கே. இராமகிருசுணா

இந்திய அரசியல்வாதி

கே. இராமகிருசுணா (K. Ramakrishna) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1957 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஆந்திரப்பிரதேச அரசியலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராக அனந்தப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலக் குழுவின் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளராக இருந்தார். கர்நூல் மாவட்டம் மொளகவள்ளியில் வசித்து வருகிறார்.[1][2]

கே. இராமகிருசுணா
K. Ramakrishna
பத்திரிகையாளர் சந்திப்பில் கே. இராமகிருசுணா
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி செயலாளர், ஆந்திரப் பிரதேச மாநிலக் குழு
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2014
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1994–1999
முன்னையவர்போதிமல்ல நாராயண ரெட்டி
பின்னவர்பி. நாராயண ரெட்டி
தொகுதிஅனந்தப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சனவரி 1957 (1957-01-16) (அகவை 67)
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வாழிடம்மொளகவல்லி, கர்னூல் மாவட்டம்

மேற்கோள்கள்

தொகு
  1. "CPI announces separate councils for Telangana,AP" (in en-IN). The Hindu. 2014-05-23. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/cpi-announces-separate-councils-for-telanganaap/article6041770.ece. 
  2. India, The Hans (2015-03-07). "Ramakrishna AP CPI State Secretary". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._இராமகிருசுணா&oldid=3834367" இலிருந்து மீள்விக்கப்பட்டது