கே. ஒய். நாராயணசுவாமி
கே. ஒய். நாராயணசுவாமி (K. Y. Narayanaswamy) என்று அழைக்கப்படும், குப்பூர் யாலப்பா நாரயணசுவாமி, ஒரு பிரபல கன்னட கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். தற்போது பெங்களூரு மகாராணி கிளஸ்டர் பல்கலைக்கழகத்தில் கன்னட பேராசிரியராக உள்ளார். இவர், கலாவ், அனபிக்னா சகுந்தலா, சக்ரரத்னா, ஹுலிசீர், மற்றும் வினுரா வேமா உள்ளிட்ட பல பிரபலமான கன்னட நாடகங்களை எழுதியவராவார். குவேம்புவின் ஷுத்ரா தபஸ்வியை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்துள்ளார். குவேம்புவின் மகத்தான இசைப்பாடலான, மாலேகல்லி மதுமகலுவை 9 மணி நேர நாடகமாக மாற்றிய பெருமைக்குரியவராக உள்ளார். மேலும், இவர் களவு, மற்றும் சூரியகாந்தி போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.[1]
நவீன கன்னட நாடக அரங்கில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் பம்பபாரத நாடகத்திற்காக இவர் கர்நாடக சாகித்ய அகாதமி விருதை [2] பெற்றார். இவர் ஒரு செல்வாக்கு மிக்க எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளராக கருதப்படுகிறார்.
சுயசரிதை
தொகுகர்நாடகாவின் கோலார் மாவட்டம் மாலூர் வட்டத்தின் மஸ்திக்கு அருகிலுள்ள குப்பூர் கிராமத்தில் கே.ஒய். நாராயணசுவாமி பிறந்தார். அவரது பெற்றோர் யாலப்பா மற்றும் முனியம்மா ஆவர். மஸ்தியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், கன்னடத்தில் இளங்கலை (பி.ஏ), முதுகலை (எம்.ஏ) மற்றும் எம்.பில் பட்டங்களைப் பெறுவதற்காக பெங்களூருக்குச் சென்றார். நீரதீவிகே என்ற தலைப்பில் அவரது முனைவர் பட்டத்திற்கான ஆய்வு, 'தண்ணீர்' குறித்த கலாச்சார தொடர்புகளின் சமூக புரிதலில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. தற்போது, இவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.
எழுத்து வாழ்க்கை
தொகுகே.ஒய்.நாராயணசுவாமி, முதன்முதலில் தனது நாடகமான பம்பபாரதத்துடன் அறிமுகமானார். அதன் சாராம்சம் பம்பாவின் காவிய கவிதை விக்ரமார்ஜுனவிஜயாவை அடிப்படையாகக் கொண்டது, இது பம்பபாரதம் என்றும் அழைக்கப்படுகிறது. பம்பாவின் காவியம் மகாபாரதத்தை அர்ஜுனனின் கண்ணோட்டத்தில் தொடர்புபடுத்தும் அதே வேளையில், இவரின் நாடகம், மகாபாரதத்தின் நிகழ்வுகள் பற்றிய கர்ணனின் பார்வையை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், இந்த நாடகம் பம்பாவின் பதிப்பு மற்றும் மகாபாரதத்தின் ஒரு புனரமைப்பு ஆகும், மேலும் இது கதைகளை சமகால காலத்திற்கு நகர்த்துகிறது. மற்றும் சமகால சம்பந்தப்பட்ட சிக்கல்களிலும் கவனம் செலுத்துகிறது. நாடகக் குழு சமுதாயத்தால் அரங்கேறிய இந்த நாடகம், வெற்றிகரமாக நூறு நிகழ்ச்சிகளைக் கண்டது.
பம்பபாரதத்திலிருந்து, அவரது மற்ற நாடகங்களான கலாவு, அனபிக்னா சகுந்தலா, மற்றும் மலே மந்திரிகா ஆகியவை கன்னட பார்வையாளர்களால் பரவலாக பாராட்டப்பட்டுள்ளன. அவர் தற்போது உத்தேசமாக மல்லிகே என்ற தலைப்பில் ஒரு புதிய நாடகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இசை ஆல்பங்கள்
தொகு2010 ஆம் ஆண்டில், இவர், குவேம்புவின் மாலேகல்லி மடுமகலு என்கிற இசைப்பாடலை, (மலைகளில் மணமகள்) 9 மணி நேர நாடகமாக மாற்றியமைத்தார்.[3] இதை, பிரபல நாடக இயக்குநரும் என்.எஸ்.டி முன்னாள் மாணவருமான சி.பசவலிங்கையா இயக்கினார் . இந்த நாடகம் பெங்களூர் மற்றும் மைசூரில் தலா 15 முறை அரங்கேற்றப்பட்டது, கிட்டத்தட்ட 60,000 பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
கோட்டகனஹள்ளி ராமையா மற்றும் கோலார் லட்சுமிபதி ஆகியோருடன் மனுஷ்ய ஜாதி தனொண்டே வலம் [4] என்கிற ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சிக்கான திரைக்கதையை இணைந்து எழுதியுள்ளார். புகழ்பெற்ற இசை இயக்குனர் ஹம்சலேகா இசையமைத்து, பசவலிங்கையா இயக்கிய இந்த நிகழ்ச்சி கர்நாடகாவில் 28 மாவட்டங்களில் அரங்கேற்றப்பட்டது.
அம்சலேகா இசையமைத்த கோலார் தேசி கோல்ட் [5] என்ற இசை ஆல்பத்தை அவர் தொகுத்துள்ளார். இந்த ஆல்பம் தெலுங்கு நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பாகும், அவை கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கைலாம்ப் (கே.ஒய்.என். காதல் பாடல்கள்),[6] இசை ஆல்பத்திற்கான பாடல்களை இவர் எழுதியுள்ளார்.[6] இதற்கு, இவரது மாணவர் அரவிந்தா எஸ்டி இசையமைத்துள்ளார். மேலும், பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறம் முதல் ஜாஸ் வரையிலான பாணிகளில் பிரபலமான பாடகர்களின் குழுவால் பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய தொகுப்பாக இந்த கைலாம்ப் இசை ஆல்பம் உள்ளது. .
கன்னட பேராசிரியராக, பெங்களூர் பல்கலைக்கழகத்திற்கான கன்னட உரையான சாகித்ய சம்வாதா -1 ஐ இவர், எழுதியுள்ளார்.
குறிப்புகள்
தொகு- ↑ "Kalavu". IMDb.com. பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
- ↑ "2005£ÉAiÀÄ ¸Á°£À §ºÀĪÀiÁ¤vÀ ¥ÀĸÀÛPÀUÀ¼ÀÄ" (PDF). Karnatakasahityaacademy.org. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Mujumdar, Neha (1 September 2013). "From Dusk to Dawn". The Caravan. Archived from the original on 9 September 2013. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
- ↑ [1]
- ↑ "Keeping the folk tradition alive". Newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
- ↑ 6.0 6.1 "Trio release music album for mentor". Newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.