கே. வி. ஜெயஸ்ரீ

தமிழ் எழுத்தாளர்

கே. வி. ஜெயஸ்ரீ (K.V.Jayashree) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவர் குறிப்பாக மலையாளத்தில் இருந்து நவீன இலக்கியங்களை தமிழுக்கு மொழிபெயர்த்து நூல்களை எழுதிவருகிறார். தமிழிலக்கிய வரலாற்றில் இவரும் புதுமையான முறையில் நூல்களை மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இவரது எழுத்து முறை பழங்காலத்தினூடே கலந்து வருகிறது.

குடும்பம்

தொகு

கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாக கொண்ட வாசுதேவன், மாதவி இணையர், பிழைப்புக்காக தமிழ்நாட்டின், திருவண்ணாமலையில் குடியேறியவர்கள். இவர்களுக்கு பிறந்த மூன்று பெண் பிள்ளைகளில் ஜெயஸ்ரீயும் ஒருவர். தமிழ்நாட்டிலேயே படித்து வளர்ந்த இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொளக்குடி அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அரசியல் விமர்சகரும், மொழி பெயர்ப்பாளரும், எழுத்தாளருமான உத்திரகுமாரை திருமணம் செய்து கொண்டார். ஜெயஸ்ரீக்கு சுகானா என்ற மகள் உண்டு. சுகானாவும் எழுத்தாளராக, மொழிப்பெயர்ப்பாளராக உள்ளார்.[1]இவரது தங்கை கே. வி. சைலஜாவின் கணவர் வம்சி பதிப்பகத்தின் உரிமையாளரும், எழுத்தாளாருமான பவா செல்லத்துரை ஆவார்.

எழுத்துப் பணிகள்

தொகு

மலையாளத்தில் சங்க கால பாணர்களின் வாழ்க்கையைப் பறறி மனோஜ் குரூர் எழுதிய புதினமான நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற புதினத்தை கே. வி. ஜெயஸ்ரீ செய்த மொழிபெயர்ப்புக்காக 2020 பெப்ரவரியில் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார்.[2] [3] [4][5][6]

இவரின் மொழிபெயர்ப்புகள்

தொகு
  • இரண்டாம் குடியேற்றம்
  • பால் சக்கரியா கதைகள்
  • யேசு கதைகள்
  • அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்
  • வார்த்தைகள் கிடைக்காத தீவில்
  • ஹிமாலயம் (சிகரங்களினூடே ஒரு பயணம்)
  • இதுதான் என் பெயர்
  • பிரியாணி
  • ஒற்றைக் கதவு
  • நிசப்தம்
  • நிலம் பூத்து மலர்ந்த நாள்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._ஜெயஸ்ரீ&oldid=3386727" இலிருந்து மீள்விக்கப்பட்டது