கே. ஆர். என். ராஜேஷ்குமார்

கே. ஆர். என். ராஜேஷ்குமார் (K. R. N. Rajeshkumar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழகத்தினைச் சார்ந்த இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் ஆவர். இவர் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் கட்டாநச்சாம்பட்டியினைச் சார்ந்தவர். இவர் கூட்டுறவு பாடத்தில் இளம் கலை பட்டத்தினையும் முதுநிலை வணிகவியல் பட்டத்தினைச் சென்னை, சென்னை பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின் போதும் பின்னர் 2022ஆம் ஆண்டு சூலை நடைபெற்ற தேர்தலின்போதும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

கே. ஆர். என். ராஜேஷ்குமார்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
சூலை 2022
தொகுதிதமிழ்நாடு
பதவியில்
2021
பதவியில்
2021–2022
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்ரா. பூங்கொடி
வாழிடம்(s)கே. ஆர். தோட்டம், இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு

மேற்கோள்கள் தொகு

  1. "Shri K.R.N. Rajeshkumar". National Portal of India. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
  2. "DMK leaders, cadre unhappy over Rajeshkumar's candidature to RS". The Statesman. 15 September 2021. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
  3. "DMK announces Kanimozhi Somu and KRN Rajeshkumar as candidates to Rajya Sabha". The Newsminute. 14 September 2021. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._என்._ராஜேஷ்குமார்&oldid=3926590" இலிருந்து மீள்விக்கப்பட்டது