பற்றியது" என பொருள்படுகிறது. இவ்வாறாக மெட்டாடேட்டா என்பது "தரவுகள் பற்றிய தரவு" ஆகும்.

பல்வேறான வரையறைகள்

தொகு

வார்த்தை, மரபுவழி வரையறையாக இல்லாமல், உள்ளுணர்வாக அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அதன் விளைவாக, தற்போது பல வரையறைகள் உள்ளன. நேரடி மொழிபெயர்ப்பே பொதுவானது.

 • "தரவுகளைப் பற்றிய தரவு என்பதே மெட்டாடேட்டா என குறிப்பிடப்படுகிறது."[3]

உதாரணம்: "12345" என்பது தரவு. சூழல் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்றி இது அர்த்தமற்றதாகிறது. "12345" என்பதை "சிப் (ZIP) குறியீட்டின்" (மெட்டாடேட்டா) எனும் அர்த்தமுள்ள பெயர் கொடுக்கப்படும்போது, அதைப் புரிந்துகொள்ளமுடியும். மேலும், "12345" என்பது ஷெனெக்டெடி, நியூயார்க்கில் உள்ள ஜெனரல் எலக்ட்ரிக் தொழிற்சாலையைக் குறிக்கும் அஞ்சல் முகவரி) எனும் பொருளில் "சிப் குறியீடு" வைக்கப்படுகிறது.

பெரும்பாலானோரைப் பொருத்தமட்டில், தரவுக்கும் தகவல்களுக்கும் உள்ள வேறுபாடு, செயல்பாட்டில் பொருத்தமற்ற தத்துவரீதியான ஒன்றாகவே உள்ளது. மற்ற வரையறைகளாவன:

 • மெட்டாடேட்டா என்பது தரவைப் பற்றிய தகவல்.
 • மெட்டாடேட்டா என்பது தகவலைப் ப்ற்றிய தகவல்.
 • மெட்டாடேட்டா, அந்த தரவு அல்லது மற்ற தரவு பற்றிய தகவலினைக் கொண்டுள்ளது.

கீழ்க்காண்பவை போன்று மேலும் பல நயமான வரையறைகள் உள்ளன:

 • "மெட்டாடேட்டா, விவரிக்கப்படும் பொருள்களை அடையாளங்காண, கண்டுபிடிக்க, மதிப்பீடு செய்ய, நிர்வகிக்க உதவும் பொருட்டு, பொருள்களின் தகவல் பண்புகளை விவரிக்கும் கட்டமைக்கப்பட்ட மற்றும் குறியீடாக்கம் செய்யப்பட்ட தரவாகும்."[4]
 • பொருள்களை ஐயமறக் கண்டறிய உதவ, மக்களிடம் கிடைக்கும் விருப்பத்திற்குட்பட்ட கட்டமைப்புடன் கூடிய விளக்கங்களின் [தொகுப்பே மெட்டாடேட்டா]."[5]

இவை அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், அவைகள் மெட்டாடேட்டாவின் ஒரு நோக்கத்திலேயே கருத்தை செலுத்துகின்றன — "பொருள்கள்", "உருப்படிகள்" அல்லது "வளங்கள்" ஆகியவற்றைக் காண — சுருக்க வழிமுறைகளை உகந்ததாக்கல் அல்லது தரவுகளைப் பயன்படுத்தி கூடுதலாக கணக்கிடுதல் போன்ற மற்றவற்றை ஒதுக்கிவிடுகின்றன.

அட்டவணைகளின் பெயர்கள், நிரல்கள், ப்ரோக்ராம்கள் மற்றும் இது போன்ற எந்தவொரு "தரவுகளைப் பற்றிய தரவுகளையும்" கணினி அமைப்புலகில் சேர்க்க, மெட்டாடேட்டா எனும் கருத்து விரிவாக்கப்பட்டுள்ளது. "கணினி அமைப்பு மெட்டாடேட்டா"வைப் பற்றிய பல்வேறு கருத்துகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் அதற்குமேலும், கணினி தொகுப்பின் தரவுகள், செயல்பாடுகள், பங்கேற்ற மக்களும் அமப்புகளும், தரவும் செய்முறைகளும், இருக்கும் இடம், தொடர்புகொள்ளும் முறைகள், எல்லைகள், நேரமும் நிகழ்வுகளும், ஊக்குவித்தலும் விதிமுறைகளும் போன்ற அனைத்து குணாதிசயங்களையும் விவரிக்கக்கூடியது மெட்டாடேட்டா என்ற அங்கீகாரம் உள்ளது:

அடிப்படையாக, மெட்டாடேட்டா என்பது, "ஒரு நிறுவனத்தின் அமைப்பு மற்றும் தகவல்களின் பயன்பாடு, அத்தகவல்களை மேலாண்மை செய்யும் கணினி அமைப்புகள் ஆகியவற்றை விளக்கும் தரவு" ஆகும். மெட்டடேட்டாவின் மாதிரியை உருவாக்குவதென்பது, தொழில்நுட்ப உலகில்[6] "வணிக நடவடிக்கை மாதிரி"யை உருவாக்குவதே ஆகும்.

மார்க்-அப்

தொகு

வலையிலும் எச்.டி.எம்.எல், எக்ஸ்.எம்.எல் மற்றும் எஸ்.ஜீ.எம்.எல் ஆகியவற்றின் மார்க்-அப் தொழில்நுட்பத்தினை அளிப்பதற்கான டபுல்யூ3சீயின் வேலைப்பாட்டிலும், மற்ற தகவல் பகுதிகளில் இருப்பதைவிட தெளிவாக உள்ள மெட்டாடேட்டா எனும் கருத்து குறிப்பிடும்படியாக உள்ளது. மார்க்-அப் தொழில்நுட்பங்களில், மெட்டாடேட்டா, மார்க்-அப், தரவுகள் ஆகிய மூன்றும் உள்ளன. மெட்டாடேட்டா தரவுகளைப் பற்றிய குணாதிசயங்களை விவரிக்கின்றன. மார்க்-அப், குறிப்பிட்ட தரவின் வகையை அடையாளம் கண்டு, உடனடி ஆவணத்திற்கான கொள்கலமாக செயல்படுகிறது. விக்கிபீடியாவில் உள்ள இப்பக்கமே, இப்பயன்பாட்டிற்கான ஓர் எடுத்துக்காட்டு ஆகும். நூலின் தகவல்கள் தரவாக உள்ளன. அவை எவ்வாறு ஒருமித்துவைக்கப்படுகிறது, இணைக்கப்படுகிறது, சுட்டிக்காட்டப்படுகிறது, ஒப்பனைப்படுத்தப்படுகிறது, காண்பிக்கப்படுகிறது என்பது மார்க்-அப் ஆகும். இந்த மார்க்-அப் மற்றும் அதன் அம்சங்கள் மற்றும் சிறப்புப்பண்புகள் விக்கிபீடியாவில் உலகளவில் உள்ள மெட்டாடேட்டா ஆகும்.

திட்ட வடிவ வரையரை (எக்ஸ்.எஸ்.டி) நிகழ்வில் மெட்டாடேட்டாவையே சுட்டிக்காட்டப்படுவது போன்று, மார்க்-அப் சூழலில், குறைந்தபட்ச மெட்டாடேட்டாவைக்கொண்டு உகந்த ஆவணங்களை உருவாக்க மெட்டாடேட்டா கட்டமைக்கப்படுகிறது. மெட்டாடேட்டா அல்லது தரவு என்ற குழப்பத்தை தவிர்த்து, உகந்தவற்றை அளித்து சுட்டிக்காட்டப்படும் தரவுகளைக் கையாளும் சிறப்பு அம்சம் கொண்ட இயந்திரச் செயல்பாடுகளை அளிப்பது தரக்குறியீடு என்பதயும் கருத்தில் கொள்ளவேண்டும். மார்க்-அப் இல் உள்ள சுட்டிக்காட்டப்படுதல், மற்றும் ஐ.டி இயங்கமைப்புகள், தொடர்புள்ள தரவுகளிடையே சுட்டிக்காட்டப்படும் இணைப்புகள், முகவரி அல்லது தயாரிப்பு விவரங்கள் போன்ற தரவுகளை மீண்டும் கொடுக்கும் தரவு இணைப்பு ஆகியவற்றை அனுமதிக்கிறது. அதன்பின், அவையெல்லாம் மெட்டாடேட்டாவைவிட, வெறும் தரவுகளும் மார்க்-அப் நிகழ்வுகளே ஆகும்.

அதேபோன்று மார்க்-அப் இயங்கமைப்பில் உள்ள வகைப்படுத்துதல், ஒழுங்கமைப்புகள், தொடர்புபடுத்தல்கள் போன்ற கருத்துகளும் உள்ளன. மார்க்-அப் மூலம் இப்படிப்பட்ட வகைபாடுகளுடன் தரவு இணக்கப்படலாம். அதன்வாயிலாக, மெட்டாடேட்டா என்பதென்ன, தரவுகள் என்பதென்ன என்ற வேறுபாடு தெளிவுபடுத்தப்படுகிறது. ஆகையால், ஒரு வகைபாட்டின் கருத்துகளும் விளக்கங்களும் மெட்டாடேட்டாவாக இருக்கலாம். ஆனால் ஒரு தரவின் உண்மையான வகைபாட்டுப் பதிவு, மற்றோர் தரவேயாகும்.

சில எத்துக்காட்டுகள் இவ்விவரங்களை விளக்கும். தடிமனாக உள்ளவை தரவு, சாய்வெழுத்தில் உள்ளவை மெட்டாடேட்டா, சாதாரண உரையில் உள்ளவை மார்க்-அப்.

இந்லைன் பயன்பாடாகிய எளிய மார்க்-அப் (எச்.டி.எம்.எல்) உடன் ஒப்பிடப்பட்ட தரவு (எக்ஸ்.எம்.எல்) மார்க்-அப் உடன் பயன்படுத்தப்பட்ட மெட்டாடேட்டாவை இரு உதாரணங்கள் காட்டுகின்றன.

ஒரு எளிய எச்.டி.எம்.எல் அம்சம் உதாரணம்:

Example 

ஒரு எக்ஸ்.எம்.எல் அம்சம் மெட்டாடேட்டா உதாரணம்

 < PersonMiddleName nillable="true" >John </PersonMiddleName >

ஒரு நபரின் நடுப்பெயர் வெற்று தரவாக இருக்கும் வரிசை அமைப்பு, அந்தத் தரவின் மெட்டாடேட்டா ஆகும். பொதுவாக இப்படிப்பட்ட வரையறைகள் எக்ஸ்.எம்.எல்லில் வரிசையில் வைக்கப்படுவதில்லை. அதற்குப்பதிலாக, இவ்வரையறைகள், முழு ஆவணத்திற்காகவும் மெட்டாடேட்டா உள்ள திட்ட வடிவ வரையறைகட்கு நகர்த்தப்படுகின்றன. மீண்டும் மார்க்-அப் இல் மெட்டாடேட்டா முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இது விளக்குகிறது. மெட்டாடேட்டா, தரவுத்தொகுப்புக்காக, ஒருமுறைமட்டும், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு வரையறைக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் இடம்பெறும் மார்க்-அப் உருப்படிகள் மெட்டாடேட்டாவாக இருப்பது அரிது, மாறாக அவை அதிக மார்க்-அப் தரவு அம்சங்களாகவே இருக்கக்கூடும்.

தரவுகளுக்கும் மெட்டாடேட்டாவிற்கும் உள்ள வேறுபாடு

தொகு

பொதுவாக, (சாதாரண) தரவையும் மெட்டாடேட்டாவையும் வேறுபடுத்திப்பார்க்க இயலாது, ஏனெனில்:

 • சில, ஒரே நேரத்தில் தரவாகவும் மெட்டாடேட்டாவாகவும் இருக்கலாம். ஒரு கட்டுரையின் தலைப்பு என்பது தலைப்பும் (மெட்டாடேட்டா) அதன் உரையின் பகுதியும் (தரவு) ஆகும்.
 • தரவும் மெட்டாடேட்டாவும், அவற்றின் பங்கினை பரிமாற்றம் செய்துகொள்ளமுடியும். ஒரு கவிதை தரவாக கருதப்படலாம். ஆனால், அதைப் பாடல் வரிகளாகக் கொண்டு ஒரு பாடல் இருக்குமானால், முழு செய்யுளும் பாட்டின் ஒலி கோப்போடு மெட்டாடேட்டாவாக இணைக்கப்படலாம். இவ்வாறாக லேபிளிடுவது என்பது, அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது.

தரவு எது மெட்டாடேட்டா எது, என குறிப்பிட வெளிப்படையான மார்க்-அப் பயன்படுத்தப்படும் இடங்களைத் தவிர, பிற சூழலில் மேற்குறிப்பிட்ட எந்த வரைமுறை ஏற்றுக்கொள்ளப்படுகிறது என சொல்வதற்கில்லை.

பயன்

தொகு

மெட்டாடேட்டா பல வெவேறான பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இப்பிரிவு, பிரபலமான சிலவற்றை பட்டியலிடுகிறது.

ஆதாரங்களைத் தேடலை வேகப்படுத்தவும், சிறந்தவையாக ஆக்கவும் மெட்டாடேட்டா பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மெட்டாடேட்டாவினைப் பயன்படுத்தும் தேடல் வினவல்கள், பயனர்களை, மிக சிக்கலான வடிகட்டல் செயல்களை கைமுறையாக செய்வதிலிருந்து காப்பாற்றுகின்றன. இப்போது, வலை உலாவிகள் (பிரபலமான மொசில்லா பயர் பாக்சு தவிர), பி2பி பயன்பாடுகள், ஊடக மேலாண்மை மென்பொருள் ஆகியவை தானாகவே மெட்டாடேட்டவினைப் பதிவிறக்கம் செய்து தேக்ககப்படுத்திக்கொள்வது வழக்கமாகிவிட்டதால், கோப்புகள் தேடப்படும் மற்றும் அணுகப்படும் வேகம் அதிகரிக்கப்படுகிறது.[சான்று தேவை]

மெட்டாடேட்டா, கைமுறையாகவும் கோப்புகளுடன் இணைக்கப்படலாம். ஃபைல்நெட் அல்லது டாக்குமெண்டம் போன்ற ஆவணக்காப்புகளில், ஆவணங்களை ஸ்கேனிங் செய்யும் சூழ்நிலைகளில் இது நடைபெறும். ஆவணங்கள் மின்னணு வடிவத்தில் மாற்றப்பட்டதும், பயனர் படத்தை ஒரு காணும் பயன்பாட்டின் மூலம் காண்கிறார், ஆவணங்களைப் பார்த்து படிக்கிறார் பின்னர் மெட்டாடேட்டா காப்புப்பகுதியில் தேக்கிவைப்பதற்கான ஆன்லைன் பயன்பாட்டில் மதிப்புகளை உள்ளிடுகிறார்.

மெட்டாடேட்டா, அது விவரிக்கும் தரவின் கூடுதல் தகவலை பயனர்களுக்கு வழங்குகிறது. இத்தகவல், விளக்கமாக இருக்கலாம் ("இப்படங்கள் பள்ளி மூன்றாம் நிலை வகுப்பு குழந்தைகளால் எடுக்கப்பட்டன.") அல்லது வழிமுறை ரீதியான தகவலாக இருக்கலாம் ("Checksum=139F").

மெட்டாடேட்டா, மொழியியல் பொருள் சார்ந்த இடைவெளியினை இணக்கும் பாலமாக உதவுகிறது. எவ்வாறு தரவுகள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன, இத்தொடர்புகள் எவ்வாறு தானாகவே மதிப்பிட ம்டியும் என்பதை கணினிக்குச் சொல்வதன்மூலம், மிகச்சிக்கலான, பிரித்தெடுத்தல் மற்றும் தேடுதல் செயல்களை செயல்படுத்தமுடிகிறது. உதாரணமாக, ஒரு தேடுபொறி "வான்கோ (Van Gogh)" ஒரு "டச்சு ஓவியர்" என புரிந்துகொண்டால், அது "டச்சு ஓவியர்கள்" சார்ந்த வினவலுக்கு, வின்சட் வான்கோ (Vincent Van Gogh) வலைப்பக்கத்தை தொடர்புபடுத்தி, "டச்சு ஓவியர்கள்" என்ற அதே வார்த்தைகள் அப்பக்கத்தில் இல்லையென்றாலும், பதிலளிக்கமுடியும். இந்த அணுகுமுறை, அறிவுப் பிரதிநிதித்துவம் மொழியியல் பொருள்சார்ந்த வலை மற்றும் செயற்கை நுண்ணறிவுஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்துவதாயுள்ளது.

சில குறிப்பிட்ட மெட்டாடேட்டா, இழப்பு ஒடுக்குதல்களை உகந்ததாக்க வடிவமைக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு கணினி பின்னணியிலிருந்து முன்னணியைக் கூறும்படியான மெட்டாடேட்டாவை ஒரு வீடியோ பெற்றிருந்தால், பின்னணி, அதிக ஒடுக்கும்திறன் விகிதம்பெற, மிக தீவிரமாக ஒடுக்கப்படக்கூடும்.

சில மெட்டாடேட்டா, மாறும் உள்ளடக்க விளக்கத்திற்காக உள்ளன. உதாரணமாக, மிக முக்கியமான பகுதியைக்குறிக்கும் மெட்டாடேட்டாவை, ஒரு படம் பெற்றிருந்தால் — ஒரு நபர் இருக்கும் பகுதி — கைபேசியில் உள்ளதுபோல் இருக்கும் சிறுதிரையில் உள்ள இமேஜ் வியூவர், அப்படத்தை அப்பகுதிக்கு குறுக்கிச் செலுத்தமுடியும். இவ்வாறாக, பயனருக்கு மிகவும் ஆர்வமூட்டும் விவரங்களைக் காட்டுகிறது. சிறப்பு வெளியீடு சாதனங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்தல் அல்லது உரை வடிவிலிருந்து பேச்சு வடிவத்துக்கு மாற்றும் மென்பொருளைப் பயன்படுத்தி, அவற்றின் விளக்கங்களைப் படிப்பதன் மூலம், கண்பார்வையற்றோர் வரைபடங்களையும் காட்சிப்படங்களையும் உணர இதேபோன்ற மெட்டாடேட்டா உள்ளன.

மற்ற விளக்க ரீதியான மெட்டாடேட்டா தானியங்கி கருவிகளில் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, ஒரு "ஸ்மார்ட்" மென்பொருள் கருவி, தரவின் உட்பொருளையும் அமைப்பையும் தெரிந்துகொண்டால், அது தானாகவே மாற்றியமைத்து மற்றொரு கருவிக்கு உள்ளீடாக அதை அனுப்பமுடியும். இதன்விளைவாக, பயனர்கள் "செயலற்ற" கருவிகளில் உள்ள தரவுகளை பகுத்தறியும்போது, நகலெடு-மற்றும்- ஒட்டு என பல முறை செய்யவேண்டியதில்லை.

மின்னணு கண்டுபிடிப்பில் வேகமாக வளர்ந்துவரும் ஒரு முக்கிய அங்கமாக மெட்டாடேட்டா மாறிக்கொண்டிருக்கிறது. [1] பரணிடப்பட்டது 2009-11-30 at the வந்தவழி இயந்திரம் மெட்டாடேட்டாவால் மின்னணு ஆவணங்கள் மற்றும் கோப்புகளிலிருந்து பெறப்பட்ட, பயன்படுத்துதலும் கோப்பு அமைப்பும் முக்கிய ஆதாரமாக இருக்கலாம். சமீபமாக மாற்றப்பட்ட சிவில் முறைக்கான கூட்டரசு விதிகள் மெட்டாடேட்டாவை, சிவில் வழக்குகளின் அங்கமாகக் காணும் வழக்கமான ஒன்றாக மாற்றியுள்ளன. வழக்குகளில் ச்ம்பந்தப்பட்டவர் மெட்டாடேட்டாவை பாதுகாத்து வைத்திருந்து கண்டுபிடிப்பின் ஒரு அங்கமாக கொடுக்கவேண்டும். மெட்டாடேட்டாவை சீரழித்தல் ஒப்புதல் அளித்ததற்கான வகைசெய்யும்.

கிடைக்கும் தகவல்களிலிருந்து பயனுள்ள தகவல்களைக் காணவேண்டியிருப்பதால், மெட்டாடேட்டா உலகளாவிய வலையில் முக்கியமான ஒன்றாக உள்ளது. கைமுறையாக உருவாக்கப்பட்ட மெட்டாடேட்டா இசைவானதாக இருப்பதால் மதிப்புள்ளதாக உள்ளது. குறிப்பிட்ட ஒரு தலைப்பைப் பற்றிய வலைப்பக்கத்தில் ஒரு சொல் அல்லது சொற்றொடர் இருந்தால், அத்தலைப்பைக் கொண்ட எல்லா வலைப்பக்கங்களிலும் அதே பதம் அல்லது சொற்றொடர் இருக்கவேண்டும். ஒரு தலைப்பு இரு பெயர்களில் இருப்பினும், ஒவ்வொன்றையும் பயன்படுதும்வகையில், மெட்டாடேட்டா பல வகைபாடுகளுக்கும் வகைசெய்கிறது. உதாரணமாக, சில நாடுகளில் எஸ்.யூ.விகள் தெரிந்திருப்பதுபோல, "பந்தய பயன்பாட்டு வண்டிகளைப்" பற்றிய கட்டுரையில், "4 சக்கர வண்டிகள்", "4டபுல்யூ.டீக்கள்" மற்றும் "நான்கு சக்கர வண்டிகள்" எனவும் குறிச்சொல்லிடப்பட்டு இருக்கும்.

ஆடியோ சி.டி மெட்டாடேட்டாவின் எடுத்துக்காட்டில், மியூசிக் பிரெய்ன்ஸ் பணித்திட்டமும் ஆல் மீடியா கைட்ஸின் ஆல் மியூஸிக்கும் அடங்கும். அதேபோல, எம்.பீ3 கோப்புகளில், ID3எனும் வடிவில் உள்ள மெட்டாடேட்டா குறிச்சொற்கள் உள்ளன.

வகைகள்

தொகு

மெட்டாடேட்டா இவ்வாறு வகைப்படுத்தப்படலாம்:

 • உள்ளடக்கம் மெட்டாடேட்டா வளத்தையே விவரிக்கலாம் (உதாரணமாக, கோப்பின் பெயர் மற்றும் அளவு) அல்லது வளத்தின் பொருளை (உள்ளடக்கம்) விளக்கலாம் (உதாரணமாக, “ இந்த படத்தில் ஒரு பையன் கால்பந்து விளையாடுவதைக் காட்டுகிறது”).
 • மாற்றும் தன்மை. மாற்றும் தன்மை. மொத்த வளத்தையும் பொறுத்து, மெட்டாடேட்டா என்பது மாற்ற முடியாததாக இருக்கும் (உதாரணமாக, படத்தின் “தலைப்பு”, படம் ஓடிக் கொண்டிருக்கும் போது மாறாது) அல்லது மாற்றக்கூடியதாக இருக்கும் (“காட்சி விளக்கம்” மாறலாம்)
 • அறிவு சார் செயல்பாடுகள் அறிவுசார் செயல்பாடுகளில் மூன்று அடுக்குகள் உண்டு. அடிப்பகுதியில் முதல் விவரங்கள் அடங்கிய துணை குறியீட்டு அடுக்கு, அதனை அடுத்து முதல் விவரங்களை விவரிக்கும் மெட்டாடேட்டா அடங்கிய குறியீட்டு அடுக்கு மற்றும் மேலே, குறியீட்டு அடுக்கை உபயோகித்து அறிவுசார் விளக்கங்களை அனுமதிக்கும் மெட்டாடேட்டா உடைய அறிவுசார் அடுக்கு இருக்கும்

மெட்டாடேட்டாவின் வகைகளாவன;

 1. விவரிப்பு மெட்டாடேட்டா.
 2. நிர்வாகம் சார்பான மெட்டாடேட்டா.
 3. கட்டமைப்பு சார்ந்த மெட்டாடேட்டா.
 4. தொழில்நுட்ப மெட்டாடேட்டா.
 5. உபயோகிப்பு மெட்டாடேட்டா

மெட்டாடேட்டாவை வெற்றிகரமாக உருவாக்கி உபயோகிக்க, பல முக்கியமான பிரச்சனைகளை கவனத்துடன் கையாள வேண்டும்:

அபாயங்கள்

தொகு

மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் (Microsoft Office) கோப்புகளில் அச்சிடக் கூடிய பொருட்களுக்குப் பின்னால் அசல் ஆசிரியரின் பெயர், ஆவணம் தயார் செய்யப்பட்ட தேதி மற்றும் அதை முடிப்பதற்கு செலவிடப்பட்ட நேரம் போன்ற மெட்டாடேட்டா அடங்கி இருக்கும். தவறான பயன்பாடு குறித்த கவலைகள், ரகசியக் காப்பு தேவைப்படும் தொழில்முறை சார்ந்த பழக்கங்கள் ஆகியவற்றில் தெரியாமல் நடந்த வெளியீடுகள் திறமையற்றதாகவோ அல்லது சீராகவோ இருக்கலாம். Microsoft Officeன் ஆவணங்களில் திட்ட பட்டியலில் ஃபைலை சொடுக்கிட்டு அதன் பிறகு ப்ராப்பர்டீஸ் என்பதை அழுத்தினால் மெட்டாடேட்டாவை பார்க்கலாம். மற்ற மெட்டாடேட்டாக்கள் தெரியும் படி இருக்காது. தடவியலில் செய்வது போல கோப்பின் வெளிப்புற பகுப்பாய்வு செய்தால் மட்டுமே தெரியும். Wordல் உள்ள தனித்துவமான மெட்டாடேட்டாவை வைத்து அசலான தொற்றுடைய ஆவணத்தை கண்டறிந்து 1999ம் ஆண்டு Microsoft Word சார்ந்த மெலிசா வைரஸை பரப்பியவர் பிடிபட்டார்.

வாழ்க்கை சுழற்சி

தொகு

திட்டமிடுதல் மற்றும் வடிவமைத்தலின் முதல் நிலைகளில் கூட உருவாக்கப்பட்ட மெட்டாடேட்டாவை வைத்துக்கொள்வது அவசியம். தயாரிப்பு முறை முடிந்த பின்னரே மெட்டாடேட்டாவை இணைக்கத் தொடங்குவது பொருளாதார ரீதியாக சரியானதாக இருக்காது. உதாரணமாக, ஒரு டிஜிட்டல் புகைப்படக் கருவி மூலம் பதிவு செய்யப்படும் நேரத்தில் உருவாக்கப்பட்ட மெட்டாடேட்டாவை உடனடியாக சேமிக்காவிட்டால், அதனை பிற்பாடு பிரித்தெடுப்பது மிகுந்த கடினமாக இருக்கும். ஆகையால், வளத்தயாரிப்பில் இருக்கும் வெவேறு குழுக்களும் ஏற்புடைய முறைகள் மற்றும் தரத்தை வைத்து ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

 • கையாளுதல்: விவரிக்கும் வளங்கள் மாறினால் அதற்கு ஏற்றபடி மெட்டாடேட்டா மாறிக்கொள்ள வேண்டும். இரண்டு வளங்கள் சேர்க்கப்படும் போது அதுவும் சேர வேண்டும். தற்போதைய மெண்பொருள்கள் இந்த செயல்பாடுகளை செய்வது இல்லை. உதாரணமாக, படங்கள் திருத்தி அமைக்கும் மென்பொருள்கள் பொதுவாக டிஜிட்டல் புகைப்படக் கருவிகளால் உருவாக்கப்பட்ட Exif மெட்டாடேட்டாக்களை வைத்துக்கொள்வது இல்லை
 • அழித்தல். விவரிக்கும் வளம் அழிந்த பின்னும் அதற்கான மெட்டாடேட்டாவை வைத்துக்கொள்வது உபயோகமானதாகும். உதாரணமாக, ஒரு எழுத்து மட்டும் உள்ள ஆவணத்தில் வரலாறுகளை மாற்றுதல் அல்லது டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மை காரணமாக ஆவணப்படுத்தியவற்றை அழித்தல். தற்போதுள்ள எந்த மெட்டாடேட்டா தரமும் இந்த கட்டத்தை கவனத்தில் வைத்துக்கொள்வதில்லை.

சேமிப்பு

தொகு

மெட்டாடேட்டாவை தரவு உள்ள அதே கோப்பில் உட்புறமாகவோ அல்லது வேறு ஒரு கோப்பில் வெளிப்புறமாகவோ சேமிக்கலாம். பொருளோடு பதிக்கப்பட்ட மெட்டாடேட்டா பதிக்கப்பட்ட மெட்டாடேட்டா எனப்படும். தரவுக் களஙஞ்சியத்தில் தரவுகளில் இருந்து பிரிக்கப்பட்ட மெட்டாடேட்டா சேமித்துவைக்கப்படும். இரண்டு வழிகளுக்கும் பயன்களும் பயன் குறைவுகளும் உண்டு:

 • மெட்டாடேட்டாவோடு அது விவரிக்கும் தரவையும் சேர்த்து சேமிக்க உட்புற சேமிப்பு அனுமதிக்கிறது; ஆகையால், மெட்டாடேட்டா எப்போதும் கையில் இருப்பதாகவும் எளிதாக கையாளக்கூடியதாகவும் இருக்கும். இந்த முறை அதிகமான மிகைப்படுத்துதலை உருவாக்குவதால் மெட்டாடேட்டாவை சேர்த்து வைத்துக்கொள்வதை அனுமதிப்பதில்லை.
 • வெளிப்புற சேமிப்பு, மெட்டாடேட்டாவை கட்டுவதை அனுமதிக்கிறது. உதாரணமாக, அதிக தீவிர தேடுதலுக்காக தரவு தளத்தில். மிகைத்தன்மை இல்லாதபடியால் தரம் பிரிப்பு நடக்கும் போதே மெட்டாடேட்டாவை மாற்றிச் செலுத்தவும் முடியும். பல மாதிரிகள் அந்த நோக்கத்திற்காக URIகளை உபயோகித்தாலும், மெட்டாடேட்டாக்களை அதன் தரவுகளோடு இணைக்கும் முறையை கவனத்துடன் கையாளவேண்டும். ஒரு வளத்தில் URI இல்லையென்றால் என்ன ஆகும் (ஒரு பொருள் மேலாண்மை முறையை உபயோகித்து உருவாக்கப்படும் இணையப் பக்கங்கள் அல்லது ஒரு உள்ளூர் வந்தட்டில் உள்ள வளங்கள்)? குறிப்பாக RDF உபயோகிக்கும் போது இணைய இணைப்பு இருந்தால் மட்டும் மெட்டாடேட்டாவை மதிப்பாய்வு செய்ய முடியும் என்று இருந்தால் என்ன? ஒரு வளத்தை அதே பெயருடைய ஆனால் வேறு பொருளுடைய வளம் மாற்றி விட்டால் அதை எப்படி கண்டு கொள்வது?

மேலும், தரவு வகை குறித்த கேள்வியும் உண்டு: XML போன்ற மனிதர்களால் படிக்கக் கூடிய வகையில் மெட்டாடேட்டாவை சேமிப்பது உபயோகமானது ஏனெனில், உபயோகிப்பவர்கள் அதனை புரிந்து கொண்டு எந்த வித விசேஷ கருவிகள் இல்லாமல் அதனை மாற்றவும் முடியும். மறுபக்கத்தில் இந்த வகைகள், சேமிப்பு அளவிற்காக தயார் செய்யப்படுவதில்லை; மாற்றுதல் மற்றும் சேமிப்புத் திறனை அதிகரிக்க மெட்டாடேட்டாவை பைனரி அல்லது மனிதர்களால் படிக்க இயலாத வகையில் சேமிப்பதே நல்லது.

வகைகள்

தொகு

பொதுவாக, மெட்டாடேட்டாவில் இரண்டு வித்தியாசமான வகைகள் உண்டு. வடிவம் அல்லது கட்டுப்பாடு மெட்டாடேட்டா மற்றும் வழிநடத்தும் மெட்டாடேட்டா.[7] பெட்டிகள், பொருளடக்கம் மற்றும் கட்டங்கள் ஆகிய கணினிகளின் வடிவத்தை விவரிக்க வடிவ மெட்டாடேட்டா உபயோகிக்கப்படுகிறது வழி நடத்தும் மெட்டாடேட்டா, மனிதர்கள் குறிப்பிட்ட பொருட்களை கண்டுபிடிக்க உதவுகிறது மற்றும் இயற்கையான மொழியில் சில முக்கிய வார்த்தைகளின் கோர்வையாக இது வெளிப்படுத்தப்படுகிறது.

மெட்டாடேட்டாவை மூன்று முக்கிய பகுப்புகளாகப் பிரிக்கலாம்:

 • நிர்வாகம்
 • விவரிப்பு
 • வடிவமைப்பு

தகவல் தொழில்நுட்பம் மற்றும் மெண்பொருள் கட்டுமான மெட்டாடேட்டா

தொகு

பொதுவான IT மெட்டாடேட்டா

தொகு

மாறாக, டேவிட் மார்கோ மற்றொரு மெட்டாடேட்டா நிபுணர், மெட்டாடேடாவை இவ்வாறு வரையறுக்கிறார். “ஒரு நிறுவனத்தால் உபயோகிக்கப்படும் தரவுகளின் வடிவம், தரவுகளின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முறைகள், பொருள் தரவுகள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட, நிறுவனத்துக்கு உள்ளிருந்து மற்றும் வெளியே இருந்து கிடைக்கும் அனைத்து பொருள் தரவு மற்றும் அறிவுகளும் அடங்கும்”.[8] மற்றவர்கள் இணைய சேவைகள், முறைகள் மற்றும் இடைமுகப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கி உள்ளனர். மொத்த சேக்மேன் வடிவமைப்பையும் மெட்டாடேட்டாவாக பிரதிபலிக்கலாம். (நிருவன கட்டமைப்பை பார்க்கவும்).[9]

மேலாண்மை தகவல் முறைகளுக்குத் தேவையான பல அல்லது அனைத்து தரவுகளும் அடங்கும் வகையில் மெட்டாடேட்டாவின் பரப்பை இது போன்ற வரையறைகள் விரிவாக்குகின்றன என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். இந்த பொருளில், அமைவடிவ தரவுதள மேலாண்மை (CMDB) மற்றும் நிறுவன கட்டமைப்பு மற்றும் IT பிரிவு மேலாண்மை ஆகிய ITIL பொருளோடு மெட்டாடேட்டா பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.

மெட்டாடேட்டாவின் இந்த விரிவான வரையறைகளுக்கு முன்னுதாரணம் உண்டு. மூன்றாம் சந்ததி நிறுவன களஞ்சிய பொருட்கள் (CA பயன் கோட்டில் கடைசியாக சேர்க்கப்பட்டவை போன்று) தரவு வரையறைகளை மட்டுமன்றி (COBOL நகல்புத்தகங்கள், DBMS ஸ்கீமா) அந்த தரவுகளை உபயோகிக்கும் தரவு வடிவங்கள் மற்றும் வேலை கட்டுப்பாட்டு மொழி மற்றும் குழு வேலை உள்கட்டமைப்பு சார்புநிலைகள் ஆகியவற்றையும் சேமித்துவைக்கும். நிகழ்வு மற்றும் மாற்ற மேலாண்மை போன்ற ITIL சார்ந்த முறைகளின் தாக்க பகுப்பாய்வுக்கு ஆதரவு அளிக்கும் பிரதான கணக்கீடு சுற்றுப்புறத்தின் முழுமையான விவரத்தையும் இந்த பொருட்கள் (சில இன்னும் உற்பத்தியில் உள்ளன) அளிக்க முடியும். ITIL பின் பட்டியல் தரவு மேலாண்மை பதிப்பை உள்ளடக்குகிறது. இது மெயின்ஃப்ரேமில் மெட்டாடேட்டா பொருட்களின் பங்கை அங்கீகரிக்கிறது. இவை CMDBஐ பிரித்துக் கொடுக்கப்பட்ட கண்க்கீடு சமான அளவு போலக் காட்டுகிறது. தரவு வரையறைகளும் அடங்கும் படி தங்களது பரப்பை CMDB விற்பனையாளர்கள் விரிவாக்கவில்லை மற்றும் உலகில் பல இடங்களில் மெட்டாடேட்டா தீர்வுகள் கிடைக்கின்றது. ஆகவே, ஒவ்வொன்றின் பரப்பு மற்றும் பங்கை கண்டறிவது, இரண்டும் தேவைப்படும் பெரிய IT நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது.

மெட்டாடேட்டா சிக்கலானதாக இருப்பதனால், அதனை பின்தொடர எடுக்கப்பட்ட அனைத்து மைய முயற்சிகளும், அதிகப்படியாக பேசப்படும் உடமைகளை நோக்கியே இருக்கவேண்டும்.

மொத்த IT பிரிவிலும் நிறுவன சொத்துகள் சிறிய விழுக்காடாகவே இருக்கலாம்.

சில உபயோகிப்பாளர்கள் டப்ளின் கோர் மெட்டா மாதிரியை உபயோகித்து வெற்றிகரமாக மெட்டாடேட்டாவை கையாண்டுள்ளனர்.[10]

IT மெட்டாடேட்டா மேலாண்மை தயாரிப்புகள்

தொகு

IDMSன் IDD (ஒருங்கிணைந்த தரவு அகராதி), IMS தரவு அகராதி மற்றும் ADABASன் பிரடிக்ட் போன்ற ஒரு குறிப்பிட்ட DBMS ஆதரவு அளிப்பவையே முதல் சந்ததி தரவு/மெட்டாடேட்டா களஞ்சிய கருவிகள்.

இரண்டாவது சந்ததி, பல வித்தியாசமான கோப்புகள் மற்றும் DBMS வகைகளுக்கு ஆதரவு அளிக்கும் ASGன் DATAMANAGER பொருட்கள் ஆகும்.

IBMன் DB2 போன்ற RDBMS இயந்திரங்களின் உபயோகிப்பது அதிகமாகியதை ஒட்டி 1990களின் முதலில் மூன்றாம் சந்ததி களஞ்சிய பொருட்கள் குறுகிய காலத்திற்கு புகழ்பெற்று விளங்கின.

நான்காவது சந்ததி பொருட்கள் களஞ்சியத்தை மேலும் பிரித்தெடு, மாற்றும், ஏற்றும் கருவிகளோடு இணைக்கிறது மற்றும் கட்டமைப்பு மாதிரி கருவிகளோடும் இதனை சேர்க்க முடியும்.

தகவல் அளிக்கும் வழிகள், பயன்பாடுகள் போன்ற அனைத்திலும் மெட்டாடேட்டாவை உபயோகிப்பதை அனுமதிக்கும் வகையில் பிரிநிலைகள், அதிகபட்ச கற்பனை உருவகக் காட்சி, மேம்பட்ட வன்பொருள், பிரித்துக் கொடுக்கப்பட்ட கணக்கீடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஐந்தாம் தலைமுறை பொருட்கள் ஒரு புதிய தளத்திற்கு அனைத்து பொருட்களையும் கொண்டு செல்கின்றது.

சார் தரவுத்தள மெட்டாடேட்டா

தொகு

ஒவ்வொரு சார் தரவுத்தள முறைக்கும் மெட்டாடேட்டாவை சேமிப்பதற்கான அதற்கான முறைகள் உள்ளன. சார்-தரவுத்தள மெட்டாடேட்டாவிற்கான உதாரணங்களில் அடங்குபவை:

 • ஒரு தரவுத்தளத்தில் உள்ள அனைத்து பெட்டிகளின் பெட்டி, அவற்றின் பெயர்கள், அளவுகள் மற்றும் ஒவ்வொரு பெட்டியில் உள்ள வரிசைகள்.
 • ஒவ்வொரு தரவுத்தளத்திலும் உள்ள கட்டங்களின் பெட்டிகள், எந்த பெட்டியில் அவை உபயோகிக்கப்படுகிறது மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் சேமிக்கப்படும் தரவுகளின் வகை.

தரவுத்தள வழக்கு மொழியில் இது போன்ற மெட்டாடேட்டா குழு பட்டியல் என அழைக்கப்படுகிறது. SQL தரம் கேடலாகை உபயோகிக்க INFORMATION_SCHEMA என்ற ஒரே மாதிரியான வழிகளைக் கூறுகிறது, ஆனால் மற்ற SQL தரத்தை பின்பற்றினாலும் இதை அனைத்து தரவுதளங்களும் உபயோகிப்பதில்லை. தரவுத்தளம் குறிப்பிட்ட மெட்டாடேட்டா உபயோக முறைகளின் உதாரணத்திற்கு ஆரகல் மெட்டாடேட்டாவை பார்க்கவும். மெடாடேட்டாவின் திட்டமுறை உபயோகம் JDBC அல்லது SchemaCrawler[11] போன்ற API மூலம் சாத்தியமாகிறது.

தரவு சேகரிப்புதள மெட்டாடேட்டா

தொகு

தரவு சேகரிப்புதளம் (DW) என்பது ஒரு நிறுவனத்தின் மின்னனு முறையில் சேமித்த தரவுகளின் களஞ்சியம். தரவு சேமிப்புதளங்கள் தரவுகளை சேமித்து மற்றும் கையாளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வணிக அறிவாற்றல் (BI) என்பது அறிக்கைகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கு தரவுகளை உபயோகிப்பதை ஊக்குவிக்கிறது[12].

தரவு சேமிப்புதளத்தின் நோக்கமானது, ஒரு நிறுவனத்தின் பல வகையான இயங்கு முறைகளில் இருந்து எடுக்கப்பட்ட சீராக்கப்பட்ட, ஒரு வடிவமுடைய, ஒரே மாதிரியான, ஒருங்கினைந்த, சரியான, சுத்தமான மற்றும் நேரத்திற்கேற்ற தரவுகளை சேமித்து வைப்பதாகும். நிறுவனம் முழுவதற்குமான எண்ணம், உண்மையின் ஒரே வடிவம் ஆகியவற்றை அளிக்க பிரித்தெடுக்கப்பட்ட தரவுகள் தரவு சேமிப்புதள சுற்றுப்புறத்தோடு ஒருங்கினைக்கப்படுகிறது. அறிக்கை அளித்தல் மற்றும் பகுப்பாய்வுத் தேவைகளுக்கு குறிப்பாக உதவும் வகையில் தரவுகள் வடிவமைக்கப்படுகிறது.

ஒரு தரவு சேமிப்புத்தளம்/வர்த்தக அறிவாற்றல் முறையின் முக்கிய உட்பொருள் மெட்டாடேட்டா மற்றும் மெட்டாடேட்டாவை கையாள மற்றும் திரும்பி எடுக்க உதவும் கருவிகள். மெடாடேட்டா தரவு சேமிப்புதளத்தின் அம்சங்கள் மற்றும் அவை எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பதை வரையறுப்பதால், ரால்ஃப் கிம்பால்[13] மெடாடேட்டாவை தரவு சேமிப்புதளத்தின் DNA எனக் கூறுகிறார்.

தரவு சேமிப்புதள கருவிகள் மற்றும் வர்த்தக அறிவாற்றல் பொருட்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மெட்டாடேட்டாவின் முக்கியத்துவமும் அதிகரிக்கும். தரவுகளை சேமிக்க சுலபமான ETL செயல்பாடுகளை உருவாக்கவும், இறுதி-உபயோகிப்பாளருக்கு வர்த்தக தகவல்களைக் காட்டவும் கூட வருங்காலத்தில் மெட்டாடேட்டா உபயோகிக்கப்படலாம். ETL செயல்பாட்டை உருவாக்கும் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கூட வருங்காலத்தில் நடக்கக்கூடியதாக உள்ளது.

தரவு மற்றும் தகவல்கள் அதிகரிக்கும் போது, ஒரு குறிப்பிட்ட முடிவு எடுக்கும் முறையில் உபயோகிக்க ஏற்கெனவே இருக்கும் ஏற்ற தகவல்களை தேடுவதில் மெட்டாடேட்டா மிக முக்கியமானதாகும். சுலபமான தேடும் கருவிகளான Google போன்றவை உருவாக்கப்படலாம்.

சேமிப்பு தரவுத்தளத்தின் நிறுவன எண்ணம் கூட மெட்டாடேட்டாவுக்குப் பொருந்தும். DW/BI முறையின் அனைத்து முறைகளும் ஒரே ஒற்றை நிருவன மெட்டாடேட்டா களஞ்சியத்தை உபயோகிப்பது என்பது சரியானதாக இருக்கும். வர்த்தகம் மற்றும் தரவில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் படி மெட்டாடேட்டா களஞ்சியத்தை வைத்திருப்பது தரவு சேமிப்புதள வாழ்க்கைச் சக்கரத்தில் தொடர்ந்து நடக்கும் ஒரு முறையாகும்

பல நேரங்களில் மெட்டாடேட்டா இரண்டு வகைகளில் பிரிக்கப்படுகிறது[14] கணினி நிர்வாகிகளுக்கு பொருந்தும் உட்புற மெட்டாடேட்டா மற்றும் இறுதி-உபயோகிப்பாளர்களுக்கு பொருந்தும் வெளிப்புற மெட்டாடேட்டா.

ரால்ஃப் கிம்பலின் படி மெட்டாடேட்டாவை இதே போன்று 2 வகைகளில் பிரிக்கலாம் – தொழில்நுட்ப மெட்டாடேட்டா மற்றும் வர்த்தக மெட்டாடேட்டா. தொழில்நுட்ப மெட்டாடேட்டா உட்புற மெட்டாடேட்டாவை குறிக்கிறது, வர்த்தக மெட்டாடேட்டா வெளிப்புற மெட்டாடேட்டாவைக் குறிக்கிறது. கிம்பால் முறைசார் மெட்டாடேட்டா என்ற மூன்றாவது வகையை சேர்க்கிறார். தரவு சேமிப்புத் தளத்தின் பின் அறை (ETL - பிரித்தல், மாற்றுதல் மற்றும் ஏற்றுதல் – DW/BI முறையின் அங்கம்), முன் அறை (அறிக்கைகள் மற்றும் BI பயன்பாடுகள்) மற்றும் முன் மற்றும் பின் அறையை இணைக்கும் காட்சியளிப்பு வழங்கி ஆகியவற்றிற்கு இது பொருந்தும். காட்சியளிப்பு வழங்கியில் தரவுகள் பரிமான வடிவத்தில் திரட்டு மீகானோடு சேமிக்கப்படுகிறது.

தொழில்நுட்ப மெட்டாடேட்டா பொதுவாக வரையறைக்குட்பட்டது மற்றும் வர்த்தக தரவு விவரிப்புக்குட்பட்டது.

ஒவ்வொரு மெட்டாடேட்டா வகைக்கான உதாரணங்கள்:

 • ETLக்கான தொழில்நுட்ப மெட்டாடேட்டா
  • கட்ட வரையறைகள் மற்றும் அறிக்கை வடிவம் உள்ளிட்ட அனைத்து தரவு நிலைகளின் முதல் விவரிப்புகள்.
 • ETLக்கான வர்த்தக மெட்டாடேட்டா
  • தரவு தர சோதனைக்கான குறியீடுகள், வரக்கூடிய தவறின் தீவிரத்தைக் குறிக்கும் மதிப்பெண் மற்றும் தவறு ஏற்படும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கை ஆகியவை அடங்கிய தரவு தர திரை அளவுகள்.


 • ETLக்கான முறைசார் மெட்டாடேட்டா
  • வரிசை எண்கள், தகடில் எழுதியவை, தகடில் படித்தவை, உபயோகிக்கப்பட்ட CPU நொடிகள், முடிவு நேரங்கள், ஆரம்ப நேரங்கள் உள்ளிட்ட EPL செயல்பாடு புள்ளியியல் விவரங்கள்.
 • காட்சியளிப்பு வழங்கிக்கான தொழில்நுட்ப மெட்டாடேட்டா
  • காப்பு தகவல், பட்டியல், பார்வை, கட்டம், வழக்கமான RDBMS பெட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய தரவுதள முறை.
 • காட்சியளிப்பு வழ்ங்கிக்கான வர்த்தக மெட்டாடேட்டா
  • BI பயன்பாட்டு பொருளமைப்பு அடுக்கு, OLAP வரையறைகள் அல்லது தரவுத்தள முறை பெட்டி மற்றும் கட்டத்தினால் நேரடியாக காட்சியமைப்பு வழங்கி சார்ந்த வர்த்தக மெட்டாடேட்டா வழங்கப்படுகிறது.
 • காட்சியளிப்பு வழங்கிக்கான முறை சார் மெட்டாடேட்டா
  • காட்சியளிப்பு வழங்கி முழுவதும் பெட்டிகளின் உபயோகம் குறித்த தகவல்களை உள்ளடக்கியிருக்கும் தரவுதள கண்காணிப்பு முறை பெட்டிகள்.
 • BIக்கான தொழில்நுட்ப மெட்டாடேட்டா
  • சரியான காட்சியளிப்பு வழங்கி பொருட்களோடு பொருத்தப்பட்ட அனைத்து பெட்டிகள் மற்றும் கட்டங்களின் வர்த்தக பெயர்கள், இணைப்பு பாதைகள், கணக்கிடப்பட்ட கட்டங்கள் மற்றும் வர்த்தக குழுக்கள் அடங்கிய BI பொருள் அடுக்கு. திரட்டு கலம் செல் பயணம் மற்றும் செயல்சார்புடைமை வாயிலாக செல்லுதலும் இதில் உள்ளடங்கலாம்.
 • BIக்கான வர்த்தக மெட்டாடேட்டா

நிச்சயமாக, BI பொருள் அடுக்கு வரையறை திடமான வர்த்தக ரீதியான மெட்டாடேட்டாவைக் கொண்டுள்ளது. கூடுதல் BI வர்த்தக மெட்டாடேட்டா கீழ்கண்டவற்றைக் கொண்டுள்ளது:

  • மெதுவாக மாறும் பரிமாண கோட்பாடுகள், வெற்றிட கையாளுதல் மற்றும் ஒவ்வொரு கட்டத்திற்கும் தவறை கையாளுதல் உள்ளிட்ட உறுதி செய்யப்பட்ட இயல்பு தன்மை, உண்மை வரையறைகள் மற்றும் வர்த்தக விதிமுறைகள்.
 • BIக்கான முறை சார் மெட்டாடேட்டா
  • முடிவு வரிசை எண்ணிக்கை, ஓடும் நேரம், பயன்பாட்டு உபயோகித்தல் கண்காணிப்பு, பெட்டி, கட்டம், உபயோகிப்பவர் உள்ளிட்ட அறிக்கை மற்றும் கேள்வி செயல்படுத்துதல்

வர்த்தக அறிவாற்றல் மெட்டாடேட்டா

தொகு

தரவு சேமிப்பு தளத்திற்கான மெட்டாடேட்டாவுடன் தொடர்புப்படுத்தி விவரிக்கப்படுதல்

கோப்பு முறை மெட்டாடேட்டா

தொகு

எல்லைக்கு அப்பாற்பட்ட கோப்புகளை பற்றிய மெட்டாடேட்டாவை கிட்டத்தட்ட அனைத்து கோப்பு முறைகளும் வைத்துக்கொள்ளும். சில கணினிகள் மெட்டாடேட்டாவை செய்தி திரட்டுகளாக வைத்துக்கொள்ளும்; மற்றவை ஐநோட்கள் என்ற நிபுணத்துவம் வாய்ந்த வடிவங்கள் அல்லது கோப்பின் பெயரின் கூட வைத்துக்கொள்ளும். சுலபமான டைம்ஸ்டாம்ப்கள், மோட் பிட்கள் மற்றும் மற்ற செயல்பாட்டால் உபயோகிக்கப்படும் சிறப்பு நோக்க தகவல்களில் இருந்து ஐகான்ஸ் மற்றும் இலவச-எழுத்து கருத்துகள் மற்றும் திரட்டு இயல்பு விலை ஜோடிகள். வரை மெட்டாடேட்டா எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

மேலும் வலுவான மற்றும் திறந்த முனை மெட்டாடேட்டா இருப்பதனால், கோப்புகளை மெட்டாடேட்டாவை வைத்து தேடுவதற்கு உதவி புரிகிறது. யுனிக்ஸில் இருந்த தேடுதல் உபயோகம் ஒரு உதாரணமாக இருந்தது, ஆனால் நவீன கணினியில் பல நூறு ஆயிரம் கோப்புகளைத் தேடும் போது இது பயனற்றதாக இருந்தது. ஆப்பிள் கணினியின் மேக் OS X இயங்கு முறை, தனது பதிப்பு 10.4ல் ஸ்பாட்லைட் என்ற சிறப்பியல்பை வைத்து கோப்பு மெட்டாடேட்டாவை பிரித்தல் மற்றும் தேடுதலுக்கு ஆதரவு அளிக்கிறது. இதே போன்ற செயல்பாட்டை உருவாக்க Microsoft நிறுவனம் வேலை செய்து, SharePoint வழங்கியிலும் இருக்கும் படி தனது Windows Vista உடனடி தேடுதலை உருவாக்கியது. விரிவாக்கப்பட்ட கோப்பு இயல்புகளை உபயோகித்து Linux கோப்பு மெட்டாடேட்டாவை செயல்படுத்துகிறது.

திட்ட மெட்டாடேட்டா

தொகு

சுருக்கமாகவும் அல்லது அமைவடிவம் உள்ளதாகவும் இருக்கும் மென்பொருள் கட்டுமானங்களில் உபயோகிக்கப்படும் கட்டுப்பாடு தரவுகளை விவரிக்க மெட்டாடேட்டா சுலபமாக உபயோகிக்கப்படுகிறது. பல செயல்படுத்தக் கூடிய கோப்பு வகைகள் குறிப்பிட்ட, பொதுவாக அமைவடிவம் பெறக் கூடிய, நடத்தை சார்ந்த கணினி இயங்குநேர குணாதிசயங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடும் “மெட்டாடேட்டா என்று அழைக்கப்படுவதை உள்ளடக்குகின்றன. ஆயினும், சேமிக்கப்பட்ட –திட்டமிட்ட கணக்கீடு கட்டுமானத்தின் பொதுவான அம்சங்களையும் திட்ட “மெட்டாடேட்டா”வையும் சரியான படி வித்தியாசப்படுத்துவது கடினமான அல்லது முடியாத காரியம். இயந்திரம் அதனை படித்து அதன் மேல் செயல்படத் தொடங்கினால் அது ஒரு கணக்கிடும் விதிமுறை மற்றும் அதற்கு முன் உள்ள “மெட்டா” என்பதற்கு முக்கியத்துவம் இருக்காது.

ஜாவாவில், பிரதிபலிப்புக்கு ஆதரவு அளிக்கும் படி மற்றும் பிரிவுகளை இயக்கவியல் சார்ந்து இணைக்கும் ஜாவா இயந்திரம் மற்றும் ஜாவா தொகுப்பு கருவி ஆகியவை உபயோகிக்கும் கோப்பு வகைகள் மெட்டாடேட்டாவை கொண்டுள்ளது. ஜாவா இயக்குதளத்தில், தனது பொதுவான பதிப்பு J2SE 5.0 வில் இருந்து வளர்ச்சி கருவிகளால் உபயோகமாகும் கூடுதல் உரை விளக்கதை அனுமதிக்கும் மெட்டாடேட்டா உபயோகத்தை உள்ளடக்குகின்றன.

MS-DOSல், COM கோப்பு வகை மெட்டாடேட்டாவை சேர்ப்பதில்லை , ஆனால் EXE கோப்பு வகை மற்றும் Windows PE வகை சேர்க்கிறது. இந்த மெட்டாடேட்டாவில் நிறுவனத்தின் பெயர், திட்டம் உருவாக்கப்பட்ட தேதி, பதிப்பு எண் மற்றும் மேலும் பல சேர்க்கப்படலாம்.

Microsoft .NET செயல்படும் வகையில், ஓடும் போது பிரதிபலிப்பை அனுமதிக்கும் கூடுதல் மெட்டாடேட்டா சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போது இருக்கும் மெண்பொருள் மெட்டாடேட்டா

தொகு

மெண்பொருள் உறுதி, மெண்பொருள் நவீனமயமாக்கல் மற்றும் மெண்பொருள் தேடுதல் ஆகிய நோக்கங்களுக்கான தற்போதைய பயன்பாடுகளை பிரதிபலிப்பதற்காக பொருள் மேலாண்மை குழு (OMG) மெட்டாடேட்டாவை வரையறுத்துள்ளது. OMG அறிவாற்றல் தேடுதல் மெட்டா மாதிரி (KDM) என்று அழைக்கப்படும் இந்த குறியீடு தான் OMG குழுமத்தில் “பின் புற மாதிரி” ஆகும். KDM என்பது, நடத்தை (திட்ட ஓட்டம்), தரவு மற்றும் வடிவம் ஆகியவை உள்ளிட்ட ஒரு மொத்த நிறுவன பயன்பாடின் ஒருங்கிணைந்த பார்வையை அளிக்கும் ஒரு பொதுவான மொழி-கட்டுப்பாடற்ற இடைப்பட்ட பிரதிநிதித்துவம். வர்த்தக விதிமுறை தேடுதல் என்பது KDMன் ஒரு பயன்பாடாகும்

அறிவாற்றல் தேடுதல் மெட்டா மாதிரி (“மைக்ரோ KDM” எனப்படுவது), திட்டங்களின் மாறா நிலை ஆய்வு செய்ய உகந்ததாக இருக்கும், சிறு நரம்புடை கீழ் மட்ட பிரதிநிதித்துவத்தை உள்ளடக்குகிறது.

ஆவண மெட்டாடேட்டா

தொகு

Microsoft SharePoint, Microsoft Word மற்றும் மற்ற Microsoft Office பொருட்கள் உட்பட பல ஆவணங்களை உருவாக்கும் திட்டங்கள், ஆவண கோப்புகளிலேயே மெட்டாடேட்டாவை சேமிக்கிறது. கோப்பை உருவாக்கியவரின் பெயர் (இயங்கு முறையில் இருந்து பெற்றது), கடைசியாக கோப்பில் மாற்றங்கள் செய்தவர் பெயர், எத்தனை முறை அந்த கோப்பு அச்சடிக்கப்பட்டது, எத்தனை முறை அந்த கோப்பில் மறு ஆய்வு செய்யப்ப்பட்டது என்பதும் கூட இந்த மெட்டாடேட்டாவில் இருக்கும். மற்ற சேமிக்கப்பட்ட விஷயங்களான, அழிக்கப்பட்ட எழுத்துகள் (அழிக்கப்பட வேண்டாம் என்ற ஆணையின் போது சேமிக்கப்பட்டது), ஆவண கருத்துரைகள் ஆகியவையும் “மெட்டாடேட்டா” என்று பொதுவாக அழைக்கப்படுகிறது மற்றும் விநியோகிக்கப்பட்ட கோப்புகளில் கவனக்குறைவாக சேர்க்கப்பட்ட விஷயங்கள் சில சமயம் தேவையில்லாத வெளிப்பாடுகளுக்கு வழி வகுக்கும்.

ஆவண மெட்டாடேட்டா முக்கியமாக வழக்குகளில் முக்கியமானது. தனிப்பட்ட ஊறு விளைவிக்கக் கூடிய தரவுகள் அடங்கிய இந்த முக்கிய தகவலை (மெட்டாடேட்டா) வழக்கிற்கு தேவைப்படலாம். இந்த தரவு பல வழக்குகளில் இணைக்கப்பட்டு பல நிறுவனங்களை சட்ட சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளது.

பல சட்ட நிறுவனங்கள் தற்போது[யார்?] மெட்டாடேட்டா அழிப்பு கருவிகளை உபயோகிக்கத் தொடங்கியுள்ளது. நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படும் முன் இவை ஆவணங்களை சுத்தம் செய்கிறது. மின்ணனு கண்டுபிடிப்பு வழியாக முக்கிய தரவுகள் பாதுகாப்பற்ற முறையில் கசியும் அபாயத்தை இந்த முறை ஓரளவு தடுக்கிறது. முழுமையாகவும் மற்றும் மொத்தமாகவும் செய்யப்படத் தேவையான முறையான குறைதல் என்ற முறையில் மெட்டாடேட்டாவை வெளியேற்றுவது என்பது மட்டுமே உள்ள வேலையாகும்.

செயல்படுத்தக் கூடிய கோப்புகளின் பட்டியலுக்கு பொருள் கோப்பை பார்க்கவும்.

டிஜிட்டல் நூலக மெட்டாடேட்டா

தொகு

ஒரு டிஜிட்டல் நூலகத்தில் உள்ள பொருட்களை விவரிக்க அதிகபட்சமாக மெட்டாடேட்டாவின் மூன்று வகைகள் உபயோகிக்கப்படுகிறது:[15]

 1. விவரிப்பு - ஒத்த திட்டங்கள் அல்லது உதவிகளை கண்டுபிடித்தல், MARC அறிக்கைகளை பிரித்தல் போன்ற பொருட்களின் அறிவுசார் பொருட்களை விவரிக்கும் தகவலாகும். இது பொதுவாக ஆதார நூற் பட்டியல் தேவைகளுக்காக மற்றும் தேடுதல் மற்றும் பெறுதல் ஆகியவற்றிற்காக உபயோகிக்கப்படுகிறது.
 2. வடிவமைப்பு – சார்புடைய பாகங்களை செய்வதற்காக ஒவ்வொரு பொருளையும் மற்றதோடு இணைக்கும் தகவல் (உதா – புத்தகத்தில் உள்ள பக்கங்களின் தனிப்பட்ட படங்களை புத்தகத்தை உருவாக்கும் மற்றவற்றோடு சேர்க்கும் தகவல்).
 3. நிர்வாகம் – பொருளை கையாள அல்லது கட்டுப்படுத்த உபயோகிக்கும் தகவலாகும். அது எவ்வாறு தேடிச்சேர்க்கப்பட்டது, அதன் சேமிப்பு வகை, காப்புரிமை மற்றும் அனுமதி தகவல் மற்றும் டிஜிட்டல் பொருட்களை நீண்ட காலத்திற்கு சேமிக்க தேவையான தகவல் ஆகியவை இதில் அடங்கும்.

டிஜிட்டல் நூலகத்தின் தரத்தில் டப்ளின் கோர், METS, PREMIS ஸ்கீமா மற்றும் OAI-PMH போன்றவை அடங்கும்.

பட மெட்டாடேட்டா

தொகு

மெட்டாடேட்டா அடங்கிய பட கோப்புகளின் உதாரணங்களில் மாற்றக் கூடிய பல கோப்பு வகை (EXIF) மற்றும் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட பட கோப்பு வகை (TIFF) ஆகியவை அடங்கும்.

TIFF அல்லது EXIF கோப்புகளில் அடக்கப்பட்ட படங்களுடைய மெட்டாடேட்டா இருப்பது அந்த படத்தைப் பற்றிய கூடுதல் தரவுகளை பெறுவதற்கான ஒரு வழியாகும். படங்களை பொருட்களோடு கூட குறியீட்டிடும் படங்கள், தொடர்புடைய உணர்ச்சிகள் மற்றும் விவரிப்பு வாக்கியங்கள் ஆகியவற்றோடு தொடர்புப்படுத்துவது இணையம் உபயோகிப்பவர்கள் மொத்த படங்களையும் தேடுதலுக்கு பதிலாக படங்களை சுலபமாக கண்டறிய உதவுகிறது. இந்த தொடர்பு சேவைகளுக்கான முக்கிய உதாரணம் Flickr, இதில் உபயோகிப்பவர்கள் படங்களை சேர்த்து அதன் உட்பொருட்களை விவரிக்க முடியும். தளத்தின் மற்ற காப்பாளர்கள், அந்த குறியீடுகளை தேடலாம். Flickr ஃபோக்ஸோனமியை உபயோகிக்கிறது: ஓரு கட்டுப்படுத்தப்பட்ட சொல்லகராதிக்கு பதிலாக உபயோகத்தின் அடிப்படையில் சொல்லகராதியை சமூகம் வரையறுக்கும் ஒரு முக்கிய எழுத்து முறையாகும்.

உதாரணமாக, உபயோகிப்பவர்கள் நிறுவன தேவைகளுக்காக Adobeன் விரிவாக்கப்பட்ட மெட்டாடேட்டா இயங்குதள (XMP) மொழியை உபயோகித்து படங்களை தொடர்புபடுத்த முடியும்.

வெளிப்படுத்தும் கட்டுப்பாடுகளை விவரிக்க தொழில்நுட்ப மெட்டாடேட்டா தொடர்புகளை டிஜிட்டல் புகைப்படங்கள் அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்துள்ளது. புகைப்பட RAW கோப்பு வகைகளான அடோப் பிரிட்ஜ் அல்லது ஆப்பிள் கணினியின் அபேர்சர் போன்றவர்ற்றை உபயோகித்து புகைப்படம் எடுப்பவர்கள் எடுக்கும் போது, அதன் பின் பதப்படுத்துதலுக்காக புகைப்படக் கருவி மெட்டாடேட்டாவை உபயோகிக்கலாம்.

ஜியோஸ்பேடியல் மெட்டாடேட்டா

தொகு

இடம் சார் பொருட்களான (தரவுக்குழுக்கள், வரைபடங்கள், அம்சங்கள் அல்லது ஜியோஸ்பேடியல் அங்கம் உடைய வெறும் ஆவணங்கள்) ஆகியவற்றை விவரிக்கும் மெட்டாடேட்டா 1994லிருந்தே இருந்தது (MIT நூலக பக்கத்தின் FGDC மெட்டாடேட்டாவை பரணிடப்பட்டது 2006-10-18 at the வந்தவழி இயந்திரம் பார்க்கவும்). இந்த வகை மெட்டாடேட்டா பற்றிய விவரிப்பு முழுமையாக ஜியோஸ்பேடியல் மெட்டாடேட்டா பக்கத்தில் உள்ளது.

மெட்டா-மெட்டாடேட்டா

தொகு

மெட்டாடேட்டா என்பதும் தரவு, ஆதலால் மெட்டாடேட்டாவிற்கு மெட்டாடேட்டா இருப்பதும் சாத்தியம் – “மெட்டா மெட்டாடேட்டா”. எழுத்து-இல்லாத தேடுதல் இயந்திரத்தினால் உருவாக்கப்பட்ட பின்பக்க பொருளடக்கம் போன்ற இயந்திரத்தினால் உருவாக்கப்பட்ட மெட்டா-மெட்டாடேட்டா, மெட்டாடேட்டாவாக ஒத்துக்கொள்ளப்படாது.

மெட்டாடேட்டாவும் சட்டமும்

தொகு

ஐக்கிய அமெரிக்கா

தொகு

ஐக்கிய அமெரிக்கா வழக்குகளில் மெட்டாடேட்டா சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பது மிகவும் அதிகமாகி உள்ளது. வழக்காளர்கள் மெட்டாடேட்டாவை கண்டறிதல் உள்ளிட்ட மெட்டாடேட்டா குறித்த பல கேள்விகளை நீதிமன்றங்கள் பார்த்துள்ளது. சிவில் முறைகளின் ஃபெடரல் விதிமுறைகள் மின்னணு ஆவணங்கள் பற்றிய விதிமுறைகளை மட்டும் குறிப்பிடுகின்றன. அதை தொடர்ந்து வழக்கு சட்டங்கள் வழக்காளர்கள் மெட்டாடேட்டாவையும் வெளியிட வேண்டும் என்பதை விவரிக்கின்றன.

குறிப்புதவிகள்

தொகு
 1. 1.0 1.1 "ஹோபர்மேன், ஸ்டீவ், தரவு மாதிரி சுலபமாக்கப்பட்டது, 2வது பதிப்பு, டெக்ணிக்ஸ் பப்ளிகேஷன்ஸ், LLC, 2009, பக்கம் 313". Archived from the original on 2012-01-18. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
 2. பிட்டல் மற்றும் ஸ்காட், ஆண் இண்டர்மீடியட் கிரேக்க-ஆங்கில லெக்ஸிகான் OUP, பக்கம் 500ff.
 3. ஜேம்ஸ் மார்டின், ஸ்ட்ரேடஜிக் தரவு திட்ட முறைகள், பிரண்டிஸ்-ஹால், இங்க்., எங்கில்வுட் கிளிஃப்ஸ், நியூ ஜெர்ஸி, 1982, ப.127.
 4. அமெரிக்க நூலக குழுமம், மெட்டாடேடா சுருக்க அறிக்கைக்கான பரணிடப்பட்டது 2007-11-14 at the வந்தவழி இயந்திரம் சிறப்பு பணிப்பிரிவு, ஜூன் 1999
 5. டி.சி.ஏ. பல்டர்மேன், இஸ் இட் டைம் ஃபார் ஏ மோரடோரியம் ஆண் மெட்டாடேட்டா? IEEE MultiMedia , அக்டோபர்-டிசம்பர் 2004
 6. வில்லியம் ஆர். டுரல், தரவு நிர்வாகம் : தரவு நிர்வாகத்துக்கான ஒரு செய்முறை வழிகாட்டி , மெக்கிரா ஹில், 1985
 7. பிரதர்டன், எஃப்.பி மற்றும் சிங்கிலி, பி.டி. 1994 மெட்டாடேட்டா: உபயோகிப்பாளர்களின் பார்வையில், மிகப்பெறிய தரவுத்தளங்களிற்கான (VLDB) சர்வதேச கருத்தரங்கத்தின் நடவடிக்கைகள், 1091-1094
 8. டேவிட் மார்கோ, மெட்டாடேட்டா களஞ்சியத்தை உருவாக்கி மற்றும் கையாளுதல்ல்: ஒரு முழு வாழ்க்கைச் சக்கர வழிகாட்டி, வில்லி, 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-35523-2
 9. டேவிட் சி. ஹே, தரவு மாதிரி வடிவங்கள்: ஒரு மெட்டாடேட்டா வரைபடம், மார்கன் காஃப்மேன் 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-088798-3
 10. ஆர். டோட் ஸ்டீஃபன்ஸ் (2003). மெட்டாடேட்டாவை அறிவாற்றல் தகவல் தொடர்பு கருவியாக உபயோகித்தல். சர்வதேச தொழில்முறை தகவல் தொடர்பு கருத்தரங்கு, 2004ன் நடவடிக்கைகள். மின்னியாபொலிஸ், MN: மின்சார மற்றும் மின்னணு கட்டுமானர்களின் நிறுவனம், இங்க்.
 11. Sualeh Fatehi. "SchemaCrawler". SourceForge. Archived from the original on 2009-09-03. பார்க்கப்பட்ட நாள் 2010-02-09.
 12. இன்மோன், டபிள்யூ.எச் தலைப்பு: தரவு சேமிப்பு தளம் என்றால் என்ன? பிரிசம் சொல்யூஹன்ஸ். பதிப்பு 1. 1995. (http://en.wikipedia.org/wiki/Data_warehouse)
 13. ரால்ஃப் கிம்பால், டேட்டா வேர்ஹவுஸ் லைஃப்சைக்கிள் டூல்கிட் , இரண்டாவது பதிப்பு. நியூயார்க், வில்லி, 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-14977-5, பக்கம் 10, 115-117,131-132, 140, 154-155
 14. மெட்டேர்னோ கோல்ஃபரெல்லி மற்றும் ஸ்டெஃபேனோ ரிச்சி, தரவு சேமிப்பு தள வடிவம்: நவீன கோட்பாடுகள் மற்றும் முறைகள், மெக்ரா ஹில்; முதல் பதிப்பு, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-161039-1, பக்கம் 25
 15. http://www.odl.ox.ac.uk/metadata.htm பரணிடப்பட்டது 2010-01-10 at the வந்தவழி இயந்திரம் http://www.cs.cornell.edu/wya/DigLib/MS1999/Chapter4.html

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீதரவு&oldid=3788508" இலிருந்து மீள்விக்கப்பட்டது