கே. சி. எஸ். அருணாசலம்

தமிழ் எழுத்தாளர்

கே. சி. எஸ். அருணாசலம், ஒரு தமிழ்க் கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், திரைப்படப் பாடலாசிரியருமாவார். பல துறைகளில் ஈடுபட்டிருந்தாலும் கவிதைக்கு முக்கியத்துவம் அளித்தவர். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு பூர்வீக வாள். இவரது கவிதைகளில் குறிப்பிடத்தக்கவை, கவிதை என் கைவாள், பாட்டு வராத குயில் ஆகும். அருணாசலம் ஒரு மரபுக் கவிஞர். புதுக் கவிதைக்கு எதிரானவர் என்றாலும் புதுக்கவிதை படைப்பவர்களோடு நட்புடன் பழகியவர். பாதை தெரியுது பார் திரைப்படத்திற்காக இவர் எழுதிய சின்னச் சின்ன மூக்குத்தியாம் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.[1] 20 ஆண்டுகள் தாமரை இதழில் பணியாற்றினார். தனது இறுதி நாட்களில் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் தந்தை, நாச்சிமுத்துக் கவுண்டரின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்கினார். ஆனால் தொடங்கிய பணியை முடிக்கும் முன் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 55: காமராஜருக்கு அரசு நடத்திய கவியரங்கம்! - கவிஞர் முத்துலிங்கம் கே. சி. எஸ். அருணாசலம் பற்றிய குறிப்பு".

பாடிப் பறந்த குயில், தினமணி, அக்டோபர் 28, 2012

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._எஸ்._அருணாசலம்&oldid=4291525" இலிருந்து மீள்விக்கப்பட்டது