கே. கேளப்பன்
இந்திய அரசியல்வாதி
கேளப்பன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் கல்வியாளரும் பத்திரிக்கையாளரும் ஆவார். இவர் கேரள நாயர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார் மேலும் இவர் கேரள காந்தி என்றும் அறியப் படுகிறார்.[1]
கேரளகாந்தி கே. கேளப்பன் | |
---|---|
பிறப்பு | கோயப்பள்ளி கேளப்பன் நாயர் 24 ஆகத்து 1889 முச்சுக்குண்ணு, கோழிக்கோடு |
இறப்பு | 7 அக்டோபர் 1971 கோழிக்கோடு, கேரளா | (அகவை 82)
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | கோயப்பள்ளி கேளப்பன் நாயர், கேரள காந்தி |
கல்வி | பட்டதாரி |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் |
பணி | விடுதலை வீரர், ஆசிரியர், Editor and Founder President of Nair Service Society |
அறியப்படுவது | இந்திய விடுதலை இயக்கம் |
பட்டம் | கேரள காந்தி |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் கிசான் மசுதூர் பிரஜா கட்சி |
வாழ்க்கைத் துணை | டி. பி. இலட்சுமி அம்மா |
பிள்ளைகள் | டி. பி. கே. கிதவ்(T P K Kidav) |
இவர் சாதி ஏற்றத்தாழ்வினைக் களையவும் தீண்டாமைக்கு எதிராகவும் இடையறாது பாடுபட்டார்.[2] கே. குமார் என்பவருடன் சேர்ந்து பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பின்னொட்டினை தன் பெயரில் இருந்து நீக்கியவர்களுள் கேரளத்தில் இவர் முதன்மையாவர்.[3]
விருதுகளும் பெருமைகளும்
தொகுஇவரது பணியைப் போற்றும் விதமாக 1990-ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை இவரது நினைவு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Freeindia > Biographies > Freedom Fighters > K. Kelappan". Freeindia.org. Sh. Kelappan Centenary State Committee Kerala. Archived from the original on 22 April 2003. பார்க்கப்பட்ட நாள் 1 February 2011.
- ↑ K. P. K. Menon (1972). The History of Freedom Movement in Kerala: (1885-1938) / by P.K.K. Menon. Government Press. p. 116.
- ↑ K. Kumarji Smaraka Grantham - 1974 - (K. C Pillai)
- ↑ K. Kelappan Commemorative Stamp பரணிடப்பட்டது 2018-12-06 at the வந்தவழி இயந்திரம். Indianpost.com. Retrieved on 2018-12-06.