கே. எஸ். ராதாகிருஷ்ணன்
கே.எஸ். இராதாகிருஷ்ணன் ஓர் தமிழக அரசியல்வாதி திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்தார். இவர் ஒரு வழக்கறிஞர். மேலும், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், எழுத்தாளராகவும் இயங்கி வருகிறார். பல நூல்களை எழுதியுள்ள இவர், கதைசொல்லியின் இணை ஆசிரியராகவும், சமூக வலைதளங்களில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவதோடு, தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்கிறார். 21 அக்டோபர் 2022 அன்று இவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.[1][2]
பிறப்பும் கல்வியும்:
தொகுதென்காசி மாவட்டம், குறிஞ்சாங்குளம் கிராமத்தில் பிறந்தவர்[3]. விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், முதுகலை, சட்டப்படிப்பும் பட்டமும் பெற்றவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் பல்வேறு சிவில், கிரிமினல் மற்றும் பொதுநல வழக்குகளில் வாதாடியுள்ளார். மேலும், புது தில்லியில் உள்ள இந்திய சட்ட நிறுவனத்திலும், சர்வதேச சட்ட அமைப்பின் இந்தியா பிரிவிலும், இந்தியா மத்தியஸ்த கவுன்சிலிலும் ஆயுட்கால உறுப்பினராக உள்ளார். விவசாயப் பிரச்சனைகளுக்காகப் போராடியவர்.
அரசியல் களம்:
தொகுகர்மவீரர் காமராசர், கலைஞர் கருணாநிதி, ஈ.வி.கே.சம்பத், பழ.நெடுமாறன், திரு. வைகோ போன்ற தமிழகத்தின் மிகச்சிறந்த தலைவர்களின் நன்மதிப்பையும், கவிஞர் கண்ணதாசன், விவசாயிகளின் தலைவர் சி. நாராயணசாமி நாயுடு ஆகியோரின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன்பாகவே, தமிழக அரசியல் கட்சிகளில் முதன்முறையாக செய்தித்தொடர்பாளராக[4] நியமிக்கப்பட்டவர். 49 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பல தலைவர்களின் அன்பைப் பெற்றவர். பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைவாசம் கண்டவர். 1989[5] மற்றும் 1996[6] ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஆரம்பக்கட்டத்தில் வெளியுலகிற்கு முகம்காட்டாமல், தலைமறைவு வாழ்வில் இருந்தபோது, இவரோடு தங்கியிருந்து நட்பு பாராட்டியவர்.
வகித்த பொறுப்புகள்:
தொகுதற்சமயம் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழகப்பிரிவின் இணைச்செயலாளராக இருக்கும் இவர், அரசு அமைத்த பல்வேறு விசாரணை கமிஷன்களிலும் வழக்கறிஞராக ஆஜராகியுள்ளார். கடந்தகாலத்தில் இவர் வகித்த முக்கிய பொறுப்புகளில் சில:
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில் கழகத்தின் சட்ட ஆலோசகர்.
- கொச்சி துறைமுக கழகத்தின் மத்தியஸ்த அமைப்பின் நடுவர்.
- 12 வருடங்கள் மத்திய திரைப்பட தணிக்கை துறையின் உறுப்பினர்.
- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்.
- மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் பயணிகள் நலவாரியத்தின் உறுப்பினர்.
- ஒன்றிய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழுள்ள குழந்தைத்தொழிலாளர் மற்றும் தொழிலாளர் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் உறுப்பினர்.
எழுத்தாளராக
தொகுஎழுத்து மற்றும் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட கே.எஸ்.ஆர் அவர்கள், கதைசொல்லி[7] எனும் காலாண்டு இலக்கிய இதழை திரு.கி.ராஜநாராயணன்[8] உடன் இணைந்து நடத்திவுருகிறார். மேலும், தற்கால சமூகப்பிரச்சனைகள் குறித்து பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் சில:
- உரிமைக்கு குரல் கொடுப்போம்
- மனித உரிமைகள் என்றால் என்ன?
- நிமிர வைக்கும் நெல்லை
- தமிழ்நாடு 50
- கரிசல் காட்டில் கவிதை சோலை பாரதி
- கனவாகிப் போன கச்சத்தீவு[3]
- ஈழத் தமிழர் பிரச்சினை
- சேதுக் கால்வாய் – ஒரு பார்வை[9]
- தூக்குக்கு தூக்கு
- முல்லைப் பெரியாறு
- மனித உரிமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்
- தமிழ்நாடு சட்ட மேலவை
- திமுகவும் சமூக நீதியும்
- Eelam Tamil’s Issue
- Impunity in Sri Lanka
தமிழக நதி நீர் பிரச்சினைகள், மத்திய-மாநில உறவுகள், தமிழக விவசாயிகளின் போராட்டம், பாஞ்சாலங்குறிச்சி சீமை சரிதம், Aspects of Democracy & Concepts, தினமணி கட்டுரைகள் தொகுப்பு என இவரின் நூல்கள் அச்சில் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ மல்லிகார்ஜுன கார்கே பற்றி பதிவு… கே.எஸ் ராதாகிருஷ்ணன் நீக்கம் ஏன்? புதிய தகவல்கள்
- ↑ DMK suspends spokesperson K.S. Radhakrishnan
- ↑ 3.0 3.1 கனவாகிப்போன கச்சத்தீவு[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ MDMK spokesman joins DMK
- ↑ 1989 சட்டமன்ற தேர்தல்
- ↑ 1996 சட்டமன்ற தேர்தல்
- ↑ கீற்று
- ↑ "கதைசொல்லி". Archived from the original on 2017-01-14. பார்க்கப்பட்ட நாள் 2017-03-10.
- ↑ சேதுக்கால்வாய் - ஒரு பார்வை