கே. ஆர். டேவிட்
கே. ஆர். டேவிட் ஈழத்து எழுத்தாளர் ஆவார். புதினம், குறும்புதினம், சிறுகதை, உருவகக்கதை, இலக்கிய, அரசியல் ஆய்வு எனப் பல்துறைகளில் எழுதி வருபவர்.
கே. ஆர். டேவிட் | |
---|---|
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | கல்விப் பணிப்பாளர் , ஈழத்து எழுத்தாளர் |
இலங்கை, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1966 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இவரது “எழுதப்படாத வரலாறு” என்ற சிறுகதை தரம் எட்டு தமிழ்மொழியும் இலக்கியமும் பாடநூலில் இடம் பெற்றுள்ளது.[1] சாவகச்சேரி பிரதேச உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
விருதுகள்
தொகு- 2006–2008ஆம் ஆண்டுகளுக்குரிய கனக செந்தி கதா விருது
- 2011 இல் கலாபூஷணம் விருது
- 2013 இல் சிறந்த எழுத்தாளருக்கான இதழியல் விருது
- "மண்ணின் முனகல்" என்ற சிறுகதைத் தொகுதிக்கு 2013 ஆம் ஆண்டுக்கான நாமக்கல் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருது கிடைத்தது.[1][2]
- 2013 இற்கான தமிழியல் விருது இவரது பாடுகள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 நாமக்கல் சின்னப்ப பாரதி இலக்கிய விருது பெறும் இலங்கை எழுத்தாளர், வீரகேசரி, அக்டோபர் 6, 2013
- ↑ சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: என். சங்கரய்யா தேர்வு, தினமணி, 13 சூலை 2013