கே. பி. அறிவானந்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கே. பி. அறிவானந்தம் என்பவர் தமிழ் நாடகத்துறைக் கலைஞர் மற்றும் எழுத்தாளர். 12 வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் எம். ஆர். ராதாவின் ரத்தக் கண்ணீர், தூக்கு மேடை ஆகிய நாடகங்களிலும் நடித்துள்ளார். உயிரின் விலை, இன்றைய உலகம், சிகரம், துறைமுகம், இதோ ஒரு மகாத்மா, சத்தியமே ஜெயம் தரும் என்பது போன்ற பல நாடகங்களை எழுதியிருக்கிறார். இவரின் “அவன் போட்ட முடிச்சு” என்ற நாடகம் 100 முறை நாடக மேடையில் வந்துள்ளது. இவரது நாடக இலக்கியப் பணியைப் பாராட்டி இவருக்கு 2012 ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்பட உள்ளது.