கே. ஜே. பேபி

மலையாள எழுத்தாளர்

கே. ஜே. பேபி (பிறப்பு: பெப்ரவரி 27, 1954) மலையாள எழுத்தாளர். காட்டையும் பழங்குடிகளின் வாழ்க்கையையும் பின்புலமாகக் கொண்டு முக்கியமான ஆக்கங்களை எழுதியவர். காட்டுமக்களிடையே சமூகசேவை செய்பவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

கேரளத்தில் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்தார். 1973 இல் அவரது குடும்பம் வயநாட்டில் குடியேறியது. நிலம் வாங்கி வேளாண்மை செய்ய ஆரம்பித்தது. பேபி ஆசிரியர் பயிற்சி முடித்தபின் வயநாட்டில் சிங்ஙோடு என்ற ஊரில் பழங்குடிகளுக்காக ’கனவு’ என்ற பேரில் ஒரு குருகுல முறை பள்ளியை நிறுவி நடத்தி வருகிறார். மனைவியின் பெயர் ஷெர்லி. இரு குழந்தைகள் உள்ளன.

படைப்புகள்

தொகு

நாடகங்கள்

தொகு
  • அபூர்ணா
  • நாட்டுகத்திகா

புதினங்கள்

தொகு
  • மாவேலிமன்றம்
  • பெஸ் புர்க்கானா

விருதுகள்

தொகு
  • 1994 கேரள சாகித்ய அக்காதமி விருது [மாவேலி மன்றம் நாவலுக்காக]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஜே._பேபி&oldid=697744" இலிருந்து மீள்விக்கப்பட்டது