கே. ஜி. ரமேஷ்

கே. ஜி. ரமேஷ் (K. G. Ramesh) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாட்டின் மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதியில் 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[1] இவரது தந்தையின் பெயர் எம். கோபால் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஜி._ரமேஷ்&oldid=3461284" இலிருந்து மீள்விக்கப்பட்டது