கே. சி. மானவேதான் ராஜா
கே.சி. மானவேதான் ராஜா (K. C. Manavedan Raja) இந்திய நாட்டினைச் சார்ந்த உயர் குடியாட்சி அலுவலரும் ஒரு நிர்வாகியும் ஆவார். மேன்மைமிகு கிழக்கே கோவிலகம் மானவேதான் ராஜா, சேரியனுசன் ராஜா என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். 1855 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு முதல் 1937 ஆம் ஆண்டு வரை கோழிக்கோட்டில் சமோரின் என்ற பெயரிலேயே வாழ்ந்தார்.
மானவேதான் ராஜா 1855 ஆம் ஆண்டில் கோழிக்கோடு சாமோரின் என்ற அரச குடும்பத்தில் கோட்டக்கல் கிளையில் பிறந்தார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, குடும்பத்தில் இருந்து முதல் நபராக மாகாண சிவில் சேவை பணியில் நுழைந்தார். 1880 ஆம் ஆண்டு சூன் மாதம் 4 ஆம் தேதியன்று சிவில் சேவையில் நியமிக்கப்பட்டார். 1882 ஆம் ஆண்டில் உதவி ஆட்சியராகவும், 1895 ஆம் ஆண்டுக்குள் துணை ஆட்சியராகவும் உயர்ந்தார். மாவட்ட ஆட்சியராகவும் பின்னர் நீதிபதியாகவும் பணியாற்றினார். [1] 1932 ஆம் ஆண்டில், இவர் கோழிக்கோட்டின் சாமூத்திரி அல்லது சமோரின் ஆனார்.
சமோரின் என்ற முறை
தொகுசமோரின் என்ற வகையில், மானவேதான் ராஜா தன்னை ஒரு திறமையான நிர்வாகி மற்றும் தொலைநோக்கு பார்வையுடையவர் என்பதை நிரூபித்தார். 1934 ஆம் ஆண்டில் இவரது ஆட்சிக் காலத்தில்தான் புகழ்பெற்ற குருவாயூர் சத்தியாகிரகம் நடந்தது. குருவாயூர் கோயிலை அனைத்து சாதியினருக்கும் திறந்து விட வேண்டும் என்று காந்தியவாதி கே. கேளப்பன் தலைமையில் மக்கள் பிரச்சாரம் செய்தனர். இந்த இயக்கத்திற்கு ஆதரவாக மகாத்மா காந்தியே கேரளாவுக்கு வந்து, குருவாயூர் கோயிலின் தலைமை நிர்வாகியாக இருந்த சமோரின் மானவேதான் ராஜாவை சந்தித்தார். இந்தப் பேச்சுக்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், பெரும் சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்க முடியாது என்று சமோரின் காந்தியிடம் கூறியதாக ஊகிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சத்தியாகிரகத்தை நிறுத்துமாறு கேளப்பனுக்கு காந்தி அறிவுறுத்தினார்.[2]
கோவிலகத்தில் குழந்தைகளின் கல்விக்காக கோட்டக்கலில் ராஜா உயர்நிலைப் பள்ளியை மானவேதான் ராஜா தொடங்கினார். தற்போது இப்பள்ளி கோழிக்கோட்டில் சமோரின் குருவாயூரப்பன் கல்லூரியாக செயல்படுகிறது. இக்கல்லூரியை கணிசமாக மேம்படுத்தி விரிவுபடுத்தினார். ராஜாவின் குழந்தைகள் நன்கு படித்தவர்கள் ஆவர். இவரது மூத்த மகன் மாவட்ட ஆட்சியர் ஆனார். இவரது நான்காவது மகன் மு. க. வெல்லோடி இந்திய சிவில் சேவையில் பணியில் சேர்ந்தார். பின்னர் அய்தராபாத் மாநிலத்தின் முதல் முதலமைச்சரானார். இங்கிலாந்துக்கான இந்தியாவின் முதல் உயர்ந்த வெல்லோடி ஆவார். பின்னர் இவர் அமைச்சரவை செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். [2] 1937 ஆம் ஆண்டில் மானவேதான் ராஜா மறைந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Great Britain India Office (1902). The India List and India Office List (in English). University of Wisconsin - Madison. Harrison and Sons.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 "K.C.R Raja » A Family Reunion". 2019-05-17. Archived from the original on 17 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-05-05.
- Raja, K. C. R. (3 November 2010). "A Family Reunion". Kcrraja.com. பார்க்கப்பட்ட நாள் 31 October 2011.
- Great Britain India Office (1905). The India List and India Office List. London: Harrison and Sons. p. 484.