கேள்வியும் நிரம்பலும்
கேள்வியும் நிரம்பலும் அல்லது தேவையும் வழங்கலும் (supply and demand) குறும்பொருளியல் கோட்பாடுகளில் ஒன்று. சந்தையில் ஒரு பண்டத்தின் விலையைத் தீர்மானிக்கப் பயன்படும் பொருளியியல் மாதிரிகளில் ஒன்று.
கேள்வி
தொகுகுறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளின் விலை தவிர்ந்த ஏனைய காரணிகள் மாறாத போது அப் பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் நுகர்வோர் கொள்வனவு செய்யத் தயாராகவுள்ள பல்வேறுபட்ட தொகைகள் கேள்வி அல்லது தேவை எனப்படும்.
தனிநபர் கேள்வி
தொகுகுறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் ஒரு தனிநபரால் கொள்வனவு செய்யத்தயாராக இருக்கின்ற அளவே தனிநபர் கேள்வி எனப்படும்.
சந்தைக் கேள்வி
தொகுகுறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் சந்தையிலுள்ள அனைத்துக் கொள்வனவாளர்களாலும் கொள்வனவு செய்யத்தயாராக இருக்கின்ற பல்வேறுபட்ட தொகைகளின் கூட்டுத்தொகை சந்தைக் கேள்வி எனப்படும்.
கேள்வியைத் தீர்மானிக்கும் காரணிகள்
தொகு- குறித்த பண்டத்தின் விலை
- ஏனைய பொருட்களின் விலை
- வருமானம்
- சுவை
- எதிர்பார்க்கை
- அரச நடவடிககைள
நிரம்பல்
தொகுகுறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் உற்பத்தியாளர்களால் விற்பனை செய்யத் தயாராகவுள்ள பல்வேறுபட்ட தொகைகள் நிரம்பல் அல்லது வழங்கல் எனப்படும்.
குறிப்பிட்ட பண்டம் ஒன்றை சந்தைக்கு வழங்குகின்ற ஒரு நிறுவனத்தின் நிரம்பல் அத்தனி நிறுவனத்தின் நிரம்பலாக கொள்ளப்படுகிறது.
சகல நிறுவனத்தாலும் குறிப்பிட்ட ஒரு பண்டத்தில் நிரம்பல் செய்யப்படும் தொகைகளின் கூட்டுத் தொகை சந்தை நிரம்பலாக காணப்படும்.
நிரம்பலை தீர்மானிக்கும் காரணிகள்
தொகு- குறித்த பண்டத்தின் விலை
- உள்ளீடுகளின் விலை
- தொழில்நுட்பம்
- தொடர்புடைய பண்டத்தின் விலை
- ஏனைய காரணிகள்