கே. என். கோவிந்தாச்சார்யா
இந்திய அரசியல்வாதி
கே. என். கோவிந்தாச்சார்யா (பிறப்பு 1943 மே 2) என்பவர் இந்திய அரசியல்வாதி, இராசுட்டிரிய சேவக் சங்கப் பரப்புநர், சமூகச் செயற்பாட்டாளர், சூழலியல் செயற்பாட்டாளர் எனவும் அறியப்படுகிறார்.
கே. என். கோவிந்தாச்சாரியா | |
---|---|
கே. என். கோவிந்தாச்சாரியா | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 மே 1943 திருப்பதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | சுயேச்சை |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | இல்லை |
முன்னாள் கல்லூரி | பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் |
வேலை | சமூக ஆர்வலர், அரசியல்வாதி, சூழலியல் செயற்பாட்டாளர் |
அரசியல் பணிகள்
தொகு1988 ஆம் ஆண்டில் கோவிந்தாச்சார்யா பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதில் 2000 வரை பொதுச்செயலாளராக இருந்தார். ஆனால் தற்சமயம் பாரதிய சனதா கட்சியின் நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசி வருகிறார்.[1]
இவருடைய முன்னெடுப்பு முயற்சியால் பாரத் விகாஸ் சங்கம் என்னும் அமைப்பின் 3 ஆவது தேசிய மாநாடு 2011 திசம்பர் இறுதியில் கல்புர்கியில் நடந்தது.[2]
இந்திய அரசியலிலும் பெரும் குழுமங்களிலும் நடைபெறும் ஊழல்களைக் கண்டித்து சனநாயகக் காப்பு முன்னணி என்னும் ஓர் அமைப்பை 2011 திசம்பர் 25 இல் தொடங்கினார்.